Skip to content
Home » தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் 2021 || Stalin New Schemes in Tamil ||Stalin New Announcement 2021

தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் 2021 || Stalin New Schemes in Tamil ||Stalin New Announcement 2021

 Hello Viewers,

 நம் அனைவருக்கும் தெரியும் நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் பதவி ஏற்றது முதல் இன்று வரை திமுகவின் சில முக்கிய நடவடிக்கைகள் என்னவென்று தெளிவாக இதில் காண்போம்.


 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்  எனும் நான்

என்று கூறி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் தற்போதைய முதல்வர், திரு மு ஸ்டாலின் அவர் பொறுப்பேற்ற பிறகு மக்களின் எதிர்பார்ப்பு அவரின் முதல் கையெழுத்து பற்றி அனைவரும் அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தனர், இதனை அடுத்து 5 கோப்புகளில் திரு ஸ்டாலின் அவர்கள் தனது முதல் கையெழுத்தை போட்டார், அவை என்னவென்று இதில் தெளிவாக பார்ப்போம்.

# Corona நிவாரணத்தொகை ரூபாய் 4000 வழங்கப்படும் அதில் ரூபாய் இரண்டாயிரம் நடப்பு மாதத்தில் வழங்க உத்தரவிட்டார்.

#  பெண்களுக்கு பேருந்துகளில் பயணம் செய்ய கட்டணமில்லா பயணச் சலுகை அறிவித்தார் மு ஸ்டாலின் இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் திருநங்கைகளுக்கும் இது பொருந்தும் என்று அறிவித்திருந்தார் இதில் எடுத்து பெண்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றது.

 #  ஆவின் பால் விலையை குறைக்க திரு ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டார் அதன்படி ஆவின் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் விலை குறைப்பு செய்யப்பட்டது.

 #  உங்கள் தொகுதியில் முதலமைச்சர் இன்னும் திட்டத்தின்கீழ் அதற்கென தனியான ஒரு துறையை உருவாக்கி அதிகாரிகளை நியமனம் செய்து, தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னிடம் வழங்கப்பட்ட மனுக்கள் அனைத்தையும் இரண்டு மாதத்திற்குள் தீர்வுக்கான உத்தரவிட்டுள்ளார்.

 #  இந்த கூடிய Corona காலகட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மருத்துவமனைகளில் (Private Hospital ) அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் Corona சிகிச்சை செலவை மொத்தமாக அரசு ஏற்கும் என்று ஆணை பிறப்பித்தார் இது அனைவரின் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றது காரணம் இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணமே ஆகும்.

 இந்த ஐந்து முக்கியமான உத்தரவுகள் உத்தரவுகள் திரு ஸ்டாலின் அவர்கள் முதல் நாள் முதல் கையெழுத்து போட்டு தனது முதல்வர் பதவி பணியை தொடங்கினார் அதன் பிறகு தமிழ்நாடு அரசு என்னென்ன திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் செயல்படுத்தி உள்ளன என்பதை விரிவாக காண்போம்.

 

25 லட்சம் ரூபாய் இழப்பீடு

Corona நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். Corona நோய் மிகத் தீவிரமாக பரவி வரும் இந்த நாளில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் முன்கள பணியாளர்களாக அரும்பணியாற்றிய காவல்துறை மற்றும் மருத்துவர்களுக்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். இவர்களுக்கு இழப்பீடாக வழங்கும் 25 லட்சம் ரூபாய் அவர்கள் குடும்பத்திற்கு ஒரு சிறு உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் திரு ஸ்டாலின் அவர்கள் இந்த ஆணையை பிறப்பித்துள்ளார்.

READ ALSO  New Pradhan Mantri Awaas Yojana 2.0 details in tamil || New Pradhan Mantri Awaas Yojana 2.0 tamil

Corona தடுப்பூசி இறக்குமதி செய்ய ஆணை :

திரு மு ஸ்டாலின் அவர்கள் பிறப்பித்துள்ள இந்த ஆணை இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடிய Corona காலகட்டத்தில் மக்களை காப்பாற்ற நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பயன்படும் தடுப்பூசிகளை உலகளாவிய நிறுவனங்களோடு ஒப்பந்தப்புள்ளிகள்(Contract ) மூலம் தமிழ் நாட்டிற்கு இறக்குமதி செய்ய ஆணை பிறப்பித்துள்ளார். இது மட்டுமில்லாமல் ஆக்சிஜன் ,மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் உருவாக்கும் ஆராய்ச்சி கூடங்கள் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் தொடங்குமாறு மருத்துவத் துறை நிறுவனங்களுக்கு தமிழ் நாட்டின் சார்பாக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார் இந்தத் திட்டம் மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

அனைத்து கட்சி கூட்டம்:

நோய்தொற்று அதிகமாக பரவுவதைத் தடுப்பதற்கு அனைத்து கட்சிகளையும் ஒன்றாகக் கூட்டி கூட்டமொன்றை நடத்த முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்து அதன்படி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது சென்ற முறை அதிமுக அமைச்சராக இருந்த திரு விஜயபாஸ்கர் போன்ற பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கினார். இந்தக் கூட்டமானது அனைத்து கட்சிகளும் பாகுபாடுகள் இன்றி ஒற்றுமையாக செயல்பட்டு இந்த இக்கட்டான சூழ்நிலையை வெற்றிகரமாக கடந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்!

இந்த இக்கட்டன சூழ்நிலையில் நலத் திட்டங்களை செயல்படுத்தவும் மக்களை பாதுகாக்கவும் தமிழக அரசுக்கு தமிழக மக்கள் தங்களால் முடிந்த நிதி வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை விடுத்தார்

இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா ,கார்த்திக் மற்றும் சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடி நிதி வழங்கினார். இதனைத்தொடர்ந்து ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பெரும்பான்மையான நடிகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களால் முடிந்த தொகையை தமிழக அரசிற்கு வழங்கி வருகின்றனர். நீங்களும் உங்களால் முடிந்த தொகையை முதலமைச்சர் நீதிக்கு நேரடியாக நீங்கள் வங்கியின் மூலமாக செலுத்தலாம் அதற்கான வங்கிக் கணக்கு மற்றும் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெயர் : Indian Overseas Bank

கணக்கு எண் : 117201000000070

IFSC Code : IOBA0001172

MICR code :600020061

CMPRF PAN : AAAGC0038F

 

For paying money through PhonePe, Google Pay, PayTM, Amazon Pay, and Mobikwik,  the UPI VPA ID: [email protected]

 

புதிய கல்விக் கொள்கை புறக்கணிப்பு :

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மோடியின் தலைமையிலான மத்திய அரசு ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்த திட்டமிட்டு உள்ளது தமிழ்நாட்டில் இப்போது புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும் எதிர்த்தும் மத்திய அரசால் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறும்போது இது மாநில சுயாட்சியின் சுதந்திரத்தை தடுப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

READ ALSO  FREE GAS SCHEME IN TAMIL 2022 || Pradhan Mantri Ujjwala Yojana 2022

 Remdesivir தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக வினியோகம் :

இந்த Corona நோயினால் பாதிக்கப் படாமல் இருப்பதற்கு செலுத்தப்படும் Remdesivir  மருந்துகளை தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக வினியோகம் செய்வது என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான முடிவு எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக இந்த மருந்துகள் விற்பனை செய்ய தொடங்கப்பட்டது. இது உண்மையிலே பாராட்டப்படவேண்டிய நல்ல முடிவு.

7 பேர் விடுதலை செய்ய வேண்டும் என்று குடியரசு தலைவர்க்கு ஸ்டாலின் கடிதம்:

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த பேரறிவாளன் சாந்தன் முருகன் நளினி உட்பட ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தது அப்போதைய அரசு. அவர்கள் பல ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால் இவர்கள் ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவிடும்படி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். பலமுறை ஆட்சிமாற்றம் வந்தபோதிலும் இவர்கள் இன்னும் சிறையில் உள்ளனர். இம்முறையாவது விடுதலை செய்யப்படுவார்களா?  பொறுத்திருந்து பார்ப்போம்.

 

கி.ரா அவர்களுக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும்.

புகழ்பெற்ற எழுத்தாளர் கி.ரா எனப்படும் கி.ராஜநாராயணன் அவர்கள் உடல்நலக் கோளாறு காரணமாக மரணம் அடைந்தார். இதனையொட்டி அவருக்கு தமிழக அரசு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. எழுத்தாளருக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது இதுவே முதல் முறை. அதுமட்டுமில்லாமல் அவரின் சொந்த ஊரான கோவில்பட்டியில் தமிழக அரசின் சார்பில் அவருக்கு சிலை வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் படித்த இடைசேவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதுப்பிக்கப்பட்டு அவரின் புகைப்படங்கள் அங்கு வைக்கப்படும் என்றும் திரு ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *