சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறக்கட்டளை மூலமாக 100 பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி அளிக்கப்படுவது தொடர்பான தகவல்களை இப்பொழுது காணலாம்.
ரஜினிகாந்தின் அறக்கட்டளை மூலமாக ஏழை எளிய மாணவர்களின் டிஎன்பிஎஸ்சி கனவை நிறைவேற்றும் பொருட்டு, பிப்ரவரி 2022 முதல் சென்னையில் 100 மாணவர்களும் இலவசமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
tnpsc free coaching by government 2022
இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தை இந்த அறக்கட்டளை நிர்வாகிகள் துவங்கி அதனை அறிவித்துள்ளனர்.
100 மாணவர்களுக்கு இலவச பயிற்சி:
SSC,UPSC மற்றும் S I போன்ற அனைத்து வகை போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி விரைவில் துவங்கப்பட உள்ள நிலையில்,தற்பொழுது டிஎன்பிஎஸ்சி பயிற்சிகளுக்கும் மட்டும் மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஆண்டுக்கு100 மாணவர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
tnpsc free coaching by government 2022
தேர்வு முறை:
மொத்தம் உள்ள 100 இடங்களில்,
1.வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் – 20%
2.முதல் தலைமுறை பட்டதாரிகள் 20 %
3.சேரி வாழ் மாணவர்கள் 10 %
4. பொருளாதாரத்தில் நலிவுற்ற ஒற்றை பெற்றோரால் அல்லது மாற்றுத்திறனாளி பெற்றோரால் வளர்க்கப்பட்ட குழந்தைகள் 14 %
5. 3 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் – 16 %
6.பொதுப்பிரிவு மாணவர்கள் 20%
மொத்தம் – 100.%
tnpsc free online coaching by government
கல்வித்தகுதி:
இலவச பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் 100 மாணவர்கள் கீழ்க்கண்ட அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
1. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்.
2.பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்.
3.நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்.
tnpsc free coaching by government 2022 qr code
நுழைவுத் தேர்வு:
தகுதியான மாணவர்களுக்கு இந்த இலவசப் பயிற்சி வாய்ப்பு சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி மாணவர்கள் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வானது பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடங்களை அடிப்படையாக கொண்டது.
tnpsc group 4 free online classes 2022
என்ன படிக்க வேண்டும்.?
1.Mathematics
2. logical reasoning
3.general knowledge
4. Tamil literary works
tnpsc group 1 free online coaching
எப்படி விண்ணப்பிப்பது?
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து மாணவர்கள் தங்களின் சுய விவரங்களை பதிவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது.
tnpsc group 2 free online coaching by government 2022
கேட்கப்பட்டுள்ள மாணவர்களின் சுய விவரங்கள்
1.மின்னஞ்சல் முகவரி
2.பெயர்
3.பிறந்த தேதி மற்றும் ஆண்டு 4.பாலினம்
5. தந்தை பெயர்
6.தந்தையின் வேலை
7. தாயார் பெயர்
8. தாயாரின் வேலை
9. வீட்டு முகவரி
10. மொபைல் நம்பர் 11.மின்னஞ்சல் முகவரி
12. பத்தாவது படித்த பள்ளியின் பெயர்
13. பத்தாவதில் பெற்ற மதிப்பெண்கள்
14.12வது படித்த பள்ளியின் பெயர்
15.பன்னிரண்டாவது பெற்ற மதிப்பெண்கள்
இவை அனைத்துடன் மேற்கண்ட 6 பிரிவுகளில் எதனடிப்படையில் விண்ணப்பிக்கிறார் என்பதை தேர்வு செய்து விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் .
free online coaching for tnpsc group 4
கடைசி தேதி:
ரஜினிகாந்த் அறக்கட்டளையின் இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சிகளைப் பெற ஜனவரி 10, 2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் ஜனவரி 15ஆம் தேதி தேர்வு செய்த மாணவர்களின் பட்டியல் இந்த இணையதளத்திலேயே வெளியிடப்படும்
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வரும் ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்துங்கள்.
இது போன்ற பயனுள்ள தகவல்களுக்கு Dingu media யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
tnpsc free coaching by government 2022
RELATED TOPICS :
I’m priya from Coimbatore mam/sir my aim is to become an DSP so I’m searching for TNPSC coaching center but my family can’t pay so much of amount my parent’s was working in Tea estate so that pls accept me and make some Hint’s to steady and become an DSP OF POLICE. thank you sir/mam