Table of Contents
ஆன்லைன் திருமணம் பதிவு
தமிழ்நாட்டில் இப்பொழுது திருமண சான்றிதழ்கள் (ஆன்லைன் திருமணம் பதிவு) அப்ளை செய்து பெறுவது மிகவும் எளிமை படுத்தப்பட்டுள்ளது உங்களிடம் கம்ப்யூட்டர் லேப்டாப் அல்லது மொபைல் இருந்தால் போதும் பத்து நிமிடங்களில் நீங்களாகவே உங்களுடைய அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் திருமணத்தை ஆன்லைனில் எளிமையாக பதிவு செய்து விடலாம்.
👉🏼 திருமணம் பதிவு செய்துகொள்வது (ஆன்லைன் திருமணம் பதிவு)2009-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருமணத்தை ஆன்லைனில் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் மற்றும் தமிழில் திருமண சான்று பெறலாமா? அல்லது ஆங்கிலத்தில் திருமண சான்று பெறலாமா ? & திருமண சான்று ஆன்லைனில் விண்ணப்பிக்க எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது? என அணைத்து தகவல்களும் இங்கு தெளிவாக கொடுக்க பட்டுள்ளது.
இது போன்று பயனுள்ள மாநில அரசு திட்டங்கள், மத்திய அரசு திட்டங்கள், அரசு வேலைவாய்ப்புகள், தனியார் துறை வேலைவாய்ப்புகள் என அனைத்தையும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்கி வருகின்றோம் மேல குறிப்பிட்டுள்ள அணைத்து தகவலும் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் தமிழ் ஆங்கிலம் மற்றும் காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.
- தமிழில் படித்து பயன்பெற : DINGUMEDIA 🌐
- ENGLISH-ல் படித்து பயன்பெற : FindTNJobs 🌐
- காணொளி வடிவில் பார்த்து பயன்பெற : வீடியோ 📺
- 👉🏼 திருமணம் நடந்து 90 நாள்களுக்குள் ஆன்லைன் திருமணம் பதிவு விண்ணப்பிக்க வேண்டும். அதைக் கடந்துவிட்டால், அதற்கான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஆன்லைன் திருமணம் பதிவு முன்நிபந்தனை
- தேவையான ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன அவற்றை ஸ்கேன்(SCAN) செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
- கணவன், மனைவி மற்றும் சாட்சிகளின் ஆவணங்களும் விண்ணப்பிக்க தேவையான ஒன்று
- விண்ணப்ப கட்டணம் /அபராத தொகை செலுத்தவேண்டிருக்கும் பட்சத்தில் ஆன்லைன் வாங்கி பரிவர்த்தனை செய்யவேண்டி இருக்கும். (ONLINE TRANSCATION / ONLINE PAYMENT)
- 👉🏼 தமிழில் திருமண சான்று பெறலாமா? அல்லது ஆங்கிலத்தில் திருமண சான்று பெறலாமா ? உங்களது திருமண சான்று ஆங்கிலத்தில் இருந்தால் அணைத்து இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படும் (FOREIGN / STAMPING / VISA) . தமிழ்நாட்டிற்குள் மட்டும் பயன்படுத்த ஆன்லைன் திருமணம் பதிவுதமிழில் எடுத்துக்கொள்ளலாம்.
ஆன்லைன் திருமணம் பதிவு DOCUMENTS
ஆன்லைன் திருமணம் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் (பெயர், வயது, விலாசம், வங்கிக்கணக்கு & பாஸ்போர்ட்)கீழே கொடுக்கப்பட்டுள்ளன அவற்றை ஸ்கேன்(SCAN) செய்து வைத்துக்கொள்ளுங்கள். (கணவன், மனைவி மற்றும் சாட்சிகள்)விண்ணப்பிக்கும் பொழுது பதிவேற்றம் செய்ய தேவைப்படும்.
- ஆன்லைன் விண்ணப்பம் (DOWNLOAD)
- திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் (திருமண அழைப்பிதழ் /அதற்கான ரசீது),
- முகவரிச் சான்றுக்காக வாக்காளர் அட்டை,
- குடும்ப அட்டை, ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்,
- வயதுச் சான்றுக்காக பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் அல்லது குடும்ப அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்,
- சாட்சி கையொப்பம் இடும் மூன்று நபர்களின் அடையாள அட்டை,
- கணவன், மனைவி (மணமக்கள்) நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்.
- 👉🏼 திருமணப் பதிவு (ஆன்லைன் திருமணம் பதிவு) சந்தேகங்களுக்கு : 800 102 5174 (அரசு விடுமுறை நாள்கள் தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொள்ளலாம்)
ஆன்லைன் திருமணம் பதிவு How to Apply
- ✅ ஆன்லைன் திருமணம் பதிவு செய்ய அரசின் திருமண அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும் CLICK HERE
- ✅இதில் உங்களுக்கென்று ஒரு கணக்கை (SIGNUP / REGISTER NEW USER) உருவாக்க வேண்டும்.
- ✅பிறகு உங்கள் USER NAME & PASSWORD கொடுத்து உள்ளே சென்றதும், ரெஜிஸ்டர் தேர்வு செய்யவும் அதில் திருமண பதிவு CLICK செய்யவும்
- ✅கணவரின் விவரங்கள், மனைவியின் விவரங்கள், சாட்சியின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை பூர்த்தி செய்யவும்
- ✅கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இப்பொழுது பதிவேற்றம் (UPLOAD) செய்ய வேண்டும்
- ✅விண்ணப்பித்து முடித்தவுடன் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து, சில மணி நேரத்தில் உங்கள்க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அதில் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வர வேண்டிய தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
- ✅குறிப்பிடப்பட்ட தேதியில் உங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, ஒரிஜினல் ஆவணங்களுடன் கணவன், மனைவி மற்றும் சாட்சிகள்( மூன்று நபர்களுடன்) சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும்.
- ✅பிறகு உங்களிடம் ஒரு சீட்டு கொடுக்கப்படும்.
- ✅3 நாட்களுக்கு பிறகு அந்த சீட்டை கொண்டு சென்று உங்களின் திருமண சான்றை பெற்றுக்கொள்ளலாம்.
Join Our Telegram Group (Latest Job Updates) | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
பால்வாடி டீச்சர் வேலைவாய்ப்பு | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
ஆன்லைன் திருமணம் பதிவு, Online திருமண பதிவு 2022, 2022 online register marriage tamil, ஆன்லைன் பதிவு திருமணம்,திருமண பதிவு online, online திருமண பதிவு, திருமண சான்றிதழ், திருமண சான்றிதழ் விண்ணப்பம், பதிவு திருமணம் செய்ய தேவையான ஆவணங்கள், பதிவு திருமணம் செய்ய வயது, கலப்பு திருமண சான்றிதழ் பெறுவது எப்படி, கோவிலில் திருமணம் செய்வது எப்படி, முதல் திருமண சான்றிதழ், முதல் திருமண சான்றிதழ் படிவம், கலப்பு திருமண சான்றிதழ் படிவம், திருமண சான்றிதழ் பதிவிறக்கம், திருமண சான்றிதழ் பெறுவது எப்படி, முதல் திருமண சான்றிதழ் விண்ணப்பம் pdf,