அனைவருக்கும் வணக்கம்,
தமிழக மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசாங்கத்தின் நான் முதல்வர் திட்டம்:
தமிழக அரசாங்கத்தின் சார்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி பல நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி தொடர்பான தகவல்களை எளிதில் பெறும் வகையில் நான் முதல்வன் எனும் திட்டத்தை தமிழக அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்வி கடன், உயர் படிப்புகள் மேலும் வேலைவாய்ப்பு குறித்த உடனடி தகவல்களை நான் முதல்வன் என்னும் இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம் .
நான் முதல்வன் website,
இந்த இணையதளத்தில் என்ன இருக்கிறது?
நான் முதல்வன் இணைய முகப்பில் 2000 மேற்பட்ட கல்வி நிறுவனங்களும் அந்த நிறுவனங்கள் வாயிலாக பெறக்கூடிய 300 க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் மாணவர்களின் நலனுக்காக இருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கான உதவித்தொகைகளின் முழு விவரங்களும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். ஏழை எளிய மாணவர்கள் குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி அரசாங்கம் இந்த திட்டத்தை துவங்கி இருக்கிறது. இந்த திட்டம் குறித்த மேலும் தகவல்களை பின்வருமாறு காணலாம்.
naan mudhalvan tnschools gov in,
யார் யார் பயனடையலாம் ?
9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தங்கள் கல்வி தொடர்பான அனைத்து விதமான தகவல்களையும் பெற முடியும். தமிழக அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் நடைமுறையில் உள்ள உதவித்தொகை, மாணவர்களுக்கான கடன்கள், பயிற்சிகள், நுழைவுத் தேர்வுகள் குறித்த அனைத்து தகவல்களையும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
naan mudhalvan scheme website,
எப்படி இணைவது?
மாணவர்கள் தங்கள் பள்ளியில் வழங்கப்பட்டிருக்கும் EMIS எண் கொண்டு செய்ய LOGIN செய்ய வேண்டும். இந்த இணையதளத்தில் இடதுபுறத்திலுள்ள LOGIN பட்டனை கிளிக் செய்து அதில் மாணவர்களுக்கான EMIS எண் மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து லாகின் செய்து கொள்ளலாம்.
naanmudhalvan tn schools gov in,
மொழி
இந்த இணையதளத்தின் தகவல்கள் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் உள்ள தகவல்களை மாணவர்கள் தங்கள் விருப்ப மொழியில் படித்து தெரிந்து கொள்ள முடியும்.
naanmudhalvan tnschools gov in,
என்னென்ன தகவல்கள் உள்ளன?
இந்த இணையதளத்தில் மாணவர்களுக்கான.
- படிப்புகள்
- கல்லூரிகள்
- நுழைவுத் தேர்வுகள்
- உதவித்தொகைகள்
- கல்விக்கடன்
- வேலைவாய்ப்பு
முதலிய தலைப்புகளின் கீழ் எண்ணற்ற தகவல்கள் உள்ளன.
naan mudhalvan tnschools gov in login,
உயர் படிப்புகள்:
பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் வகையில்,
- பிஎஸ்சி உயர் மருத்துவ அறிவியல் ,
- எம்பிபிஎஸ்,
- பிஏ உளவியல்,
- ஊரக வளர்ச்சி மற்றும் கிராமப்புற படிப்பு,
- பிஎஸ்சி உயிர் வேதியியல்,
- சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை,
- தகவல் தொழில்நுட்பம்,
- பிஏ வரலாறு,
- பிடிஎஸ்
முதலிய கல்லூரி படிப்புகள் குறித்தான முழு விவரங்களும் இந்த இணையதளத்தில் உள்ளது.
naan mudhalvan gov in,
நுழைவுத் தேர்வுகள்:
நுழைவுத் தேர்வுகளை பொருத்தவரையில்,
- NID வடிவமைப்பு இயல் பரிதல் தேர்வு,
- இந்திய அறிவியல் நிறுவனம் ISI பெங்களூர் நுழைவுத்தேர்வு,
- NIFTதேசிய நாகரீக ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவன தேர்வு,
- BITTS நுழைவுத்தேர்வு,
- JEE முதன்மைத் தேர்வு,
- நீட் தேர்வு ,
- இளநிலை வடிவமைப்பு படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு UCEED,
- தேசிய பாதுகாப்பு அகாடமி தேசிய பாதுகாப்பு மற்றும் கடற்படை தேர்வு, இளநிலை அறிவியல் ஆராய்ச்சி படிப்பு,
- அகில இந்திய சட்ட நுழைவுத்தேர்வு,
- AILET இளநிலை அறிவியல் ஆராய்ச்சி படிப்பு,
முதலிய தேர்வுகள் குறித்த முக்கிய தகவல்களான விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, விண்ணப்ப படிவம், விண்ணப்பிப்பவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் போன்றஅனைத்து விவரங்களும் இந்த இணையதளத்தில் காணலாம்.
naan mudhalvan tnschools gov in,
உதவித்தொகைகள்:
- பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடி மாணவர்களுக்கான உதவித்தொகைகள்,
- கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மத்திய அரசின் உதவித் தொகை,
- சிறுபான்மை தொழில் மற்றும் தொழில் வளர்ச்சி உதவித்தொகை, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் உதவித்தொகை,
- Kishore Vaigyanik Protsahan Yojana Exam ,
- ஒரே பெண் குழந்தைகளுக்கான இந்திராகாந்தி முதுநிலை கல்வி உதவித்தொகை,
போன்ற பல உதவித் தொகைகள் குறித்த தகவல்களை இந்த இணையதளத்தில் மாணவர்களின் பார்வைக்கு உள்ளது.
naan mudhalvan scheme website,
உதவி மைய எண்:
மாணவர்கள் தங்கள் உயர்கல்வி குறித்தான ஆலோசனைகள் இலவசமாக பெற 144117 என்ற அரசாங்கத்தின் இலவச என்னை அழைத்து, தங்களது சந்தேகங்களை நான் முதல்வன் இணையதளத்தில் கேட்டறிந்து உதவிகள் பெறலாம்.
naan mudhalvan website,
விண்ணப்ப படிவங்கள்:
நான் முதல்வன் இணையதளத்தில் காணப்படும் அனைத்து விதமான உதவித்தொகை மற்றும் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் தரவிறக்கம் செய்து கொள்ள மாணவர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசாங்கத்தின் நான் முதல்வர் திட்டம் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டோம். இந்த இணையதளத்தின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து நம் ( Dingu Media ) வலைப்பக்கத்தை பின்தொடரவும்.
RELATED TOPICS
Pingback: TAMILNADU KALVI FELLOWSHIP FULL DETAILS - DINGU MEDIA
Pingback: Tamil Nadu Education Fellowship (TNEF) - DINGU MEDIA
Pingback: தமிழக அரசின் வேலைவாய்ப்பு 2022 || Tamilaga Arasu Velaivaippu 2022 || TAMILNADU ARASU VELAIVAIPPU || TNSDC VELAIVAIPPU 2022 - DINGU MEDIA
Pingback: TNSDC RECRUITMENT 2022 || TAMILNADU ARASU VELAIVAIPPU || Tamil Nadu Skill Development Corporation - Find TN Jobs
I want job
I musthaq BE Civil complete