1ஆம் முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றல் இடைவெளியை போக்க தமிழக அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் ஒரு திட்டம் தான் இந்த “இல்லம் தேடி கல்வி” திட்டம்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு இத்திட்டம் செயலில் இருக்கும் என்று தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.
20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் வீதம் தமிழகம் முழுவதும் மொத்தம் 17 லட்சம் தன்னார்வலர்கள் இந்த திட்டத்தின் கீழ் தங்களை இணைத்துக்கொள்ள தமிழக அரசாங்கம் அழைப்பு விடுத்திருக்கிறது..
இதன்படி இந்தத் திட்டத்திற்காக இதுவரை 200 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக பள்ளிக் கல்வித் துறையிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் 1- 1 1/2 மணிநேரம் மாணவர்கள் தங்கள் பகுதிக்கு அருகே உள்ள திற்கான கற்றல் மையங்களில் பாடங்களைக் கற்கலாம்.
இந்தத் திட்டத்தில் இணைத்துக்கொள்ளும் தன் ஆர்வலர்களுக்கு 1000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட பரிசோதனைகளை தமிழக அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
தன்னார்வலர்களுக்கான தகுதி:
1.17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்
2.ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க நினைப்பவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
2. 6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆர்வமுள்ளவர்கள் பட்டப்படிப்பு முடித்து இருத்தல் அவசியம்.
முதற்கட்டமாக இந்த திட்டம் 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. விரைவில் இது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் தங்களை தன்னார்வலர்கலாக இணைத்துக் கொள்ள ஆர்வமுள்ளவர்கள் To Apply : Click Here
என்ற இணையதளத்தில் தங்களின் முழு விவரங்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
மேலும் இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள youtube லிங்கை கிளிக் செய்யவும்.
Pingback: TAMILNADU KALVI FELLOWSHIP FULL DETAILS - DINGU MEDIA
Pingback: Tamil Nadu Education Fellowship (TNEF) - DINGU MEDIA
Ok
Andres Rosboril