இனி கவலை வேண்டாம்.!! முதல் 48 மணிநேர சிகிச்சை செலவுகளை அரசே ஏற்கும் – தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின்.
சில தினங்களுக்கு முன் தமிழக தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கான முதல் 48 மணி நேரம் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான செலவுகளை தமிழக அரசாங்கமே ஏற்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மருத்துவத்துறை, சாலைபாதுகாப்புத் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை போன்ற முக்கியமான துறைகளின் நிபுணர்களைக் கொண்டு இந்த ஆய்வு கூட்டமானது தலைமைச்செயலகத்தில் நடத்தப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்தும், சாலை உயிரிழப்புகளை குறைப்பது குறித்தும், விபத்துகளை குறைப்பதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், சாலை போக்குவரத்தை மேம்படுத்தவும், சாலை விபத்துக்களுக்கான சிறப்பு சட்டங்கள் இயற்றுவது குறித்தும் புதிய தொழில்நுட்பங்களை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இன்னிலையில், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான முதல் 48 மணி நேர சிகிச்சை முழுவதையும் தமிழக அரசாங்கமே வழங்கும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
பொதுவாக, சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களை எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைகளில் கொண்டு சேர்த்து சிகிச்சையை துவங்குகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்களின் உயிர் காப்பாற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.
சில நேரங்களில் மருத்துவ செலவுகளை கணக்கில் கொண்டு பாதிக்கப்பட்டவரை அரசு மருத்துவமனையில் மட்டுமே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது.
இனி ‘நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் விபத்துக்கான சிகிச்சை செலவுகளை தமிழக அரசாங்கம் ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் 609 மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும், இந்த மருத்துவமனைகளில் 81 விதமான சிகிச்சைகள் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த திட்டத்திற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தத் திட்டமானது முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் இணைக்கப்படும் என்றும் தமிழக தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்துறை நிபுணர்களை இணைத்து Road safety authority (சாலை பாதுகாப்பு ஆணையம்) உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மக்களின் நலன் கருதி தமிழக அரசாங்கம் மேற்கொண்டு இருக்கும் இந்த நடவடிக்கையானது பல உயிர்களை காப்பாற்றும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
இந்த திட்டம் குறித்த விரிவான தகவலை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள YouTube லிங்கை கிளிக் செய்யவும்.
YouTube Video Link : Click Here
மேலும் மாணவர்களின் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ குறித்து தெரிந்து கொள்ள, click here
Related Topics