தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருவாரூர் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிக்கு எழுத்தர்,உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.இந்த பணிக்கு மொத்தம் 72 காலி பணியிடங்கள் உள்ளது.
2. இதற்கான கல்வித்தகுதி பிஎஸ்சி (இளங்கலை அறிவியல்) படித்திருந்தால் போதும்.
3. வயது வரம்பை பொருத்தவரை ஓபிசி வகுப்பை சேர்ந்தவர்கள் 32 வயதுக்குள், எம் பி சி, பிசி வகுப்பை சேர்ந்தவர்கள் 34 வயதுக்குள், எஸ் சி மற்றும் எஸ் டி வகுப்பை சேர்ந்தவர்கள் 37 வயதுக்குள்ளும் இருந்தாள் விண்ணப்பிக்கலாம்.
4.இந்தப் வேலைக்கான அடிப்படையில் ஊதியமாக 6500 அகவிலைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதவுபவர்:
1.இந்த பணிக்கு மொத்தம் 67 காலி பணியிடங்கள் உள்ளன.
2. கல்வித்தகுதி பொருத்தவரை பிளஸ்-2 தேர்ச்சி அடைந்து இருந்தால் போதும்.
3. வயது வரம்பு ஓசி வகுப்பை சேர்ந்தவர்கள் 32 வயதுக்குள்ளும்,பி சி மற்றும் எம்பிசி வகுப்பை சேர்ந்தவர்கள் 34 வயதுக்குள்ளும் எஸ்சி எஸ்டி வகுப்பினர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்
4.ஊதியமாக 6,400 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காவலர்:
1.காவலர் பணியை பொறுத்தவரை மொத்தம் 296 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
2. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்தால் போதும்.
3. வயது வரம்பை பொருத்தவரை ஓசி வாகுப்பை சேர்ந்தவர்கள் 32 வயதிற்குள்ளும், பிசி மற்றும் எம்பிசி வகுப்பை சேர்ந்தவர்கள் 34 வயதுக்குள்ளும் எஸ்சி மற்றும் எஸ்டி வகுப்பை சேர்ந்தவர்கள் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
4.ஊதியமாக 6,400 ரூபாய் அகவிலைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட மூன்று பணிகளுக்கும் திருவாரூர் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட தகுதி உடைய ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்களுக்கு உரிய சான்றிதழ்களுடன்
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்,
மன்னார்குடி சாலை,
விளமல்,
திருவாரூர்.
என்ற முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்கள் 5 .11. 2021 மாலை 5 மணிக்குள் வந்து சேரும் படி பார்த்துக் கொள்ளவும்.
இந்த வேலை தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள youtube லிங்கை கிளிக் செய்யவும்.