தமிழக மக்களுக்கு பயனுள்ள ஒரு வலிமை அப்டேட்டை தமிழக அரசாங்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கட்டுமான பொருட்களின் விலை ஏறி வரும் சூழ்நிலையில், அரசின் சார்பாக “வலிமை” என்ற பெயரில் சிமெண்ட் ஓரிரு வாரங்களில் விற்பனைக்கு வர உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2021,மார்ச் ரூபாய் 450 விற்கப்பட்ட தனியார் சிமெண்ட் விலை பின்னர் 490 ரூபாய்க்கு உயர்ந்தது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனியார் சிமென்ட் உற்பத்தியாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் 20 ரூபாய் சிமெண்ட் விலை குறைப்பதாக உடன்பாடு எட்டப்பட்டது.
தொடர்ந்து ஏறி வரும் சிமெண்ட் விலையை குறைக்கும் நோக்கத்தில் “வலிமை” என்னும் பெயரில் தமிழக அரசின் டான்சென் நிறுவனம் சிமெண்ட் உற்பத்தி செய்ய இருக்கிறது.
ஏற்கனவே 90 ஆயிரம் மெட்ரிக் டன் சிமெண்ட் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது மேலும் 30 ஆயிரம் மெட்ரிக் டன் சிமெண்ட் வலிமை என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது.
அரசாங்கத்தின் இந்த சிமெண்ட் விற்பனைக்கு வந்தால் தனியார் நிறுவனங்களும் தங்களின் விலையை குறைக்க வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது.
பொதுமக்களுக்கும், கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்கும் அரசாங்கத்தில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
மேலும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விலையில் குறைந்திருந்தாலும் சிமெண்டின் தரத்தில் எந்தவித சமரசமும் இருக்காது என்று அறிவித்துள்ளார்.
தற்போது அம்மா சிமெண்ட் நடைமுறையில் இருந்தாலும் அது பலருக்கு சரியாக சென்று சேராமல் இருக்கிறது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள வலிமை சிமெண்டின் புழக்கம் அதிகமாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வலிமை சிமெண்ட் தொடர்பான மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
YouTube Link : Click Here
Keywords:
#ValimaiCement
#GovtCement
#TNgovtCement
Valimai Cement Mulu thagaval || Valimai Cement Price || Government Cement Price || valimai cement Dealership || Tancem ||Valimai Cement How much || Valimai Cement rate || How to Buy Valimai Cement