Skip to content
Home » தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வேலைவாய்ப்பு 2022 || TNPSC EXAM 2022 Syllabus || TNPSC Group 2 Exam Date 2022 || TNPSC Group 2 2022 Full Details

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வேலைவாய்ப்பு 2022 || TNPSC EXAM 2022 Syllabus || TNPSC Group 2 Exam Date 2022 || TNPSC Group 2 2022 Full Details

 TNPSC EXAM 2022 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திமிருந்து 2022ஆம் ஆண்டுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2A (TNPSC Group 2 and group 2A ) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது

.

கொரோனா பெருந்தொற்றின்  காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு தேர்வுகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடத்தப்படும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தற்பொழுது  TNPSC GROUP 2 AND GROUP 2A ,2022 (குரூப்-2 ஏ மற்றும் குரூப் 2 விற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருக்கிறது)

இந்த அறிவிப்பில் இருக்கும் மிக முக்கிய தகவல்களை பின் வருமாறு விரிவாக காணலாம். 

முக்கிய தகவல்கள் :

  • தேர்வு நடத்தும் நிறுவனம்– தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 
  • தேர்வு -டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a 
  • காலி பணியிடங்கள்–  5529
  • பணி -தமிழ்நாடு அரசுப் பணி 
  • தேர்வு நடைபெறும் நாள் -21 மே 2022
  • விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் – 23 பிப்ரவரி 2022 முதல் 23 மார்ச் 2022 வரை 
  • தேர்வின் முறை -மாநில அளவிலான தேர்வு
  •  மொழி– தமிழ் மற்றும் ஆங்கிலம
  •  சம்பளம்– 36,900-1,35,100
  • தேர்வுமுறை -ஆஃப்லைன் 
  • அதிகாரப்பூர்வ இணையதளம்– www. tnpsc.gov.in
  • டிஎன்பிஎஸ்சி தொடர்பு எண் -044 253 328 33

 

தேர்வு நாட்கள்:

TNPSC GROUP 2 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ,2022 ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி  தேர்வு காலண்டர் வெளியிடப்பட்டிருந்தது.

 அந்த அட்டவணையின் படி, குரூப் 2 தேர்வுக்கான Preliminary Exam( பிரிலிமினரி எக்ஸாம் ) முதல்நிலைத்தேர்வு 21 மே 2022 அன்று நடத்தப்பட உள்ளது.

 அதில் குறிப்பிட்ட மதிப்பெண்களைப் பெற்று தேர்வானவர்களுக்கு நடத்தப்படும் அடுத்த நிலை தேர்வான மெயின் எக்ஸாம் Main exam ஆனது  செப்டம்பர் 2022 நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தேர்வு கட்டணம்: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அப்ளை செய்ய ஆன்லைனில் அப்ளிகேஷன் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அப்படி ஆன்லைனில் அப்ளை செய்யும்போது டெபிட் கார்டு ,கிரெடிட் கார்ட் அல்லது இன்டர்நெட் பேங்கிங் மூலம் பின்வரும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் 

காலிப் பணி இடங்கள்:

 டிஎன்பிஎஸ்சி Group 2 & Group 2A மொத்தம் 5529 காலிப் பணி இடங்கள் உள்ள நிலையில், இதில் 116 பதவிகள் Group 2 எனவும்,

 5413 பதவிகள் Group 2A எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.

TNPSC GROUP 2 ,TNPSC GROUP 2a வித்தியாசம் என்ன ?

Group 2 என்பது (INTERVIEW POST) நேர்முகத் தேர்வினை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் தேர்வாகும். 

Group 2A  என்பது நான் இன்டர்வியூ போஸ்ட் (NON INTERVIEW POST)என்று அழைக்கப்படுகிறது இதில் எந்தவிதமான  நேர்முகத் தேர்வும் நடத்தப்பட மாட்டாது.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2 நேர்முகத் தேர்வு பணிகள் மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள் டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை 23. 3. 2022 க்குள் இணையவழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. 

காலிப் பணியிடங்களின் விவரங்கள்:

READ ALSO  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு (TNSTC ) || TNSTC recruitment 2022 || tnstc recruitment 2021 latest news || TNSTC VACANCY

 குரூப்-2 :

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர் முதலிய பதவிகளுக்கு மொத்தம் 116 காலி பணியிடங்கள் உள்ளன 

Group 2A நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் முதலிய பதவிகளுக்கு மொத்தம் 5413 காலிப்பணியிடங்கள் உள்ளன.

 முக்கிய நாட்கள் :

அறிவிப்பு  வெளியான நாள்: 23. 2. 2022

 இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான 

கடைசி நாள்: 23.3.2022

 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 21.5. 2022 

முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும்.

