தமிழகத்தில்
- 1.மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்
- 2.டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்.
- 3. ஈவேரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம்.
- 4. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம்
- 5.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் என 5 திருமண நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் பற்றிய தகவல்களை இப்பொழுது காணலாம்.
சாதி,மத ,இன வேறுபாடுகளைக் களைந்து சாதி மறுப்பு திருமணங்கள் செய்தவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 1967ஆம் ஆண்டு இந்த திட்டம் அமலாக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் பயனடைய ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியரில் ஒருவர் பட்டியலின/ பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கலாவும் மற்றொருவர் வேறு வகுப்பை சேர்ந்தவராவும் இருக்க வேண்டும்.
அல்லது ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் வழங்கப்படும் நிதி உதவியானது மணப்பெண்ணின் கல்வித்தகுதியை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.
மணப்பெண் பட்டப்படிப்பு படித்து இருந்தால் 30 ஆயிரம் காசோலையாகவும் 20 ஆயிரம் சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும்.
இதனுடன் தாலிக்காக 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்.
பட்டப்படிப்பு படிக்காத பெண்களுக்கு ரூபாய் 15,000 காசோலையாகவும் ரூபாய் 10000 சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும். இதனுடன் தாலிக்காக 8 கிராம் தங்கம் வழங்கப்படும்.
குறிப்பாக இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் மணப்பெண்ணுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
மேலும், ஆண்டு வருமான உச்ச வரம்பு எதுவும் கிடையாது.
விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள்..
- 1. திருமண பதிவு சான்றிதழ்
- 2.மணமகன் மற்றும் மணமகள் ஜாதி சான்றிதழ் 3.மணமகன் மற்றும் மணமகளின் வயது சான்றிதழ் 4.படிப்பு முடித்து இருந்தால் அதற்கான சான்றிதழ்
- 5.ஆதார் கார்டு
- 6. பேங்க் பாஸ்புக் நகல்
திட்டத்தில் விண்ணப்பிக்க,
1.மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலும்
2. நகராட்சி பகுதியில் வசிப்பவர்கள் நகராட்சி ஆணையர் அலுவலகத்திலும்
3.ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அலுவலகத்திலும்
4.கிராமப்புற பகுதிகளில் வசிப்பவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்
5.தவிர மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன அங்கு மேற் கூறிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கவும்.
இந்த நிதியாண்டில் மட்டும் தாலிக்கு தங்கம் வழங்க தமிழக அரசாங்கம் 757 கிலோ தங்கம் கொள்முதல் செய்துள்ளது. இதனால் 94,700 பேர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கலப்பு திருமணம் செய்தவர்கள் திருமணம் செய்த இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்து இந்த நிதி உதவி திட்டத்தின் கீழ் பயனடையவும்.
Keywords: