Skip to content
KARPINI PENGAL UTHAVI THOGAI
Home » KARPINI PENGAL UTHAVI THOGAI || கர்ப்பிணி பெண்கள் உதவித்தொகை

KARPINI PENGAL UTHAVI THOGAI || கர்ப்பிணி பெண்கள் உதவித்தொகை

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் நினைவாக தமிழக அரசாங்கம் கர்ப்பிணி பெண்களுக்கு 18,000 ரூபாய் நிதி உதவி வழங்குகிறது (மகப்பேறுகால நிதி உதவித்திட்டம்). கருவுற்றிருக்கும் தாய்மார்களின் உடல் நலத்தைப் பேணவும், குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும் கர்ப்பிணி பெண்கள் உதவித்தொகை நிதியுதவித் திட்டத்தின் கீழ் பணம் மற்றும் பரிசுப் பெட்டகமும் வழங்கப்படுகிறது.

மகப்பேறுகால நிதி உதவித் திட்டத்தில் பயனடைய இருக்க வேண்டிய தகுதிகள் என்னென்ன? எப்படி விண்ணப்பிப்பது? யாரை அணுக வேண்டும்? எவ்வளவு நிதி உதவி கிடைக்கும்? அரசாங்கம் வழங்கக்கூடிய தொகை எத்தனை கட்டங்களாக வழங்கப்படும்? போன்ற அனைத்து தகவலையும் பின்வருமாறு காணலாம்.

WHAT IS KARPINI PENGAL UTHAVI THOGAI ?

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உகந்த ஊட்டச்சத்துள்ள உணவு பொருட்கள் கிடைக்கச் செய்வதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்
மேலும், கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் ஊதிய இழப்பை ஈடு செய்வதற்கு இத் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது.

AMOUNT GIVEN IN KARPINI PENGAL UTHAVI THOGAI:

  • கர்ப்பிணி பெண்கள் உதவித்தொகை திட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு 18,000 வழங்கப்படுகிறது.
  • இதில் 14000/- ரூபாய் பணமாகவும், மீதமிருக்கும் 4000 ரூபாய் பரிசுப் பெட்டகமாகவும் வழங்கப்படும்.
  • இந்த 14,000/- மொத்தம் 5 தவணைகளாக வழங்கப்படுகிறது..

முதல் தவணை:
முதல் தவணையாக 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் 2,000 ரூபாய் ஆனது கர்ப்பமுற்று 12 வாரத்திற்குள் கிராம/ நகர சுகாதார செவிலியரின் பதிவு செய்து பிக்மி எண் பெற்றவுடன் வழங்கப்படும்.

இரண்டாம் தவணை:
இரண்டாம் தவணையாக நான்காம் மாதம் நிறைவடைவதற்கு கர்ப்பகால மற்றும் ரத்த பரிசோதனை அரசு மருத்துவமனைகளில் செய்திருக்கவேண்டும்.
2000 ரூபாய் ரொக்கமும் 2000 ரூபாய் காண பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது.

மூன்றாம் தவணை:
மூன்றாம் தவணையாக பிரசவத்திற்கு பிறகு 4,000 ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.

நான்காம் தவணை:
நான்காம் தவணையாக OPV/ROTA மூன்றாவது டோஸ் மற்றும் 2 டோஸ் IPV குழந்தைக்கு முடிந்ததும் 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

READ ALSO  வலிமை சிமெண்ட் விலை || Valimai Cement website || Valimai Cement Price || Valimai Cement How much || Valimai Cement rate || How to Buy Valimai Cement

ஐந்தாவது தவணை:
ஐந்தாவது தவணையாக குழந்தைக்கு 9 முதல் 12 மாதங்களுக்கு இடையில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முடிந்த பிறகு 2000 ரூபாய் வழங்கப்படுகிறது.

