Home » விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் தார்ப்பாய்கள் Government Scheme Tamil || AGRI FARMERS SUBSIDY LOAN Scheme Tn Tamil Nadu Govt | Tn Agriculture Vivasayam Loan
விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் தார்ப்பாய்கள் Government Scheme Tamil || AGRI FARMERS SUBSIDY LOAN Scheme Tn Tamil Nadu Govt | Tn Agriculture Vivasayam Loan
விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசாங்கம் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் இந்த வேளையில் குறுவை நெல் சாகுபடி நிறைவடைந்து பயிர்களுக்கான கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
அப்படி கொள்முதல் செய்யப்படும் பயிர்கள் பல இடங்களில் மழையில் நனைந்து பாழாகும் செய்தியை நாம் அவ்வப்போது கேட்டு வருகிறோம் .
இந்தத் துயரிலிருந்து தமிழக விவசாயிகளை காப்பாற்றுவதற்கான ஒரு திட்டத்தை தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்துடன் விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க தார்ப்பாய்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் கூறியதாவது “தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் தொடர் மழை பெய்து வரும் காரணத்தால் குறுவை சாகுபடி முடிந்து கொள்முதலுக்கு தயாராக இருக்கும் பயிர்களை பாதுகாக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதனடிப்படையில் நடப்பாண்டில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 1100 தார்ப்பாய்கள் 50% மானிய விலையில் வழங்கப்பட உள்ளது” என்று அறிவித்தார்.
மேலும் இந்த திட்டத்தில் பயன்பெற மேலாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலமாக தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்றும் ஆட்சியர் அவர்கள் அறிவித்தார்.
தற்போது தஞ்சை மாவட்டத்திற்கு அறிவிப்பு வெளி வந்திருக்கும் நிலையில் தமிழகத்தின் இன்ன பிற மாவட்டங்களுக்கும் இத்தகைய அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் உங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள வேளாண் மற்றும் உழவர் துறையையோ அல்லது வேளான் உதவி இயக்குனரையோ சந்தித்து இந்த திட்டம் பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தத் திட்டம் குறித்து கூடுதல் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள youtube லிங்கை கிளிக் செய்யவும்.
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து கொள்வது தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள youtube லிங்கை கிளிக் செய்யவும்.