Ministry of labor -ன் கீழ் இயங்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நல வாரிய அட்டை குறித்த விவரங்களையும், விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் குறித்தும், விண்ணப்பிப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்தும் இப்பொழுது காண இருக்கிறோம்.
E.- shram:
மத்திய அரசாங்கத்தின் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நல வாரியம் துவங்கப்பட்டு நாடு முழுவதும் மொத்தம் 38 கோடி உறுப்பினர்களை இணைப்பதற்கான நோக்கத்தோடு இத்திட்டம் இயங்கிவருகிறது.
ஏன் இந்த நல வாரியம்?
ஏழை எளிய மக்களாகிய விளிம்பு நிலை மக்களுக்கு மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலவாரியம் துவங்கப்பட்டுள்ளது. இதில் எந்த அமைப்பையும் சாராத தொழிலாளர்கள், தினக்கூலிகள் தங்களை இணைத்துக்கொண்டு அரசாங்கத்தின் எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை பெற முடியும்.
யார் யார் அமைப்புசாரா தொழிலாளர்கள்?
1.கட்டிட வேலை செய்பவர்கள்
2. சிறு மற்றும் குறு விவசாயிகள்
3. மீனவர்கள்
4. பட்டு நெசவு தொழில் செய்பவர்கள்
5. ஆட்டோ ஓட்டுபவர்கள்
6. வீட்டு வேலை செய்பவர்கள்
7. தள்ளுவண்டி கடை வைத்திருப்பவர்கள்
8. பால் ஊற்றும் விவசாயிகள்
9. காய்கறி மற்றும் பழ வியாபாரிகள்
9. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
10. செங்கல் சூளை தொழிலாளர்கள்
11. பீடி உருட்டும் தொழிலாளர்கள்
12. பொது சேவை மையம் வைத்திருப்பவர்கள்
13. தச்சர்கள்
14. உப்பு தொழில் செய்பவர்கள்
15. தோல் பதனிடும் தொழில் செய்பவர்கள்
16. மருத்துவச்சிகள்
17. வீட்டுவேலை செய்பவர்கள்
18. முடி திருத்துபவர்கள்
19. செய்தித்தாள் விற்பனையாளர்கள்
போன்றவர்கள் இந்த E-Shram தளத்தில் விண்ணப்பித்து அரசாங்க நலத்திட்டங்களை பெற முடியும்.
இந்த அட்டை வைத்திருப்பதினால் கிடைக்கும் நன்மைகள்:
1. 2 லட்ச ரூபாய் வரை விபத்து காப்பீடு பெற முடியும்.
2. உறுப்பினர்களின் பிள்ளைகளின் உயர்கல்விக்கு உதவிகள் அரசாங்கத்திடமிருந்து பெற முடியும்.
3. அரசாங்க வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை பெற முடியும்.
4. மேலும் பல சமூக நீதி திட்டங்களின் கீழ் பயனடைய முடியும்.
5.கொரோனா போன்ற நெருக்கடியான காலகட்டங்களில் அரசாங்கம் தரும் நிதி உதவியை பெற முடியும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
எந்த ஒரு நிரந்தர வருமானமும் இல்லாதவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாக கருதப்படுவர். அவர்கள் இந்த அமைப்பின் மூலம் நலத்திட்ட உதவிகளை பெற e-sharam கார்டுக்காக விண்ணப்பிக்கலாம்.
கட்டாயம் இருக்க வேண்டிய ஆவணங்கள்:
1. ஆதார் எண்.
2. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்.
3. வங்கிக் கணக்கு விவரங்கள்.
விருப்ப ஆவணங்கள்:
1.கல்வி சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. திறன் சான்றிதழ் மற்றும்
4.தொழில் சான்றிதழ்
விண்ணப்பிக்க இருக்க வேண்டிய தகுதிகள்:
1. நிச்சயம் எந்த ஒரு அமைப்பையும் சாராத தொழிலாளியாக இருக்க வேண்டும்.
2. வயது 16 முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும்.
3. வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது.
4. EPFO/ESIC ன் உறுப்பினராக இருக்க கூடாது.
மேற்கூறிய தகுதிகள் இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆபீஷியல் லிங்கை கிளிக் செய்து இந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டைக்கு விண்ணப்பிக்கவும்.
மேலும், விண்ணப்பிப்பது குறித்த தெளிவான விளக்கங்களை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள YouTube லிங்கை கிளிக் செய்யவும்.
Youtube Video Link : Click Here
Official Registration Link : Click Here
உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தாருக்கும் இந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலவாரியம் குறித்த தகவல்களை தெரியப்படுத்தவும்.
நன்றி
Dingu Media
Related Topics: