Table of Contents
AMMA Cement Still Available 2022 ?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் அவர் ஆட்சியில் இருக்கும் பொழுதும், அவர் மறைவுக்குப் பிறகும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. AMMA CANTEEN,AMMA PARMACIES,AMMA CLINIC,AMMA WATER திட்டங்கள் அதில் அடங்கும். இதில் மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றிருந்த திட்டம் அம்மா சிமெண்ட் ஆகும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா சிமெண்ட் -ன் செயல்பாடுகள் சற்று குறைக்கப்பட்டது.ஆனால் எப்படி அம்மா உணவகம் இன்றளவும் செயல்பட்டு வருகிறதோ,அம்மா சிமெண்டும் இன்னும் முற்றிலும் நிறுத்தப்படவில்லை, இருப்பினும் தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பாக வேறு பெயர்களில் ( வலிமை மற்றும் அரசு) சிமெண்ட் தயாரித்து மக்களுக்கு வழங்கும் பணி திறன்பட நடந்து வருகிறது.இருப்பினும், அம்மா சிமெண்ட் PORTAL தற்பொழுதும் செயல்பாட்டில் தான் உள்ளது. ஆனால் முன்பை போல மக்களுக்கு வழங்கும் அம்மா சிமென்ட் அளவு பெருவாரியாக குறைந்துள்ளது. அதற்கு பதிலாக VALIMAI CEMENT மற்றும் ARASU CEMENT என்ற பெயரில் தமிழக அரசாங்கம் சிமென்ட் வினியோகம் செய்து வருகிறது தமிழக அரசாங்கம்.
AMMA Cement Still Available 2022 ?
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவாக தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகம் TAMILNADU CEMENT CORPORATION LIMITED (TANCEM) சார்பாக வழங்கப்படும் மலிவு விலை சிமெண்ட், AMMA CEMENT என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டமானது 2014 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. AMMA CEMENT குறித்த அடிப்படை தகவல்கள்,அம்மா சிமென்டிற்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்களை பின்வருமாறு காணலாம்.
AMMA CEMENT -டின் விலை:
வெளிச்சந்தையில் மற்ற சிமெண்ட் அதன் தரத்திற்கு ஏற்ப 400 முதல் 450 ரூபாய் என விற்கப்படுகிறது. அதில் எந்தவித அப்புறமும் இல்லாமல் அதே ஒரு மூட்டை அம்மா சிமெண்ட் 190 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
எவ்வளவு சிமெண்ட் வாங்க முடியும்?
அம்மா சிமெண்ட் திட்ட கணக்கின்படி புதிய வீட்டிற்கு 100 சதுர அடி என்ற அளவில் 50 சிமெண்ட் மூட்டைகள் வழங்கப்படுகிறது. மேலும் 1500 சதுர அடி அளவிற்கு 750 மூட்டை சிமென்ட் வழங்கப்படுகிறது.
AMMA CEMENT-டின் தரம்:
விலையில் இவ்வளவு வித்தியாசம் இருப்பதினால் பலர் அம்மா சிமெண்ட் தரமற்றது என்று கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் அம்மா சிமெண்ட் தயாரிப்பதற்கு என்று எந்தவித தனியான உற்பத்தி நிலையமும் இல்லை.
சிமெண்ட் தயாரிக்கும் பெரு நிறுவனங்களிடம் அரசாங்கம் மக்களுக்காக சிமெண்ட்டை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து மானிய விலையில் வழங்குகிறது இதனால் தரத்தில் எந்த வித குறைபாடும் இருக்காது.
சிமெண்டின் தரங்கள்:
இறுகும் தன்மையைப் பொருத்தும், அவை கிடைக்கும் அளவுகளைப் பொருத்தும் சிமெண்ட் பல தரங்களில் சந்தையில் கிடைக்கிறது. அவற்றில் குறிப்பாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது,அதிகம் பயன்பாட்டில் உள்ள இரண்டு வகை சிமெண்ட்களைப் பற்றி. அவை..
- Ordinary Portland cement(OPC)
- Portland Pozzolana Cement(PPC)
.Ordinary Portland cement (OPC) சிமெண்ட் பெரிய பெரிய கட்டுமானங்கள், மேம்பாலங்கள் போன்ற அதிக எடை தாங்கக்கூடிய கட்டிடங்களை கட்டுவதற்காக இந்த OPC வகை சிமெண்ட். பயன்படுத்தப்படுகிறது. PPC வகைகளை ஒப்பிடும் பொழுது இதன் விலை சந்தையில் சற்று அதிகமாக இருக்கும்.
Portland Pozzolana Cement(PPC) ஓபிசி சிமெண்டை ஒப்பிடும் பொழுது இதன் SETTING TIME குறைவாக இருப்பதால்,PPC சிமெண்ட்களில் விலை சற்று குறைவாக இருக்கும். இந்த வகை பெருவாரியாக மக்களால் வீடு கட்டுவதற்கு பயன்படுத்தபடுகிறது. AMMA CEMENT இந்த PPC வகையை சேர்ந்தது. இதன் தரத்தில் எந்தவித குறைபாடும் இருக்காது.
யார் விண்ணப்பிக்கலாம்?
AMMA CEMENT வாங்குவதற்கு புதிதாக கட்டிடம் கட்டுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று எந்த வித வரைமுறையும் இல்லை. உங்கள் பழுதடைந்த கட்டிடங்களுக்கு REPAIR WORK செய்வதற்கும் நீங்கள் அம்மா சிமெண்ட் வாங்க விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
- VOTER ID
- RATION CARD
- AADHAR CARD இவை ஏதேனும் ஒன்றை உங்களுக்கான ஆவணமாக சமர்ப்பித்து நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
- கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் .
- பழைய வீட்டை பழுது பார்ப்பவர்கள் வி.ஏ.ஓவிடம் ஒப்புதல் பெற்றதற்கான சான்றிதழை இணைக்க வேண்டும்.
- விண்ணப்பிப்பவர் சுயஉறுதிமொழி சான்றிதழ் இணைக்க வேண்டும்.
- புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் உறுதியாக PLAN APPROVAL சமர்ப்பித்தால் மட்டுமே அம்மா சிமெண்ட் வாங்க முடியும்.
AMMA Cement Still Available ? எப்படி விண்ணப்பிப்பது?
- உங்கள் மொபைல் போனில் இருந்தோ அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தோ ஒரு எளிமையான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதன் மூலம் நீங்கள் AMMA CEMENT வாங்க விண்ணப்பிக்கலாம்.
- அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் உங்களுடைய கூகுள் பிரவுசரில் AMMA CEMENT டைப் செய்யவும்.
- கீழே வரும் AMMA CEMENT LOGIN என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
- அந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கும் பயனாளிகள் ‘தாங்களே முன்பதிவு செய்ய’ என்பதை கிளிக் செய்யவும்.
- அதன்பின் BENEFICIARY NAME என்ற இடத்தில் உங்களுடைய பெயர் தொலைபேசி எண் இமெயில் ஐடி கொடுக்கவும்.
- வலது பக்கத்தில் SCHEME என்ற ஆப்ஷனில் GENERAL PUBLIC REPAIRS அல்லது NEW HOUSE என்பதை கிளிக் செய்யவும்.
- GENERAL PUBLIC REPAIRS கொடுத்தால் VOA CERTIFIVATE கொடுக்கவேண்டும்.
- PROOF என்ற இடத்தில் ஆதார் கார்டு அல்லது ஓட்டர் ஐடியை செலக்ட் செய்து ID.NO என்ற இடத்தில் உங்களுடைய ID எண்ணை குறிப்பிட வேண்டும்.
- அடுத்ததாக BAGS REQUIRED என்பதில் தங்களுக்கு எத்தனை சிமெண்ட் மூட்டைகள் தேவைப்படுகிறதோ அந்த எண்ணெய் சரியாக தேர்வு செய்ய வேண்டும்.
- .அடுத்து நீங்கள் இருக்கும் மாவட்டத்தினை தேர்வு செய்து உங்களுடைய ஊரில் குடோன் அமைந்திருக்கும் இடத்தினையும் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும்.
- தங்களின் முகவரி குறித்த தகவல்களை சரியாக பூர்த்தி செய்தபின் கீழே NEXT என்ற ஆப்ஷனை கொடுத்தால் நீங்கள் குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் வரும். அதனை பிழை இல்லாமல் ஒரு முறை திருத்தம் செய்து கொள்ளவும்.
- தங்களின் விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளது என்றால் SUBMIT ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- SUBMIT ஆப்ஷனை கொடுத்தவுடன் YOUR REGISTRATION HAS BEEN SUCCESFULL என்ற மெஸேஜ் தங்களின் மொபைலுக்கு வரும். குடோனில் சிமெண்ட் கையிருப்பை பொருத்து தங்களுக்கு சிமெண்ட் கிடைக்கும் காலம் மாறுபடும்..
எப்படி பணம் செலுத்துவது? AMMA Cement Still Available?
AMMA CEMENT வாங்க குடோனுக்கு செல்லும்பொழுது டிடி எடுத்து சிமெண்ட் மூட்டைகளுக்கான தொகை செலுத்த வேண்டும். அரசாங்கத்தின் அம்மா சிமெண்ட் அப்ளை செய்து வாங்குவதன் மூலம் தங்கள் வீடு கட்டும் பொழுது அல்லது வீடு பழுது பார்க்கும் பொழுது பல லட்சங்களை சேமிக்க முடியும்.
எளிமையாக தாங்களே AMMA CEMENT அப்ளை செய்வது குறித்த தகவல்களை இப்பொழுது விவரமாக கண்டோம்.
இது போன்ற பயனுள்ள அரசாங்க திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த இணையதளத்தை வாசித்து வரவும்.
இது குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள DINGU MEDIA யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
IMPORTANT LINKS:
- OFFICIAL LINIK : CLICK HERE
- TO APPLY ONLINE : OFFLINE
- YOUTUBE VIDEO : CLICK HERE
Pingback: amma cement login - trustrose
Cemented