Table of Contents
ஆதரவற்ற முதியோர்களின் துயர்துடைக்க தமிழக அரசாங்கம் தமிழ்நாடு அரசு முதியோர் உதவித்தொகை திட்டத்தை( OLD AGE PENSION SCHEME) OAP SCHEME- ஐ செயல்படுத்தி வருகிறது.
MUTHIYOR UTHAVI THOGAI APPLY ONLINE
வயது முதிர்வின் காரணமாக உழைத்து வருவாய் ஈட்டி வாழ முடியாமலும் உறவினர்களின் ஆதரவின்றியும் வறுமை காரணமாக உணவுக்கு வழி இன்றியும் தவிக்கும் முதியவர்களுக்காக இத்திட்டமானது தமிழக அரசால் 1.4.1962-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் துவக்கப்பட்ட பொழுது மாதா மாதம் ரூபாய் 20/- வீதம் முதியோர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. இன்று இத்திட்டத்தின் ஓய்வுதிமாயனது 1,000/- ரூபாயாக இருக்கிறது. இது விரைவில் உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
MUTHIYOR UTHAVI THOGAI ELIGIBILITY
இத்திட்டத்தின் பயனடைய கீழ்க்கண்ட தகுதிகள் இருப்பவராக இருக்க வேண்டும்
- முதலில் ஆதரவற்றவராக இருக்க வேண்டும்.
- 60 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
- வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டும்
- மேலும்,ஆதரவற்ற விவசாய கூலிகள்
- உடல் ஊனமுற்றோர்
- ஆதரவற்ற விதவைகள் கணவனால் கைவிடப்பட்ட மனைவியர் ஆகியவர்களுக்கு தமிழ்நாடு முதியோர் உதவித் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
MUTHIYOR UTHAVI THOGAI DOCUMENTS:
ஆதரவற்ற முதியவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கீழ்காணும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- புகைப்படம்
- ஸ்மார்ட் கார்டு
- ஆதார் கார்டு/ ஓட்டர் ஐடி/ டிரைவிங் லைசென்ஸ்/ பாஸ்போர்ட்
- ஆதார் கன்செண்ட் பார்ம் பேங்க் பாஸ்புக்
- BPL நம்பர்
- SELF DECLARATION FORM.
MUTHIYOR UTHAVI THOGAI AGE PROOF:
திட்டத்தில் தகுதியற்றவர்கள் பயன் அடைவதை தவிர்க்கும் வகையில் வயதை உறுதி செய்வதற்கான நடைமுறை கடமையாக்கப்பட்டுள்ளது இதற்கு முன்பு இருந்தது போல் மருத்துவரிடம் வயது சான்றிதழ் வாங்கி சமர்ப்பிப்பது தவிர்க்கப்பட்டு ஆதார் ரேஷன்கார்டு முதலிய ஆவணங்களில் இருக்கும் வயது இப்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது
APPLICATION FEE FOR OAP SCHEME:
விண்ணப்பிக்க 10 ரூபாய் மட்டும் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
MUTHIYOR UTHAVI THOGAI APPLICATION FORM
எப்படி விண்ணப்பிப்பது?:
நெருங்கிய உறவினர்கள் இல்லாமல் அல்லது நெருங்கிய உறவினர்கள் இருந்தும் அவர்களின் ஆதரவின்றி தவிக்கும் முதியோர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கு வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மேற்கண்ட ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
MUTHIYOR UTHAVI THOGA APPLY ONLINE
- தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான (CLICK HERE) CITIZEN LOGIN செய்து REVENUE DEPARTMENT-ன் இரண்டாவது பக்கத்தில் இருக்கும் OLD AGE PENSION SCHEME என்பதை கிளிக் செய்து அங்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை தகவல்களை படித்து விட்டு PROCEED செய்து விண்ணப்பிக்கலாம்.

- அதன்பின் உங்கள் கேன் நம்பர், மொபைல் நம்பர், இமெயில் ஐடி, பெயர் முதலிய ஏதாவது ஒரு விவரத்தை கொடுத்து SEARCH செய்து உங்கள்CAN விவரங்களை பெறவும்

- அதன்பின் ஆதார் நம்பர் பிறந்த தேதி மற்றும் தொலைபேசி எண்ணைக் கொடுத்து ஜெனரேட் OTP கிளிக் செய்து தங்களின் OLD AGE PENSION SCHEME படிவத்தை பெறவும்.

- குறிப்பு: CAN விவரத்தில்இருப்பவரின் வயது 60க்கு மேல் இருந்தால் மட்டுமே OAP SCHEME -க்காண படிவம் OPEN ஆகும்
- படிவத்தை தவறின்றி பூர்த்திசெய்து தேவையான போட்டோ முதலிய ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து 10/-ரூபாய் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் .
MUTHIYOR UTHAVI THOGAI STATUS:
விண்ணப்பித்த பின் வழங்கப்பட்டிருக்கும் ஒப்புகைச் சீட்டில் உள்ள அப்பிளிகேஷன் நம்பரை கொண்டு தங்களின்APPLICATION STATUS ஆன்லைனில் தெரிந்து கொள்ள முடியும்.
HOW TO GET TAMILNADU OLD AGE PENSION:
அதற்கு பிறகான நடைமுறைகளை பொருத்தவரை முதலில் தங்கள் விண்ணப்பத்தை தங்கள் பகுதி VAO நேரில் வீட்டிற்கு வந்து விண்ணப்பித்தவர் ஆதரவற்ற முதியவர் தானா என்பதை உறுதி செய்து பின் அந்த விண்ணப்பத்தை RI-க்கு அனுப்புவார்.
RI உறுதிப்படுத்திய பின் அதை தாசில்தாருக்கு அனுப்புவார்.
தாசில்தார் கையொப்பமிட்ட பின் மாதம் மாதம் 1,000 பணம் வந்து சேரும்.
MUTHIYOR UTHAVI THOGAI AMOUNT
விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மாதா மாதம் போஸ்ட் ஆபீஸ் MONEY ORDER மூலம் 1,000/- ரூபாய் விண்ணப்பித்த ஆதரவற்ற முதியவருக்கு / மூதாட்டிக்கு வழங்கப்படும்.
தங்களுக்கு தெரிந்த ஆதரவற்ற முதியவர்களுக்கு இத்திட்டம் குறித்த தகவல்களை தெரியப்படுத்தி அவர்களுக்கு OLD AGE PENSION SCHEME பணம் கிடைக்க சிறிது நேரம் ஒதுக்கி அவர்களின் சார்பில் விண்ணப்பித்து பேருதவி செய்திடவும். நன்றி.
TO READ THIS POST IN ENGLISH | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
MUTHIYOR UTHAVI THOGAI FAQ
OAP திட்டத்தின் கீழ் எவ்வளவு பணம் வழங்கப்படுகிறது?
தமிழக அரசாங்கத்தின் இத்திட்டத்தின் கீழ் மாதா மாதம் 1,000 ரூபாய் மணியார்டர் மூலம் சம்பந்தப்பட்ட முதியவருக்கோ/ மூதாட்டிகோ வழங்கப்படுகிறது.
OAP திட்டத்திற்கு எப்படி அப்ளை செய்வது?
இத்திட்டத்தில் பயனடைய இரண்டு விதங்களில் விண்ணப்பிக்கலாம். தாலுகா அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க இருக்க வேண்டிய வயது என்ன?
60 வயதை தாண்டிய யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்
OLD AGE PENSION SCHEME-ல் விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?
OLD AGE PENSION SCHEME விண்ணப்பக் கட்டணமாக 10 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும்.
OLD AGE PENSION SCHEME APPLICATION STATUS-ஐ எப்படி தெரிந்து கொள்வது?
ஆன்லைனில் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அப்ளிகேஷன் நம்பரை வைத்து OLD AGE PENSION SCHEME APPLICATION STATUS-ஐ தெரிந்துகொள்ளலாம்.
Old age pension
Age 72