Table of Contents
ஏழை எளிய மக்களின் நலன் கருதி மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா PRADHAN MANTRI AWAS YOJANA 2.0 குறித்த அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம். இத்திட்டத்தை மத்திய அரசு 2015ஆம் ஆண்டு துவங்கியது. வீடு இல்லாத மக்களுக்கு மலிவு விலையில் வீடு கட்டித் தரும் அடிப்படை நோக்கத்தை கொண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த பதிவின் முக்கிய அம்சங்கள் :
- இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் BASIC DETAILS OF PRADHAN MANTRI AWAS YOJANA (PMAY)
- பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா PRADHAN MANTRI AWAS YOJANA(URBAN)
- விண்ணப்பிக்க இருக்க வேண்டிய தகுதிகள் ELIGIBLITY TO APLLY FOR PRADHAN MANTRI AWAS YOJANA(PMAY)
- ஆன்லைனில் விண்ணப்பிப்பது HOW TO APPLY IN ONLINE FOR PRADHAN MANTRI AWAS YOJANA
- விண்ணப்ப படிவத்தின் நிலை அறிதல் TRACK YOUR APPLICATION:
Pradhan Mantri Awas Yojana 2.0 tamil
BASIC DETAILS OF PRADHAN MANTRI AWAS YOJANA
மலிவு விலையில் வீடு கட்டி தரும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டமானது துவங்கப்பட்டு இருக்கிறது.
2022ஆம் ஆண்டுக்குள் மின்சாரம் எரிவாயு மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைந்த 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிப்பதே திட்டத்தின் இலக்காகும்.
இந்தியாவில் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருக்கும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் இத்திட்டம் வழங்குகிறது.
PRADHAN MANTRI AWAS YOJANA திட்டம் மக்களின் வசிப்பிடத்தை கொண்டு இருவிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகர்புற மக்களுக்காக PMAY URBAN கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு PMAY GRAMIN இரண்டு பிரிவுகளாக இத்திட்டம் அளிக்கப்பட்டுள்ளது.
Pradhan Mantri Awas Yojana 2.0 tamil
PRADHAN MANTRI AWAS YOJANA(URBAN)
- இத்திட்டம் சுமார் 4331 நகரங்கள் மற்றும் மாநகரங்கள் உள்ளடக்கியது. நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணையம் தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் மேம்பாட்டு பகுதி அறிவிக்கப்பட்ட திட்டமிடல் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு பொறுப்பான ஒவ்வொரு அதிகாரமும் இதில் அடங்கும் .
- வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் தரவுகளின்படி 1 ஜூலை 2019 நிலவரப்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் PMAY (URBAN) முன்னேற்றம் பின்வருமாறு
- ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகளில் எண்ணிக்கை 3.6 லட்சம்,
- நிறைவு செய்யப்பட்ட வீடுகளில் எண்ணிக்கை 6.8 லட்சம்,
- ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகளில் எண்ணிக்கை 3.9 லட்சம்
PRADHAN MANTRI AWAS YOJANA(RURAL)
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் முன்பு இந்திரா ஆவாஸ் யோஜனா என்ற பெயரில் அழைக்கப்பட்டது பின்னர் 2016 பெயர் மாற்றப்பட்டது. டெல்லி மற்றும் சண்டிகர் தவிர்த்து அனைத்து கிராமப்புற இந்தியாவிற்கும் வீட்டுவசதி மேம்படுத்துதல் இதன் இலக்காகும்
வீடற்றவர்கள் மற்றும் தரமற்ற வீடுகளில் வசிப்பவர்களுக்கு வீடுகளை கட்டித் தருவது இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். சமவெளிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூபாய் 1.2 லட்சம் வரையும்,
வடகிழக்கு, மலைப்பகுதியில் ஒருங்கிணைந்த நடவடிக்கை திட்டம் மற்றும் கடினமான பகுதிகளில் வாழ்பவர்களுக்கு 1.3 லட்சம் வரையும் இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது.
Pradhan Mantri Awas Yojana 2.0 tamil
PRADHAN MANTRI AWAS YOJANA ELIGIBLITY:
இத்திட்டத்திற்கு அப்ளை செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கு முன், அப்ளை செய்வதற்கு இருக்க வேண்டிய தகுதிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
- PRADHAN MANTRI AWAS YOJANA திட்டத்தில் இணைந்து பயன் அடைய நினைப்பவர்கள் கீழ்காணும் 4 விதமான வருமான வரம்புக்குள் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு வருமான வரம்பிற்குள் இருப்பவர்களும் அதற்குரிய மானியம் வழங்கப்படும்.
- குடும்பத்தின் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- குடும்பத்தின் ஆண்டு வருமானம்3 லட்சம் முதல் 6 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- குடும்பத்தின் ஆண்டு வருமானம் 6லட்சம் முதல் 12 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
- குடும்பத்தின் ஆண்டு வருமானம் 12 லட்சத்திற்கும் மேல் ஆனால் 18 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பிப்பவர் அல்லது விண்ணப்பிப்பவர் குடும்பத்திற்கு வேறு எங்கும் சொந்தவீடு இருத்தல் கூடாது.
- வேறு எந்த அரசாங்க வீட்டு வசதி திட்டத்திலும் பயன் பெற்றவராக இருத்தல் கூடாது.
PRADHAN MANTRI AWAS YOJANA APPLY IN ONLINE
- பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயனடைய தங்களுக்கு தகுதிகள் இருக்கிறது என்று தாங்கள் கருதினால் இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை கிளிக் செய்யவும்.
- மெயின் மெனு வில் உள்ள சிட்டிசன் அசஸ்மெண்ட் CITIZEN ASSESSMENT ஐ கிளிக் செய்து விண்ணப்பதாரர் வகையை தேர்வு செய்யவும்.
- அதன் பின்னர் வரும் திரையில் உங்களது ஆதார் விவரங்களை பதிவிட வேண்டும்.
- உங்களது தனிப்பட்ட விவரங்களான வருமானம், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் தற்போது குடியிருப்பு முகவரியுடன் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
- கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
TRACK YOUR PMAY APPLICATION STATUS:
- ஆன்லைனில் விண்ணப்பித்த பின் தங்களின் விண்ணப்பப் படிவத்தின் நிலைகுறித்து தாங்களே பார்த்து தெரிந்து கொள்ளும் வசதியும் இந்த இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது.
- TRACK YOUR APPLICATION என்பதை கிளிக் செய்து தங்களின் சுய விவரங்களை கொடுத்து PMAY திட்டத்தில் இணைவதற்கான தங்களின் அப்ளிகேஷனின் நிலையை தெரிந்து கொள்ள முடியும்.
- PRADHAN MANTRI AWAS YOJANA(PMAY) திட்டம் குறித்த அனைத்து தகவல்களையும் இப்பொழுது தெரிந்து கொண்டோம். வீடற்ற அல்லது தரமற்ற வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு இத்திட்டம் குறித்த தகவல்களை தெரியப்படுத்தவும்.
- இது போன்ற பயனுள்ள அரசாங்க திட்டங்களைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள டெலிகிராம் குரூப்பில் இணைந்து கொள்ளவும் மற்றும் DINGU MEDIA யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
✅IMPORTANT LINKS :
PMAY WEBSITE LINK : DOWNLOAD PMAY VIDEO LINK : DOWNLOAD
Pingback: தமிழ்நாடு அரசின் இலவச வீடு பெறுவது எப்படி? - DINGU MEDIA