Table of Contents
- குழந்தைகளின் கல்வி என்பது ஒரு சமூகத்தின் எதிர்காலத்திற்கான அடித்தளம் இந்த சீரிய நோக்கத்தோடு துவங்கப்பட்டு இருப்பது எண்ணும் எழுத்தும் திட்டம்.(ENNUM ELUTHUM THITTAM) குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தரமான கல்விதான் சமூக முன்னேற்றத்திற்கான திறவுகோல்.
- எண்ணும் எழுத்தும் திட்டத்தை சமூக முன்னேற்றத்தின் நாற்றங்கால் என்று கூறலாம். பள்ளியில் தொடக்கக் காலங்களில் மாணவர் கற்றுக்கொள்ளும் இந்த என்னறிவு மற்றும் எழுத்தறிவு தான் வாழ்நாள் முழுக்க அவர்கள் கற்றுக் கொள்ளப் போகும் அனைத்து படிப்புகளுக்கும் அடித்தளம். அத்தகைய அடிப்படை கல்வியை தரமானதாக வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் எண்ணும் எழுத்தும் இடத்தை துவங்கியுள்ளார்
எண்ணும் எழுத்தும் திட்டம்:
தமிழகம் முழுவதும் பல உத்திகளை பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மாணவர்களுக்கான அடிப்படை கல்வி அறிவை புகட்டுவது இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இந்த திட்டமானது 2022 -2023கல்வி ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்முறை:
மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் விதத்தில் வேறு வேறு உத்திகளை பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியரின் வகுப்பறை அனுபவங்களை கேட்டறிந்து அவர்கள் கூறும் அணுகுமுறைகளை பிற ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வியை தரமானதாக வழங்குவது இந்த எண்ணும் எழுத்தும் திட்டமாகும்.
எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கான பாடநூல்கள்:
இத்தகைய ஆசிரியர்களின் ஒருங்கிணைப்புடன் அரும்பு ,மொட்டு, மலர் என்ற பெயர்களில் 1 ,2,3 வகுப்புகளுக்கான 3 பயிற்சி நூல்களும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டு கையேடும் உருவாக்கப்பட்டுள்ளது
எண்ணும் எழுத்தும் திட்டம்- பொருட்கள்:
- எண்ணும் எழுத்தும் இத்திட்டத்தை பொருத்தவரையில் மாணவர்கள் இதுவரை கற்றுவந்த கல்வி முறையை மாற்றி அவர்கள் விரும்பும் வகையில் விளையாட்டு முறை கல்வியை ஊக்கப்படுத்துவது ஆகும்.
- துணைக்கருவிகள் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன அதிக எண்ணிக்கைகளில் பட அட்டைகள் எழுத்து அட்டைகள் சொல் அட்டைகள் எண் அட்டைகள் வடிவங்களின் மாதிரிகள் ஆகிய பொருட்களை kid box-ஆக பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும் திட்ட செயலி:
இந்த செயலியில் உள்ள கேள்விகளுக்கு மாணவர்கள் விளையாட்டு முறையில் கேள்விகளை பார்த்து தொட்டு பதில் அளித்து மகிழலாம். இந்த செயல்பாடுகளின் மூலம் அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று ஆசிரியர்கள் அறிந்து கொள்வார்கள்
எண்ணும் எழுத்தும் திட்டம் என்றால்?
- எண்ணும் எழுத்தும் இத்திட்டமானது மூன்று ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
- ஒவ்வோர் ஆண்டும் பாடத்திட்டங்கள் மாறிக்கொண்டிருக்கும்.
- 2025ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து குழந்தைகளும் அடிப்படை எழுத்தறிவு எழுத்தறிவு பெற்றதோடு அவரவர்க்குரிய அடிப்படை கற்றல் அறிவை பெறுவார்கள் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும்: சிறப்பம்சம்
- இவ்வுலகில் திருட முடியாத சொத்து என்று ஒன்று உள்ளது எனில் அதில் கல்வி மட்டும் தான் அத்தகைய கல்வி அறிவை தரமானதாக வழங்க பள்ளிக்கல்வித்துறையில் புதிய முயற்சியே இந்த எண்ணும் எழுத்தும் திட்டமாகும்.
- கற்றல் கற்பித்தல் பணியில் ஆசிரியர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள இந்த எண்ணும் எழுத்தும் திட்டமானது பேருதவி புரியும்.
- குழந்தைகளின் கற்றல் நிலைக்கேற்ற செயல்பாடுகள் இந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தில் இடம்பெற்றிருக்கும்.
முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு :

ஒவ்வொரு பாடமும் நடத்துவதற்கு ஏற்றவாறு வகுப்பறைகள் அமைய வேண்டும் என்று அறிவித்துள்ளார். ஆடல், பாடல், கதைசொல்லல், நடித்துக் காட்டுதல், பொம்மலாட்டம், கைவினைப் பொருட்கள் என பல்வேறு வடிவங்களில் இப்பாடங்கள் பயிற்றுவிக்கப்பட இருக்கின்றன என்றும் அறிவித்தார்.
எண்ணும் எழுத்தும் பயிற்சி
- ENNUM ELUTHUM TRAINING – MODULE 1
- ENNUM ELUTHUM TRAINING – MODULE 2
- ENNUM ELUTHUM TRAINING – MODULE 3
- ENNUM ELUTHUM TRAINING – MODULE 4
- ENNUM ELUTHUM TRAINING – MODULE 5
- ENNUM ELUTHUM TRAINING – MODULE 6
- ENNUM ELUTHUM TRAINING – MODULE 7
- ENNUM ELUTHUM TRAINING – MODULE 8
ENNUM ELUTHUM TRAINING TEACHERS HAND BOOK: DOWNLOAD
- ENNUM ELUTHUM TAMIL : DOWNLOAD
- ENNUM ELUTHUM ENGLISH : DOWNLOAD
- ENNUM ELUTHUM MATHS : DOWNLOAD
- எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் கருத்தாளர்கள் தங்களுடைய 8 இலக்க user id- யை பயன்படுத்தி login செய்து வருகைப் பதிவு செய்து கொள்ளவும்.
- பயிற்சி வழங்கும் RP எனில் i am a trainer – யை தேர்வு செய்து கொள்ளவும்.
- பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர் எனில் I am attending a training-யை தேர்வு செய்து வருகைப் பதிவு செய்யவும்.
ENNUM ELUTHUM login LINKS
- ENNUM ELUTHUM LOGIN : CLICK HERE
- ENNUM ELUTHUM TRAINING ATTENDANCE APP DOWNLOAD LINK – CLICK HERE
- ENNUM ELUTHUM TRAINING APP DEMO
- ENNUM ELUTHUM TRAINING PPT
- EE TAMIL MODULE PDF
- EE TAMIL LEARNING OUTCOMES PDF
- ENGLISH PPT PDF
- EE MODEL CLASS PPT
- 5 DAYS TRAINING TIME TABLE – CLICK HERE
IMPORTANT LINK
TO READ THIS POST IN ENGLISH | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
My son study very poor and my daughter also