தமிழக அரசாங்கத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி குரூப் எக்ஸாம் நடத்தப்படும்.
சில சமயங்களில் குரூப் எக்ஸாம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் பொழுது அந்தந்த மாவட்டத்தில் உள்ள சில காலி பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அதிகாரம் அந்த மாவட்ட அதிகாரிகளுக்கு உண்டு.
இப்படி காலியாக உள்ள தமிழக அரசாங்க வேலைகளை எப்படி தெரிந்து கொள்வது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
உங்கள் மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை தெரிந்து கொள்ளுங்கள் (உங்கள் மாவட்டத்தின் பெயர். Nic.in) என டைப் செய்து Google search செய்யவும்.
உதாரணததிற்கு நீங்கள் சென்னையில் வசிப்பவராக இருந்தால், சென்னையில் காலியாக உள்ள தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கவும் அந்த காலி பணியிடங்களுக்கான நோட்டிபிகேஷன் ஐ பார்க்கவும் chennai.nic.in என search செய்யவும்.
அப்படி செய்தால், சென்னை மாவட்டத்திலுள்ள தமிழக அரசு வேலைகளுக்கான நோட்டிபிகேஷன் ஐ பார்க்க முடியும்.
அரசு வேலை குறித்த தகவல்கள் மட்டுமல்லாமல், கொரோனா தடுப்பூசி சம்பந்தமான தகவல்களும், இரத்த தான முகாம் குறித்த தகவல்களும், ஏனைய அரசு சார்ந்த முக்கியமான அறிவிப்புகளையும் நீங்கள் இந்த website – ல் பார்க்க முடியும்.
இது போல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் ஆபீஷியல் வெப்சைட் உள்ளது.
ஒரு வேலை அந்த மாவட்டத்தில் ஏதேனும் காலிப்பணியிடங்கள் இருந்தால், அது குறித்த தகவல்களை பதிவேற்றி இருப்பார்கள்.
அங்கு நீங்கள் அந்த வேலை குறித்த ஆபீஷியல் நோடிஃபிகேஷன் டவுன்லோட் செய்து, இந்த வேலை குறித்த அடிப்படை தகவல்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட வாரியாக உள்ள காலிப்பணியிடங்களை தெரிந்துகொள்வது குறித்த கூடுதல் தகவல்களுக்கு இந்த youtube லிங்கை கிளிக் செய்யவும்.
இது போன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள Dingue media# youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
நன்றி.
Dingu Media
Topics Discussed