Table of Contents
தமிழக அரசாங்கத்தின் சார்பில் பல மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் அட்டை UZHAVAR PATHUKAPPU THITTAM CARD வைத்திருப்போருக்கு தமிழக அரசாங்கத்தின் சார்பில் பல உதவிகள் கிடைக்கப் பெற்று வருகிறது. இந்த உழவர் அட்டைக்கு UZHAVAR CARD எப்படி விண்ணப்பிப்பது? (Uzavar Paathukappu Thittam APPLY) அதற்கான தகுதிகள் என்னென்ன ஆகியவை குறித்த அனைத்து தகவல்களையும் மேலும், உழவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக (BENEFITS OF UZHAVAR CARD ) நடைமுறையில் உள்ள உழவர் பாதுகாப்பு திட்டம் குறித்த அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம்.
இந்த பதிவின் முக்கிய அம்சங்கள் :
- உழவர் பாதுகாப்பு அட்டை வகைகள்
- உழவர் பாதுகாப்பு அட்டை பெரும் நபர்கள்
- இந்த அட்டையின் மூலம் யாரெல்லாம் பயன் பெறலாம்
- என்னென்ன உதவிகள் கிடைக்கும்
- உறுப்பினர்களுக்கான உதவிகள்
- உறுப்பினரை சார்ந்தவர்களுக்கு உதவிகள்
- உழவர் பாதுகாப்பு அட்டை ELIGIBLITY
- இந்த அட்டை பெற தகுதியான விவசாயத் தொழில்கள்
- உறுப்பினரை சார்ந்து இருப்பவர் யார்?
- எப்படி அப்ளை செய்வது?
- தேவையான ஆவணங்கள்
மேல கொடுக்கப்பட்டுள்ள உழவர் பாதுகாப்பு அட்டை தலைப்புகள் பற்றி விரிவாக பின்வருமாறு காணலாம்.
உழவர் பாதுகாப்புத் திட்டம் 2022 வகைகள்
Chief Minister Uzavar Paathukappu Thittam (CMUPT) உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் இரண்டுவிதமான நிறங்களில் அட்டைகள் CMUPT CARD வழங்கப்படுகிறது.
- MARRON (CMUPT CARD)– குடும்பத் தலைவருக்கு
- GREY(CMUPT CARD)– குடும்பத் தலைவரை சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு
2005 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உழவர் பாதுகாப்புத் திட்டம் 2011ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது அதனடிப்படையில் Uzavar Paathukappu Thittam in Tamil திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களும் பின்வருமாறு காணலாம்.
உழவர் பாதுகாப்புத் திட்டம் 2022
BENEFICIARIES OF CHIEF MINISTER’S UZHAVAR PAATHUKAPPU THITTAM :
- விவசாயத் தொழிலாளர்கள்
- சிறு மற்றும் குறு விவசாயிகள்
- மற்றும் அவரது குடும்பத்தினர்
USES OF UZHAVAR PATHUKAPPU THITTAM
உழவர் பாதுகாப்பு அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமல்லாமல் அவரை சார்ந்திருப்போருக்கும் சில உதவிகள் கிடைக்கப் பெறுகிறது. யார் யாருக்கு என்னென்ன உதவிகள் கிடைக்கும் என்பதை பின்வருமாறு காணலாம் .
உறுப்பினர்களுக்கான உதவிகள்:
-
- திருமண உதவித்தொகை
- மகப்பேறு உதவித்தொகை
- முதியோர் ஓய்வூதியம்
- விபத்து மரணம் மற்றும் காயம்
- இயற்கை மரணம்
- ஈமச்சடங்கு செலவு
உறுப்பினரை சார்ந்தவர்களுக்கு உதவிகள்:
-
- கல்வி உதவித்தொகை
- திருமண உதவித்தொகை
ELIGIBLITY FOR UZHAVAR PATHUKAPPU THITTAM CARD
- 2.50 ஏக்கருக்கு மேற்படாத நன்செய் நிலத்தை அல்லது
- 5 ஏக்கருக்கு மேற்படாத புஞ்சை நிலத்தை சொந்தமாக வைத்திருப்போர் அல்லது
- அந்த நிலத்தில் நேரடியாக பயிர் செய்யும் 18 முதல் 65 வரை உள்ள அனைத்து ஒரு சிறு விவசாயிகள்
- விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் ஊதியத்திற்காக அல்லது குத்தகை அடிப்படையில் ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 65 வரை உள்ள அனைத்து தொழிலாளர்கள் இத்திட்டத்தில் இணைந்து கொண்டு தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அரசாங்க உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
உழவர் பாதுகாப்புத் திட்டம் 2022
இந்த அட்டை பெற தகுதியான விவசாயத் தொழில்கள்?
- தோட்டக்கலை
- பட்டுப்புழு வளர்ப்பு
- பயிர் வளர்த்தல்
- புல் வளர்த்தல்
- தோட்ட விளைபொருள்
- பால் பண்ணை
- கோழிப் பண்ணை
- கால்நடை வளர்ப்பு
- மரங்களை வளர்த்தல்
- உள்ளூர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவர்
- குடியானவர் தனது நிலத்தில் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியையோ மேய்ச்சலுக்காக பயன்படுத்துதல்.
- உர வகையான பயிர்களை வளர்க்கும் நோக்கத்திற்காக நிலத்தை பயன்படுத்துதல்.
உழவர் பாதுகாப்புத் திட்டம் 2022 உறுப்பினரை சார்ந்து இருப்பவர் யார்?
- மனைவி அல்லது கணவன்
- குழந்தைகள்
- இறந்து விட்ட அவருடைய மனைவி (விதவை மருமகள்) மற்றும் குழந்தைகள்
- பெற்றோர்.
உழவர் பாதுகாப்புத் திட்டம் 2022 நிதிஉதவிகள் :
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு அட்டை வைத்திருக்கும் நபருக்கு 6 விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அவை குறித்த விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அட்டை வைத்திருப்பவரின் நலனுக்காக பின்வரும் நிதி பங்களிப்பு அரசாங்கம் சார்பாக வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகைகள் உழவர் அட்டை வைத்திருக்கும் நபருக்கும் அவரை சார்ந்து இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகிறது.
உழவர் பாதுகாப்புத் திட்டம் 2022 எப்படி அப்ளை செய்வது?
UZHAVAR PATHUKAPPU CARD பாதுகாப்பு அட்டை பெற நினைப்பவர்கள் ஒரு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் இணைத்து உங்கள் பகுதி வி.ஏ.ஓ அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்-உழவர் பாதுகாப்புத் திட்டம் 2022
- ஆதார் கார்டு
- போட்டோ
- ரேஷன் கார்டு
- பேங்க் புக்
இந்த திட்டம் குறித்த அனைத்து அடிப்படை தகவலையும் (UZHAVAR PATHUKAPPU THITTAM DETAILS IN TAMIL) இப்பொழுது கண்டோம். மேலும் இத்திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள YOUTUBE LINK- ஐ கிளிக் செய்யவும்.
I studied in BE so i whant education helping amount
I have applay for this scem