தமிழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு ( PhD) படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கு இதுநாள்வரை வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை இரட்டிப்பாக உயர்த்தி தமிழக அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
scholarship for phd students in tamilnadu 2020
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அரசாங்கம் பல சமூக நீதி முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதில் அம்மாணவர்களுக்காக வழங்கப்படும் இட ஒதுக்கீடு மற்றும் கல்வி ஊக்கத் தொகையும் அடங்கும்.
tamil nadu phd scholarship 2021
2013 – 2014ஆம் கல்வியாண்டு முதல் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
scholarship for phd students in india 2021
இதன் காரணமாக அதற்குப் பிந்தைய கல்வி ஆண்டுகளில் பிஎச்டி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது.
tamil nadu government phd fellowship
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் பிஎச்டி படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத் தொகையை 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
sc/st scholarship for phd students in tamilnadu
உதவித்தொகைக்காக இதுவரை ஒதுக்கப்பட்டு வந்த 6 கோடி ரூபாயானது 16 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
phd scholarship for bc students in tamilnadu
இந்த அறிவிப்பின் காரணமாக ஒவ்வொரு வருடமும் 1600 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
scholarship for college students
மேலும் ,இந்த உதவித்தொகை பெறுவதற்கு முக்கியமான தகுதியாக கருதப்படும் மாணவரின் அதிகபட்ச குடும்ப வருமானத்தை 8 லட்சம் ரூபாயாக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
scholarship for college students in tamilnadu 2021
முடிந்தவரை இந்த தகவல் உங்களுக்குத் தெரிந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியரை சென்று சேரும்படி பகிரவும்.
OFFICIAL WEBSITE : CLICK HERE
APPLICATION FORM : CLICK HERE
OFFICIAL NOTIFICATION : CLICK HERE
YOUTUBE VIDEO LINK : CLICK HERE
யார் விண்ணப்பிக்கலாம்?
1. தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் முழுநேர முனைவர் பட்டம் (PhD) படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2. பகுதிநேர ஆராய்ச்சி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
3. விண்ணப்பிப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவராக இருக்க வேண்டும்.
4. மாணவரது குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
5. விண்ணப்பிக்கும் மாணவர்கள் முதுகலை பட்டப் படிப்பில் 50 % விழுக்காடு பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. இந்த கல்வியாண்டில் 1600 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
7. மாணவருக்கு பல்கலைக்கழகத்தால் அனுமதிக்கப்பட்ட பிரிவு கால அளவிற்கு மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும்.
8. முதல் வருட ஊக்கத்தொகையானது மாணவர் பெற்றிருக்கும் முதுகலை பட்டப் படிப்பின் மதிப்பெண்களை கொண்டே வழங்கப்படும். இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டிற்கான ஊக்கத்தொகையானது மாணவர் பயிலும் கல்வி நிறுவனத்தின் துறைத் தலைவர் (HOD) மற்றும் ஆராய்ச்சி வழிகாட்டி அலுவலரின் (GUIDE) சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
மேற்கூறிய தகுதிகள் இருக்கும் மாணவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
மொத்தம் 2 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் முதல் விண்ணப்பத்தை மாணவரும் இரண்டாம் விண்ணப்பத்தை, மாணவர் பயிலும் கல்வி நிறுவனத்தின் துறை தலைவரும் பூர்த்தி செய்து, இந்த இரண்டு விண்ணப்பங்களையும் ஒன்றாக தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முகவரி:
ஆதிதிராவிட மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி,
ஆணையர்,
ஆதிதிராவிடர் நலத்துறை, சேப்பாக்கம்,
சென்னை-600005
பழங்குடியின மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குனர்,
பழங்குடியினர் நலத்துறை, சேப்பாக்கம்,
சென்னை-600005
Related Topics :
No proper advaticement , no time gap given .only application rejected