 வயது வரம்பு :

அனைத்துப் பதவிகளுக்கும் குறைந்தபட்ச வயது வரம்பு -18, அதிகபட்ச வயது வரம்பு -35

 சார்பதிவாளர் நிலை 2 குறைந்தபட்ச வயது வரம்பு -20,அதிகபட்ச வயது வரம்பு -32 

நன்னடத்தை அலுவலர் குறைந்தபட்ச வயது- 22 அதிகபட்ச வயது- 32 விதிகளுக்குட்பட்டு வயதுவரம்பில் தளர்வு அறிவிக்கப்படும்

 

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் .

பதவிகளை பொருத்து சில நேரங்களில் கல்வித்தகுதி மாறுபடும் .

சில பதவிகளுக்கு உடல் தகுதி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

தேர்வுக் கட்டணம்:

ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேஷன்: 150 /-

முதல்நிலைத் தேர்வு: 100 /-

மெயின் எழுத்துத்தேர்வு: 150 /-

தேர்வு கட்டண சலுகை

1. ஆதிதிராவிடர்/ ஆதிதிராவிட அருந்ததியர்: கட்டணம் செலுத்த தேவையில்லை.

2. பழங்குடியினர்: கட்டணம் செலுத்த தேவையில்லை

 3.மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: மூன்று முறை மட்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை.

4. இஸ்லாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் :மூன்று முறை மட்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை.

5. முன்னாள் ராணுவத்தினர் :இரண்டு முறை மட்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

6. நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் :கட்டணம் செலுத்த தேவையில்லை.

7. ஆதரவற்ற விதவைகள்: கட்டணம் செலுத்த தேவையில்லை

 

தேர்வுத் திட்டம்:

 முதல் நிலை தேர்வு (கொள்குறி வகை)

 பொதுத்தமிழ் (பத்தாம் வகுப்பு தரத்தில்) :100 கேள்விகள்

 பொதுஅறிவு: 75 கேள்விகள் 

மனக்கணக்கு நுண்ணறிவும்( பத்தாம் வகுப்பு தரம்): 25 கேள்விகள் 

மொத்தம் 200 வினாக்கள் 

கால அளவு 3 மணிநேரம்

அதிகபட்ச மதிப்பெண் 300 

அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 90

(அல்லது)

 பொது ஆங்கிலம்:( பத்தாம் வகுப்பு தரத்தில்) 100 கேள்விகள்

 பொதுஅறிவு: பட்டப்படிப்பு தரத்தை 75 கேள்விகள்

மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்பு தரத்தில்) 25 கேள்விகள் 

மொத்தம் 200 வினாக்கள்

 கால அளவு 3மணி நேரம் 

அதிகபட்ச மதிப்பெண் 300 

அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 90

பாடத்திட்டம்:

 TNPSC GROUP2 மற்றும் GROUP 2A பாடத்திட்டங்கள் சில ஆண்டுகளுக்கு முன் திருத்தி அமைக்கப்பட்டது. குரூப்-2 தேர்வை பொருத்தவரை எழுத்துத் தேர்வு, இரண்டு கட்டங்களாக நடைபெறும்.இந்த இரண்டு கட்டங்களுக்கு தயாராகி வருபவர்கள் டிஎன்பிஎஸ்சி ஆல் வழங்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை தெரிந்து வைத்திருப்பது மிக முக்கியம். பாடத்திட்டங்கள் டிஎன்பிஎஸ்சி இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2A க்கான பாடத்திட்டங்களை தெரிந்துகொள்ள TNPSC GROUP 2,2A SYLLABUS CLICK செய்யவும். விண்ணப்பிப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இரு மொழிகளில் தேர்வு( தமிழ் மற்றும் ஆங்கிலம்) எழுதலாம் என்ற வகையில் தமிழ் மற்றும் ஆங்கில பாடத்திட்டங்கள் தனித்தனியே இந்த PDF உள்ளது. 

READ ALSO  Infosys jobs for freshers 2021 || Infosys, infosys recruitment 2021 || infosys recruitment 2021 in Tamil || Latest jobs in Tamil || infosys interview || infosys hiring 2021

 தேர்வு மையங்கள்:

  • சென்னை 
  • சிதம்பரம்
  • கோயம்புத்தூர் 
  • காஞ்சிபுரம் 
  • காரைக்குடி
  • மதுரை
  • நாகர்கோயில்
  • புதுக்கோட்டை
  • ராமநாதபுரம் 
  • சேலம்
  • தஞ்சாவூர் 
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • உதகமண்டலம்
  • வேலூர்
  • கிருஷ்ணகிரி
  • விழுப்புரம்
  • ஈரோடு 
  • நாகப்பட்டினம்
  • திண்டுக்கல் 

 விண்ணப்பிக்கும் முறை:

1. விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய  இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

2. எந்த தேர்விற்கும் விண்ணப்பிப்பதற்கு முன்பு ஆதார் மூலம் முதல் ஒரு முரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

3. ஒருமுறை பதிவில் பதிவேற்றம் செய்ய விண்ணப்பதாரர்கள் தங்கள் புகைப்படம் கையப்பம் ஆகியவற்றை சிடி /டிவிடி /பென் ட்ரைவ் போன்ற ஏதேனும் ஒன்றில் பதிவு செய்து தயாராக வைத்திருக்க வேண்டும்.

4. ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட ஒருமுறை பதிவு கணக்கை உருவாக்க அனுமதி இல்லை.

5. ஒருமுறை பதிவு என்பது எந்த ஒரு பதவிக்கு விண்ணப்பம் அல்ல.

6. இது விண்ணப்பதாரர்களின் விவரங்களை பெற்று அவர்களுக்கு ஒன்றினை உருவாக்க மட்டுமே பயன்படும்.

7. விண்ணப்பதாரர்கள் அறிக்கையில் அப்ளை APPLY என்ற உள்ளீடு வழியே நிரந்தர பயனாளர் குறியீடு மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

8. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியின் பெயரை தெரிவு செய்ய வேண்டும்.

9. புகைப்படம் குறிப்பிட்ட ஆவணங்கள் மற்றும் கையொப்பம் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 

பதிவேற்ற வேண்டிய ஆவணங்கள்:

1. விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட விவரங்களை உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ் .

2. தங்களின் கல்வித்தகுதி குறித்த சான்றிதழ் 

3. புகைப்படம் 

4. கையப்பம் 

5. நிரந்தர வீட்டு முகவரி ஆகிய விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்

 

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 23.3. 2022 இரவு 11.59 

இந்த தேர்வு குறித்த  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள டிஎன்பிஎஸ்சி ஆல் வெளியிடப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ நோட்டிபிகேஷன் காணவும். இந்த தேர்விற்கு தயாராகிவரும் அனைவருக்கும் DINGU MEDIA  சார்பாக தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 மேலும் இது போன்ற பயனுள்ள அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்துகொள்ள டிங்கு மீடியா இணையதளத்தை தொடர்ந்து வாசிக்கவும். 


IMPORTANT LINKS:

OFFICIAL NOTIFICATIONS : CLICK HERE

TO APPLY CLICK HERE

TNPSC SYLLABUS : CLICK HERE


RELATED TOPICS: 

tnpsc group 2 syllabus 2022, tnpsc group 2 posts 2022, tnpsc group 2 posts 2022, tnpsc group 2 exam date 2022, tnpsc group 2 posts pdf 2022, tnpsc group 2 posts and eligibility 2022, tnpsc group 2 2022, tnpsc group 2 syllabus 2022, tnpsc group 2 exam date 2022, tnpsc group 2 posts 2022, tnpsc group 2 posts and eligibility 2022, tnpsc group 2 2022, tnpsc group 2 posts pdf 2022, tnpsc group 2 exam date 2022, tnpsc group 2 exam date 2022 syllabus, tnpsc group 4 exam date 2022, tnpsc group 2a exam date 2022 notification, tnpsc group 2 exam date 2022 apply online, tnpsc group 2 syllabus group 2 exam qualification, group 2 application last date 2022, tnpsc group 2 posts, tnpsc group 2 new syllabus books pdf in tamil, tnpsc group 2 syllabus 2022 tamil medium pdf, www.tnpsc.gov.in 2022, group 2 syllabus in tamil, tnpsc group 2 question paper, group 2 syllabus 2022 pdf in english, tnpsc group 2 exam date 2022, tnpsc group 2 2a syllabus 2022 in tamil, tnpsc group 2 exam notification 2022, tnpsc group 2 exam notification, tnpsc group 2 exam date, tnpsc group 2, tnpsc group 2 exam date 2022, tnpsc group 2 exam, tnpsc group 2 exam details in tamil 2021, tnpsc group 2 exam date, tnpsc group 2 exam date 2021 latest news, tnpsc group 2 exam pattern in tamil, tnpsc group 2 exam details in tamil 2022, tnpsc group 2 exam pattern, tnpsc group 2 exam qualification in tamil , tnpsc group 2 exam notification 2022 , tnpsc group 2 , tnpsc group 2 syllabus , tnpsc group 2 preparation , tnpsc group 4 syllabus 2022 in tamil , tnpsc group 2 notification 2022 , tnpsc group 2 salary in tamil , tnpsc group 2 posts and salary details , tnpsc latest news today in tamil 2022 , latest tnpsc news in tamil, #latesttnpscnews #tnpscgroup2 #tngovtjobs #latesttnpscupdates

Leave a Reply

Your email address will not be published.