HEALTH KIT FOR மகப்பேறுகால நிதி உதவித்திட்டம் :

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தில் வழங்கப்படும் ஊட்டச்சத்து பரிசு பெட்டகத்தில் உள்ள பொருட்கள்

  • கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஹெல்த் மிக்ஸ் பவுடர்- 1கிலோ
  • IFA SYRUP- 3 எண்ணிக்கை
  • உலர் திராட்சை- 1 கிலோ
  • புரத பிஸ்கட்- 500 கிராம்
  • நெய்- 500 கிராம்
  • டி அல்பெண்டசோல்-3 எண்ணிக்கை
  • துண்டு- 1 எண்ணிக்கை

ELIGIBILITY FOR KARPINI PENGAL UTHAVI THOGAI-கு அப்ளை செய்ய இருக்க வேண்டிய தகுதிகள்:

  • கர்ப்பிணி பெண்கள் உதவித்தொகைக்கு அப்ளை செய்ய இருக்க வேண்டிய தகுதிகள் பின்வருமாறு,
  • கர்ப்பிணித் தாய்க்கு 19 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
  • தகுதி வாய்ந்த தாய் 2 பிரசவங்களுக்கு இந்த 18 ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெற முடியும்.
  • அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றெடுக்க வேண்டும்.

DOCUMENTS NEEDED TO APPLY FOR மகப்பேறுகால நிதி உதவித்திட்டம்:

  • இத்திட்டத்தில் விண்ணப்பிக்க நினைப்பவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
  • கணவன் மனைவி இருவரின் ஆதார் கார்டு.
  • கருவுற்றிருக்கும் பெண்ணின் பெயரில் ஒரு வங்கி சேமிப்பு கணக்கு.
  • மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
  • இவை அனைத்தையும் தங்கள் பகுதியின் செவிலியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

HOW TO APPLY FOR KARPINI PENGAL UTHAVI THOGAI:

  • இந்த மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் நீங்கள் பயன் அடைய வேண்டும் என்றால் உங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையதில் உள்ள செவிலியரை (NURSE) தொடர்பு கொள்ளவும்.
  • தங்களின் விவரங்களை கேட்டறிந்த பின் செவிலியரே ரெஜிஸ்ட்ரேஷன் செய்து கொடுப்பார்.
  • பிரசவத்தை எதிர்நோக்கி இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு கர்ப்பிணி பெண்கள் உதவித்தொகை திட்டம் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
  • மேற்கண்ட தகுதிகள் தங்களுக்கு இருப்பின் உடனே விண்ணப்பிக்கவும்.
  • தங்களுக்குத் தெரிந்த யாரேனும் விண்ணப்பிக்காமல் இருந்தால் அவர்களுக்கு இந்த தகவல்களை தெரியப்படுத்தவும்.

IMPORTANT LINKS:

  • TO APPLY ONLINE : OFFLINE
  • YOUTUBE VIDEO : CLICK HERE

RELATED TAGS

2022 POSTAL CIRCLE VELAIVAIPPU 2022 POSTAL VELAIVAIPPU 2022 நெய்வேலி NLC வேலைவாய்ப்பு arasuvelai government jobs 2022 govt jobs 2022 govt job vacancy 2022 HOW TO APPLY POSTAL VELAIVAIPPU job vacancy 2022 Kooturavu velaivaippu 2022 latest govt jobs 2022 neyveli lignite corporation recruitment 2022 nlc apprenticeship training 2022 nlc pharmacist recruitment 2022 nlc recruitment 2022 for engineers without gate nlc recruitment 2022 for freshers POSTAL 2022 VELAIVAIPPU POSTAL CIRCLE VELAIVAIPPU POSTAL CIRCLE VELAIVAIPPU 2022 POSTAL VELAIVAIPPU POST OFFICE VELAI tamilnadu government jobs tamilnadu government jobs 2022 TAMILNADU POSTAL VELAI teacher jobs TN GOVT JOBS tn govt jobs 2022 tn govt jobs 2022 in tamil tnhrce coimbatore recruitment 2022 tnhrce recruitment 2022 tnhrce recruitment 2022 application form tnhrce recruitment 2022 application form download pdf today government job trb VELAIVAIPPU 2022 www nlc gov in recruitment 2022 அரசு வேலைவாய்ப்பு அரசு வேலைவாய்ப்பு 2022 இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 நான் முதல்வன் நெய்வேலி 2022 NLC வேலைவாய்ப்பு நெய்வேலி NLC 2022 வேலைவாய்ப்பு நெய்வேலி NLC வேலைவாய்ப்பு 2022 பெண்கள் வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *