Skip to content
Home » குறிப்பிட்ட ’பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை. -Surya || Surya Answered to Anbumani Ramados

குறிப்பிட்ட ’பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை. -Surya || Surya Answered to Anbumani Ramados

 சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பாராட்டுகளை குவித்து வரும் ஜெய் பீம் படத்தின் சில காட்சிகள் வன்னியர்களை அவமதிப்பதாகவும் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யாவிற்கு ஒரு நீண்ட நெடிய கடிதத்தை எழுதி இருந்தார் .அக்கடிதத்தில் சூர்யாவிற்கு ஒன்பது கேள்விகளை அவர் முன்வைத்திருந்தார்..

அந்த கேள்விகளுக்கு சூர்யாவின் பதில் என்னவாக இருக்கும் என்று பொது மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில் இன்று சூரியா அதற்கான விளக்கத்தை தன் ஒருபக்க கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக சூர்யா வெளியிட்டிருக்கும் அறிக்கை பின் வருமாறு:

மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு,

வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். 


என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி.  

நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், ‘அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது’ என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில்  சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச  முயற்சித்திருக்கிறோம்.

கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி  சரி செய்யப்பட்டதைத்  தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.

‘படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை’என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன். அதேபோல,  ‘படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும்’என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ‘இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்கிற அறிவிப்பைப் படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம்.

எளிய மக்களின் நலன்மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும், அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை. 


உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு. படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை,  குறிப்பிட்ட ’பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார்.  எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாக  கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், ‘பெயர் அரசியலால்’ மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது.

READ ALSO  நகை கடன் தள்ளுபடி 2021 || Nagai kadan thallupadi news today | Nagai kadan thallupadi | Gold lone thallupadi | Nagai kadan 2021

சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி.

அன்புடன்,

சூர்யா


அன்புமணி ராமதாஸின் காட்டமான கேள்விகளுக்கு சூர்யாவின் இந்த விளக்கங்கள் நாகரிகமாகவும் தெளிவாகவும்  இருக்கிறது. மேலும் அவர் எந்தவித மன்னிப்பும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் இதோடு முற்று பெறும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.


Topics Related

jai bhim controversy vanniyar, jai bhim meaning, jai bhim trailer, jai bhim controversy twitter, jai bhim chandru, jai bhim real characters photos, jai bhim collection, jai bhim income, ‘Vanniyars hurt over Jai Bhim’ ,  jai bhim realstory characters, jai bhim real story chandru, jai bhim real story case,jai bhim real story police, jai bhim real story rajakannu, jai bhimreal story police name, jai bhim real story tamil, jai bhimreal incident, jai bhim real case history, jai bhim real story characters,jai bhim real incident, jai bhim real story chandru, jai bhim realstory police, jai bhim real story tamil, jai bhim real story case,jai bhim real story rajakannu, jai bhim real characters photos, jaibhim real life characters, jai bhim real case history, jai bhimreal incident, jai bhim real case name, jai bhim real storypolice, jai bhim real story chandru, sengani jai bhim actress,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *