Table of Contents
மத்திய அரசின் MINISTRY OF LADOUR AND EMPLOYMENT கட்டுப்பாட்டில் இருக்கும் NATIONAL CAREER SERVICE இந்தியாவின் மிகப்பெரிய வேலை தேடும் தளமாகும். இது 2015ஆம் ஆண்டு மாண்புமிகு இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
NCS NEW REGISTRATION – NCS JOB VACANCIES – HOW TO APPLY NCS ONLINE – www.ncs.gov.in
NATIONAL CAREER SERVICE DETAILS IN TAMIL:
- வேலைதேடும் இளைஞர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை தேடித் தருவது NCS-ன் அடிப்படை நோக்கமாகும்.
- மேலும் கல்வி மற்றும் வேலை சார்ந்த அறிவுரைகள் வழங்குதல்
- JOB FAIR தகவல்களை ஒன்று திரட்டி வேலை தேடுவோருக்கு வழங்குதல்
- வேலை தர முன்வரும் நிறுவனங்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் பாலமாய் இருத்தல்
- உள்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருந்துகிற வேலைகளை ஒரே இடத்தில் திரட்டி வழங்குதல் ஆகியவை NATIONAL CAREER SERVICE-ன் நோக்கமாகும்.
WHY NATIONAL CAREER SERVICE?
- NCS மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் போலியான வேலை வழங்குபவர்களிடம் இருந்தும் பணத்தை ஏமாறுவதிலிருந்தும் வேலை தேடுபவர்கள் தங்களை காத்துக் கொள்ள முடியும்.
- பலதரப்பட்ட வேலை தொடர்பான தகவல்களும் ஒரே இடத்தில் காணப்படுகிறது.
- வேலைக்கு விண்ணப்பிப்பது மட்டுமல்லாது வேலைக்கு தங்களை தயார்படுத்துவது குறித்து பல பயனுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை காணமுடியும்.
national careers service how to find a job || NATIONAL CARRER SERVICE DETAILS IN TAMIL
SERVICES BY NATIONAL CAREER SERVICE IN TAMIL :
NATIONAL CAREER SERVICE-ல் பலவிதமான சேவைகள் வழங்கப்படுகிறது.
இது வேலை தேடுபவர்களுக்கு மட்டுமல்ல வேலை வழங்குபவர்களுக்கும் பயனுள்ள பல பலவிதமான நன்மைகள் இருக்கிறது.
கீழ்கண்ட பிரிவுகளின் அடிப்படையில் NATIONAL CAREER SERVICE திறன்பட இயங்குகிறது.
- Job Seeker
- Employer
- Government Employee
- Placement Organization
- Career Centre
- International Jobs
- Resources Counselors
JOBS IN NATIONAL CAREER SERVICE
- கடந்த இரண்டு ஆண்டுகளாக எண்ணற்றோர் NATIONAL CAREER SERVICE மூலமாக WORK FROM HOME வேலைகளுக்கு விண்ணப்பித்து அதன் பயிற்சிகளை நிறைவு செய்து தற்பொழுது வேலை செய்து வருகிறார்கள்.
- இந்த தளத்தில் 1, 75,176 வேலைகள் தற்சமயம் காலியாக உள்ளது. இவற்றுள் தனியார் துறை வேலைவாய்ப்புகள், அரசாங்க வேலை வாய்ப்புகள், உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அனைத்தும் அடங்கும்.
LOCAL JOBS IN NATIONAL CAREER SERVICE
- உள்நாட்டில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் காலியாக உள்ள வேலைகள் தொடர்பான தகவல்களை NATIONAL CAREER SERVICE வெப்சைட்டில் நீங்கள் காணமுடியும்.
- வேலைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் படித்து ஆராய்ந்த பின் தங்களுக்கு விருப்பமான வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
national career service portal new registration || national careers service how to apply in tamil
FOREIGN JOBS IN NATIONAL CAREER SERVICE
உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டிலுள்ள பல வேலைகள் NATIONAL CAREER SERVICE வெப்சைட்டில் சேகரிக்கப்பட்டு, அவ்வேளை தொடர்பான அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டிருக்கும்.
