2018ஆம் ஆண்டு சர்வதேச அளவில் #METOO இயக்கம் கவனத்தை ஈர்த்த பின், அதன் தாக்கம் இந்தியாவிலும் இருந்தது.
கல்வி நிலையங்களிலும் ஊடகத்துறை உட்பட பெண்கள் பணிபுரியும் இடங்களிலும், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தாக்குதல்கள் குறித்து பொதுவெளியில் பெண்கள் தயக்கமின்றி பேசி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவரின் விவரங்களை வெளியிடுவது #metoo இயக்கமாகும். மேலும் சிலர் தங்களை Sexual Harassment’s செய்தவரின் மீது வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இந்திய அளவில் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா திரைப்பட இயக்குனரும் நடிகருமான நானா படேகர் மீது #METOO வகை குற்றச்சாட்டை கூறி இருந்தார். இது போன்று நடிகைகள் மற்றும் அரசியல் பிரபலங்கள் தங்களுக்கு ஏற்பட்ட Sexual Harassment’s தொடர்பான தாக்குதல்களை தைரியமாக கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில், பின்னனிபாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவின் மீது #METOO குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார்.
இவை மட்டுமல்லாமல் வைரமுத்துவின் மீது இன்னும் பல பெண்கள் இத்தகைய புகாரை கொடுத்து இருந்த நிலையில், அது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுபோன்று கவிஞர் லீனா மணிமேகலை இயக்குனர் சுசி கணேசன் மீது #METOO வகை புகார் கொடுத்திருந்தார்.metoo புகார்கள் தொடர்ந்து அவ்வப்போது வந்து கொண்டே இருக்கிறது
ஆக்டர் அர்ஜூன் :
நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜுன் மீது மீட்பு இயக்கத்தின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார்.
நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ‘நிபுணன்’ படத்தில் நடித்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அர்ஜுன் மீது கடந்த 2018ஆம் ஆண்டு இந்தப் புகாரை கொடுத்திருந்தார்.
இதற்கு அர்ஜுன் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் இரு தரப்பினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதில் பங்கேற்று அர்ஜுன் தான் சமரசமாக போக தயாரில்லை எனவும் தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க நினைக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் மீது மான நஷ்ட வழக்குத் தொடரப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
மேலும் அர்ஜூன் ரூபாய் 5 கோடி கேட்டு நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது மானநஷ்ட வழக்கும் தாக்கல் செய்திருந்தார்.
ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில் நடிகர் அர்ஜுன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் புதிய திருப்பமாக அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகார் அடிப்படை இல்லாதது என்று பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர்
அதுமட்டுமின்றி விசாரணைக்கு நேரில் ஆஜராக வலியுறுத்தி ஸ்ருதி ஹரிஹரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கில் அர்ஜுன் மீது எந்த தவறும் இல்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க தீர்மானித்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Topics: