அனைவருக்கும் வணக்கம்,
பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து வெளிவந்து இருக்கக்கூடிய வேலைவாய்ப்பு (Punjab National Bank Tamilnadu jobs 2022) நோட்டிபிகேஷன்- ல் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை விரிவாக இப்பொழுது காணலாம்.
முன்னணி பொதுத் துறை நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கி தமிழகத்தில் கீழே குறிப்பிட்டுள்ள மாவட்டத்தை உறைவிடமாகக் கொண்ட இந்திய குடிமக்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி வட்டாரத்திலுள்ளஅதன் கிளைகளுக்கு பகுதிநேர கடைநிலை துப்புரவு தொழிலாளர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
மேலே குறிப்பிட்டுள்ள அட்டவணையில் செவித்திறன் குறைபாடு மற்றும் எலும்பு தொடர்பான குறைபாடு உடையவர்கள் இரு பிரிவினருக்கும் தலா ஒரு புள்ளிகள் உள்ளடங்கும்.
வயது வரம்பில் தளர்வு: (Punjab National Bank Tamilnadu jobs 2022)
01/07/2021-ன் படி வயதுவரம்பு தகுதி குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 24.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் ஐந்து வருடங்கள் தளர்வு.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாற்றுத்திறனாளிகள் எலும்பு தொடர்பான குறைபாடு உடைய விண்ணப்பதாரர்களுக்கு 15 வருடங்கள்
இதர பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பதாரர்களுக்கு மூன்று வருடங்கள்
இதர பிற்படுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் எலும்பு தொடர்பு குறைபாடு உடைய விண்ணப்பதாரர்களுக்கு 13 வருடங்கள்
பொதுப்பிரிவில் மாற்றுத்திறனாளிகள் எலும்பு தொடர்பான குறைபாடு உடைய விண்ணப்பதாரர்களுக்கு 10 வருடங்கள் தளர்வு அளிக்கப்படும்.
இதர பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பொதுவான காலியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பில் தளர்வு கிடையாது.
அரசனைகளில் குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அன்றி அனைத்து அதிகபட்ச வயது வரம்பு தளர்வு சேர்த்து 45 வருடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி(Punjab National Bank Tamilnadu jobs 2022) :
01/07/2021-ன் படி குறைந்தபட்ச தகுதி கிடையாது அதிகபட்சமாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க கூடாது கல்வி பயிலாதவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே.
முக்கியமானவை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அந்த மாவட்டத்தை சார்ந்தவர்களாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை (How To apply Punjab National Bank Tamilnadu jobs 2022)
மேற்குறிப்பிட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுடன் தங்களின் விண்ணப்பத்தை தக்கவாறு கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்
- பெயர்
- தகப்பனார் பெயர்
- பிறந்த தேதி
- வயது
- கல்வித்தகுதி
- தேர்ச்சி பெற்ற ஆண்டு பற்றிய விவரங்கள்
- தற்சமயம் ஏதேனும் படிப்பை கற்றிருந்தால் அதன் பற்றிய விவரங்கள்
- ஜாதி பிரிவு மதம்
- விலாசம்
- நிரந்தர விலாசம்
- வசிப்பிடம்
- கிராமம்
- வட்டம்
- மாவட்டம்
- தெரிந்த மொழிகள்
- கைபேசி தொலைபேசி எண்
- மின்னஞ்சல் முகவரி
- தற்போது செய்து வரும் பணி பற்றிய விவரங்கள்
- விண்ணப்பிக்க உள்ள பணி தொடர்பான ஏதேனும் கூடுதல் விவரங்கள்
விண்ணப்பத்தை மேற்குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்: (Punjab National Bank Tamilnadu jobs 2022)
- கேந்திரிய சைனிக் வாரிய செயலகம் (முன்னாள் ராணுவத்தினராக இருப்பின்)
- வேலைவாய்ப்பு அலுவலக அட்டை பதிவு செய்திருப்பின்
- விண்ணப்பத்தில் வலது மூலையில் பாஸ்போர்ட் புகைப்படம்
- பள்ளி மாற்றுச் சான்றிதழ் கல்வித் தகுதிக்கான சான்றிதழின் நகல்கள் கடைசியாக தேர்ச்சி பெற்ற தேர்வின் மதிப்பெண் பட்டியல்
- சாதிசான்றிதழ் மற்றும் சமீபத்திய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ்
- இருப்பிட முகவரி நகல்
- அடையாள சான்றிதழ் மற்றும் இதர தொடர்புடைய ஆவணங்கள்
- முன்னாள் ராணுவத்தினராக இருப்பின் பணிஓய்வு சான்றிதழ்
- பொருளாதாரத்தில் நனைந்தவர்கள் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகளால் வழங்கப்பட்ட சம்பளம் பெற்றதற்கான சான்றிதழ்
- பார்வைத்திறன் அற்றவர்கள் /எலும்பு தொடர்பான குறைபாடு உடையவர்கள் என மருத்துவ சான்றிதழ்.
- அனைத்து வகைகளிலும் முற்றிலும் நிரப்பப்பட்டு உரிய முறையில் கையொப்பம் இட வேண்டும்.
- குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களும் இணைத்து 03.01.2022 அன்று அல்லது அதற்கு முன்போ வங்கி அலுவலகத்தை அடைந்திருக்க வேண்டும் .
- இத்தேதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் முழுமையாக நிராகரிக்கப்படும்.
- தகுதியற்ற/தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாமல் இருக்கும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
- தன் மாவட்ட வசிப்பிடம் இன்றி பிற மாவட்ட வசிப்பிடங்களில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
- பணியாட்கள் வங்கியின் வழிகாட்டுதலின்படி தெரிவுசெய்யப்படுவர்.
- பணியாற்ற தேர்வில் வங்கியின் முடிவே இறுதியானது.
- ஒப்புதல் பெற்ற விண்ணப்பதாரரின் பெயர்கள் எங்கள் வங்கி கிளை அறிவிப்பு பலகையில் பார்வைக்கு வைக்கப்படும்.
இது போன்ற அரசாங்க நலத்திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்தான தகவல்களை தெரிந்து கொள்ள, DINGU MEDIA யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
.
- YOUTUBE VIDEO : CLICK HERE
- OFFICIAL WEBSITE : CLICK HERE
- OFFICIAL NOTIFICATION : CLICK HERE