Table of Contents
கூட்டுறவு வங்கி மாணவர்கள் கடன் திட்டம் கல்விபயிலும் மாணவர்களை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக்கி, மாணவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குறித்த அணைத்து தகவல்களையும் பின் வருமாறு காணலாம்.
அமைச்சரின் அறிவிப்புகள்
- கூட்டுறவு வங்கி மாணவர்கள் கடன் திட்டம் போன்று இன்னும் சில திட்டங்களை அமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார்
- இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் அறிவித்திருக்கும் கருத்துக்கள்.
- கடந்த ஆண்டு 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டது.
- இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக வழங்க வேண்டும் என்பதற்காக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
- இதுவரை 5,33,357 உறுப்பினர்களுக்கு, ரூ.4,054.24 கோடி கடன் வழங்கப்பட்டுல்லதாக அறிவித்திருக்கிறார்.
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்
- தேர்தல் வாக்குறுதிப்படி, நகைக் கடன் தள்ளுபடியில் ரூ.4,900 கோடி வரை வழங்கப்பட்டுவிட்டது.
- மீதமுள்ள ரூ.100 கோடிக்கான தள்ளுபடிக்கு, மனுக்களைப் பரிசீலித்து, பயனாளிகளிடம் உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டுவருகிறது .
- விரைவாக தகுதியான நபர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும்.
- மேலும்,தமிழகத்தில் 1,17,617 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.2,756 கோடி தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தள்ளுபடி வழங்குவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- அக்டோபர் 10-க்குள் இக்கடன் தள்ளுபடி ரசீது வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 15,88,309 உறுப்பினர்கள் பயனடைவர் என்றும் அறிவித்தார்.
கூட்டுறவு வங்கி மாணவர்கள் கடன் திட்டம்
- மாணவர்களை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக்கி,
- மாணவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்திருக்கிறார்.
- இந்த அறிவிப்பு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- இந்த கூட்டுறவு வங்கி மாணவர்கள் கடன் திட்டம் எத்தகைய கடனாக இருக்கும் என்பது விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனிநபர் கடனா? கல்வி கடனா?
- மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது கல்விக் கடனாக இருக்குமா அல்லது தனிநபர் கடனாக இருக்குமா என்று விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது கடன் தனிநபர் கடனாக இருப்பின் அது குறித்த விபரங்கள் பின்வருமாறு காணலாம்.
தனிநபர் கடன் விவரங்கள்
கூட்டுறவு வங்கி மாணவர்கள் கடன் திட்டம் | கூட்டுறவு வங்கி மாணவர்கள் கடன் திட்டம் |
நோக்கம் | நோக்கம் சொந்த தேவை |
யாருக்கு கிடைக்கும் | மாதச் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் செய்பவர்கள், மாணவர்கள்(இனி) |
தகுதிகள் | CIBIL score : 720, 1 உத்தரவாதம் அளிப்பவர் |
வட்டிவிகிதம் | 11% பி.எ |
தனி நபர் கடன் நிபந்தனைகள்
- கூட்டுறவு வங்கியில் பெறப்படும் தனிநபர் கடனின் தவணை காலம் 120 மாதங்கள் உட்பட்டு இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது அரசின் விதிமுறைக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய நிபந்தனை.
- உறுப்பினர் பெறும் மொத்த சம்பளத்தில் 25 மடங்கு அல்லது அதிகபட்ச கடன் அளவு ரூ.15 லட்சம் இதில் எது குறைவோ அத்தொகை கடனாக வழங்கப்படம்
- வழங்கப்பட வேண்டிய கடன் தொகையில் 10-ல் ஒரு பங்கு, பங்குத் தொகையாக கடன் பெறும் உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும் .
- மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்று வழங்கும் சங்கங்கள் 5 % பங்குத்தொகை பதிவாளரின் சுற்றறிக்கை எண் .1 / 2019 ( ந.க .59115 / 2018 / வஆ 1 ) நாள் 03.01.2019 – இல் தெரிவிக்கப்பட்டுள்ள படி வசூலிக்கப்படம்.
- பணியாளர்களின் மொத்த ஊதியத்தில் இருந்து அனைத்து பிடித்தங்களும் மேற்கொள்ளப்பட்ட பின் பணியாளர் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளம் ,மொத்த ஊதியத்தில் 25 % க்குக் மேல் இருக்கும்.
- பணிபுரியும் அலுவலக சம்பளம் வழங்கும் அலுவலர்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்ட பிறகு பணியாளர்களுக்கு கடன் தொகை அனுமதிக்கப்படும்.
- பணியாளர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் சங்கத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட சரக துணைப்பதிவாளரிடம் தக்க துணை விதித்திருத்தங்கள் மேற்கொண்டு பதிவு செய்த பின்னரே புதிய உச்ச வரம்பின் அடிப்படையில் கடன் வழங்கப்படம்.
மாணவர்கள் கடன் திட்டம்
மேற் கண்ட நிபந்தனைகள் மாணவர்களுக்கு எவ்வாறு பொருந்தும் என்பது குறித்து அரசிடம் இருந்து தெளிவான விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூட்டுறவு துறையின் மற்ற நலத்திட்ட உதவிகளை போல கூட்டுறவு வங்கி மாணவர்கள் கடன் திட்டம் பெருத்த வெற்றியடையும் என்பதில் ஏந்த வித ஐயமும் இல்லை. கூட்டுறவு வங்கி மாணவர்கள் கடன் திட்டம் குறித்து வேறு அறிவிப்புகள் வரும் பட்சத்தில் உடனே தங்களுக்கு அதை தெரியப்ப டுத்துகிறோம்.
important links
JOIN OUR TELEGRAM GROUP | JOIN |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
our youtube channel link | click here |
கூட்டுறவு வங்கி மாணவர்கள் கடன் திட்டம் IN ENGLISH | CLICK HERE |
Pingback: TN COOPERATIVE BANK STUDENT LOAN 2023 | KOOTURAVU BANK STUDENT LOAN | COOPERATIVE BANK LOAN FOR STUDENTS - Find TN Jobs