JOBS FOR DIFFERENTLY ABLED PERSONS
NCS வெப்சைட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்தியேகமாக பல வேலைகளின் விவரங்கள் இருக்கிறது. இவற்றிற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து அரசாங்கத்தின் பல சலுகைகள் மற்றும் பயிற்சிகளுடன் தங்களுக்கு விருப்பப்பட்ட வேலையில் சேர்ந்து பயன்பெறலாம்.
CAREER TRAINING IN NCS:
- NCS சார்பாக பல நிறுவனங்களில் இருந்து திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
- அவற்றுள் சிறந்து விளங்குபவர்களை அந்த நிறுவனங்களே வேலைக்குஎடுத்துக்கொள்கிறது.
- உதாரணமாக TCS நிறுவனத்தின் TCS iON பயிற்சிகள் NATIONAL CAREER SERVICE தளத்தின் வழியாக வழங்கப்படுகிறது.
national careers service job vacancies || national careers service how to apply online
HOW TO APPLY NATIONAL CAREER SERVICE IN TAMIL
- NCS தளத்தில் என்னென்ன வேலைகள் உள்ளது என தங்களால் NCS OFFICIAL WEBSITE காண முடியும். (OFFICIAL WEBSITE CLICK HERE)
- ஆனால் அதில் ஒரு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், முதலில் NCS வெப்சைட்டில் தங்களுக்கு ஒரு கணக்கை துவங்க வேண்டும்.
- அதற்கு ரெஜிஸ்டர் என்பதை கிளிக் செய்து தங்கள் வேலை தேடுபவரா, வேலை வழங்குபவரா, கவுன்சிலரா முதலிய கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் ஏதேனும் ஒன்று தேர்வு செய்ய வேண்டும்.
- வெப்சைட்டில் தங்களுக்கான கணக்கை துவங்கிய பின் தங்களைப் பற்றிய அடிப்படை விவரங்கள், தங்களை தொடர்பு கொள்வதற்கான விவரங்கள்(mobile no, email id, address) கல்வித்தகுதி ,முன்னனுபவம் குறித்தான தகவல்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து கேட்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து அதன்பின் தங்களுக்கு விருப்பப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
NATIONAL CAREER SERVICE DETAILS IN TAMIL
- ஆண்டு தோறும் பலர் NCS வெப்சைட்டில் வேலைக்கு விண்ணப்பித்து, திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் பங்கெடுத்து JOB FAIR மற்றும் CAREER CENTER தொடர்பான தகவல்களை பெற்று பயனடைந்து வருகிறார்கள். உங்களுக்கு தெரிந்த யாரேனும் வேலை தேடிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு NATIONAL CAREER SERVICE பற்றிய தகவல்களை தெரியப்படுத்தவும்.
- மத்திய அரசாங்கத்தின் கண்காணிப்பில் இயங்கி வரும் NATIONAL CAREER SERVICES (NCS) தொடர்பான தகவல்களை முடிந்தவரை தங்களின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
TO READ THIS POST IN ENGLISH | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
FAQ
WORK FROM HOME வேலைகளுக்கு NCS -ல் விண்ணப்பிக்கலாமா?
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் துறை வேலைகள் இன்றளவும் வெப்சைட்டில் காணக்கிடைக்கிறது அவற்றுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வெளிநாட்டு வேலைகளுக்கு மட்டும் NCS-ல் விண்ணப்பிக்க முடியுமா?
NCS மூலமாக பல உள்ளூர் வேலை வாய்ப்புகளைப் பெற முடியும்.
NCS-ல் விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதேனும் உண்டா?
18 வயது முதல் யார் வேண்டுமானாலும் NCS-ல் தங்களுக்கும் பொருந்தும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலை வழங்குபவர்களும் NCS-ல் கணக்கு துவங்க வேண்டுமா ?
ஆம், வேலை தேடுபவர்கள் மட்டுமல்லாது வேலை தர தயாராக இருப்பவர்களும் NCS-ல் தங்களுக்கென ஒரு கணக்கை துவங்க வேண்டும். அதன்மூலம் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கலிருந்து தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை பணி அமர்த்த முடியும்.
NCS-ன் toll free number என்ன?
NCS Toll Free Number 1800-425-1514
Hi sir this data entry job available sir I am joining you job sir but no investment no payment no security payment ok sir only for job ok sir this my number 7604802801 call me sir please