திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் கல்வி கற்பதை ஊக்குவிக்க, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் 8.11.2021 அன்று ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2019- 2020 ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்து முதலாம் ஆண்டு தேர்வில் அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்சம் 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுள்ள ஒரு திருநங்கை மற்றும் ஒரு திருநம்பி மாணவர்களுக்கு, மாணவர் உதவித் தொகையாக தலா 1,00,000/- மற்றும் ஒரு சவரன் மதிப்பிலான தங்க பதக்கம்( Gold medal) வழங்கப்பட உள்ளது.
இதற்கான தகுதிகள்:
1. திருநங்கை மற்றும் திருநம்பி தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
2. அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
3. பன்னிரண்டாம் வகுப்பில் குறைந்தபட்சம் 40 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
4. மாணவர்கள் அரசு, அரசு உதவிபெறும் நகராட்சி, மாநகராட்சி, ஆதரவற்றோர் பள்ளிகளில் படித்தவர்களாக இருத்தல் வேண்டும்.
5. இளங்கலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
6. அரசு கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேற்காணும் தகுதியுடைய மாணவர்கள் இந்த மாணவர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்க நினைக்கும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் உரிய ஆவணங்களுடன் 24.11.2021 மாலை 5 மணிக்குள்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம், பழைய கட்டிடம்,
அறை எண் 5.
என்ற அலுவலகத்தில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ஜி. எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.
உங்களுக்குத் தெரிந்த திருநங்கை மற்றும் திரு நம்பிக்கு இந்த தகவலை உடனே தெரியப்படுத்தவும்.
இந்த உதவித் தொகை குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள youtube லிங்கை கிளிக் செய்யவும்
வேலை வாய்ப்பிலும் கல்வியிலும் திருநங்கைகளுக்கும், திருநம்பிகளுக்கும் எண்ணற்ற உதவிகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் அரசு வேலை வாய்ப்பில் 1% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இது போன்று மத்திய அரசு வேலைகளுக்கும், மற்ற மாநில அரசு வேலைகளுக்கும் ரிசர்வேஷன் வழங்கப்பட்டால் இதுவரை சமூகத்தால் பல இன்னல்களை சந்தித்து வந்த அவர்கள் நிலையும் உயரும் என்பதில் ஐயமில்லை.
ஒரு காலத்தில் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த இவர்கள் மெல்ல சமூகத்தின் ஒரு அங்கமாக மாற பெரும்பான்மையினரால் பல முன்னெடுப்புகள் எடுக்கப்படுகிறது.
அவற்றில் மிக முக்கியமானதும், அவசியமானதுமான கல்வி சார்ந்த சலுகைகள் அவர்களின் சமூக நிலையை social status – ஐ உயர்த்தும் என்று நம்பப்படுகிறது.
ஆகையால் இந்த உதவித்தொகை போன்ற பிற அரசாங்க நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வில் உயரிய நிலையை இவர்கள் எட்ட வேண்டும் என்பதே முற்போக்காளர்களின் எண்ணம்.
Related Topics