ஷாருக்கான் மகன் ஆரியன் கான் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது பாலிவுட் திரை உலகினர் மத்தியில் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு சுஷாந்த் சிங் ராஜ்புட் இறந்தபொழுது பாலிவுட்டில் பரவலாக போதைப் பொருள் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்ற சர்ச்சை எழுந்தது இந்த வகையில் ஆரியன் கானின் கைதானது அந்த சந்தேகங்களை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஆரியன் கான் கோவாவில் வைத்து ஒரு குரூஸ் கப்பலில் நண்பர்களுடன் NCB எனப்படும் norcatics control bureau வினாரால் அக்டோபர் 2ம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு பெயில் மறுக்கப்பட்ட நிலையில், அவருடன் இருந்த நபர்களிடம் தீவிர விசாரணையை NCB மேற்கொண்டு வருகிறது
இதில் கவனிக்க வேண்டிய மற்றுமொரு விஷயமானது, சார்பாக இந்த வழக்கை சதீஷ் மணிஷிண்டே எனும் பாலிவுட்டின் ஆஸ்தான வக்கீல் கையில் எடுத்திருக்கிறார். இவர் 1993ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவராக கருதப்பட்ட சஞ்சய்தத் வழக்கையும், சல்மான்கானின் வழக்கையும், சுஷாந்த் சிங் கொலை மற்றும் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ரியா சக்கரவர்த்தியின் வழக்கையும் வாதிட்டு வெற்றி கண்டவர் ஆவார்.
சல்மான்கான் தற்பொழுது சதீஷ் மணிஷின்டேவை தன் மகனின் சார்பாக வாதாட நியமித்திருப்பது ஆரியன் கானுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகங்களுக்கு வலு சேர்த்திருக்கிறது.
today news, tamil news, tamil latest news, shahrukh khan son news, tamil trending news, 2021 news tamil, important news, shahrukh khan son arrest tamil