Table of Contents
தமிழக அரசாங்கத்தின் சார்பாக வெளிநாட்டில் வேலை செய்ய நினைப்பவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் OVERSEAS MANPOWER CORPORATION LIMITED பற்றிய தகவல்களை ஒன்றன்பின் ஒன்றாக காணலாம்.
OMCL-ல் விண்ணப்பிக்கப்படும் வேலைகளுக்கு எந்தவிதமான CONSULTATION FEE வசூலிக்கப்படுவதில்லை. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இந்நிறுவனம் இருப்பதினால் எந்தவிதமான தயக்கமும் பயமும் இன்றி விண்ணப்பிக்கலாம்.
OMCL VELINATTU VELAI VAIPPU TAMIL நோக்கம்:
- தகுதியும் திறமையும் வாய்ந்த வேலை தேடுபவர்களை கண்டறிந்து அவர்களின் கல்வித் தகுதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற வேலையை பெற்று தருவது.
- வெளிநாட்டில் மட்டுமல்லாது உள்ளூரிலும் பொருத்தமான வேலையை பெற உதவி செய்வது.
- உரிய நிறுவனங்களிடமிருந்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு கையெழுத்து பெற்று தர உதவுவது.
- வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையில் பயிற்சிகள் வழங்குவது.
- வெளிநாட்டு வேலைக்கு தேர்வானவர்களுக்கு உதவும் வகையில் அவர்களின் TICKET BOOKING முதலிய பணிகளை திறம்பட செய்து தருவது.
OMCL VELINATTU VELAI VAIPPU : EDUCATIONAL QUALIFICATION
- OMCL-ல் விண்ணப்பித்து வெளிநாட்டில் வேலையில் சேர குறிப்பிட்ட கல்வித் தகுதி என்று எதுவும் கிடையாது.
- குறைந்தது 10 படித்தவர்கள் முதல் அதிகபட்சம் மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சி படிப்பு படித்தவர்கள் வரை அனைவருக்குமான வேலைக்கு இங்கு விண்ணப்பித்து தேர்வாக முடியும்.
எந்தெந்த நாடுகளில் வேலை?:
வெளிநாடுகளில் உள்ள தனியார் கம்பெனிகளில் மட்டுமல்லாது வெளிநாட்டில் உள்ள அரசு நிறுவனங்களிலும் வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
GOVERNMENT JOB IN OMCL அரசு நிறுவனங்கள்:
சவுதி அரேபியா, குவைத், துபாய், மாலத்தீவு போன்ற நாடுகளின் அரசு நிறுவனங்களில் காலியிடங்கள் இருந்தால் OMCL –ன் உதவியுடன் நீங்கள் விண்ணப்பிக்க முடியும்
PRIVATE JOB IN OMCL தனியார் நிறுவனங்கள்:
குவைத், பங்களாதேஷ், சூடன், துபாய், பிரான்ஸ், ஓமன், பஹ்ரைன், லிபியா,சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் உள்ள தனியார் நிறுவனங்களின் வேலைகளுக்கு அவர்களின் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை பொருத்து நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
LOCAL JOBS IN OMCL உள்நாட்டு வேலைகளுக்கும் விண்ணப்பிக்கலாம்:
வெளிநாட்டு கம்பெனிகளுக்கு மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள தலைசிறந்த நிறுவனங்களுக்கு OMCL மூலமாக விண்ணப்பிக்க முடியும்.
ELIGIBLITY TO APPLY IN OMCL :
- வேலைகளுக்கு பதிவு செய்துகொள்ள இருக்க வேண்டிய தகுதிகள்:
- குறைந்தது 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
- PASSPORT இருக்க வேண்டும்.
- ஆன்லைன் மூலமாகவோ அல்லது சென்னை தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆஃப்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.
- ஒரு முறை பதிவு செய்யப்பட்டால் அது 48 மாதங்களுக்கு செயலில் இருக்கும்.
REGISTRATION FEE IN OMCL: பதிவுக்கட்டணம்
- Registration செய்து கொள்பவரின் கல்வித் தகுதியைப் பொறுத்து விண்ணப்ப கட்டணமானது மாறுதலுக்கு உட்படுகிறது
- SKILLED/ SEMI SKILLED /UNSKILLED WORKERS= Rs 750
- DIPLOMA HOLDERS/ UNDERGRADUATES (ARTS, SCIENCE, MATHEMATICS)= Rs 750
- STAFF NURSE AND OTHER PARAMEDICAL PROFESSIONALS/ POST GRADUATES = Rs 1200
- MBBS DOCTORS /POST GRADUATES = Rs 2000
How to search job: எப்படி வேலை தேடுவது ?
OMCL -ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் விரும்பும் JOB CATEGORY- யையும் வேலை செய்ய விரும்பும் நாட்டையும் SELECT செய்து தங்களுக்கான வேலையை தேட முடியும்.

HOW TO APPLY OMCL VELINATTU VELAI VAIPPU?
- OVERSEAS MANPOWER CORPORATION LIMITED அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்யவும். https://www.omcmanpower.com/index.php
- விண்ணப்பிப்பதற்கு முதலில் தங்களின் விவரங்களை கொடுத்து SIGN UP செய்ய வேண்டும் .
- NEW CANDIDATE REGISTRATION பெயர், முகவரி, தொலைபேசி எண், பிறந்த தேதி, PASSWORD ஆகிய விவரங்களை கொடுத்து TERMS AND CONDITIONS-ஐ கிளிக் செய்து ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.

- தங்களுக்கான கணக்கை உருவாக்கிய பின் மொபைல் நம்பருக்கு வரும் OTP யை வைத்து மொபைல் நம்பரை verify செய்து கொள்ளவேண்டும்.
- அதன்பின் தங்களின் அடிப்படை விவரங்கள், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, கல்வி தொடர்பான தகவல்கள், முன்னனுபவம்,தெரிந்த மொழிகள், சிறப்பு தேர்வுகள், பாஸ்போர்ட் தொடர்பான தகவல்கள், டிரைவிங் லைசன்ஸ் தொடர்பான தகவல்கள், போட்டோ மற்றும் கையெழுத்தை upload ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.

- பின் தங்களுக்கு உரிய REGISTRATION FEE -ஐ செலுத்த வேண்டும்.
- அணைத்து விவரங்களையும் சரியாக கொடுத்த பின் உங்களுக்கு வழங்கப்படும் USERNAME மற்றும் PASSWORD -ஐ வைத்து உங்களுக்கு விருப்பமான வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
போலி கன்சல்டன்ஸிகளை நம்பி லட்சக்கணக்கில் பணம் ஏமாறுவதை தவிர்த்து அரசாங்க மேற்பார்வையின் கீழ் இயங்கி வரும் OVERSEAS MANPOWER CORPORATION LIMITED(OMCL)- ல் தங்களுக்கான வேலைக்கு அப்ளை செய்து பயன்பெறவும்.
வெளிநாட்டு வேலை கனவோடு இருக்கும் தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த வலைப்பக்கத்தை ஷேர் செய்யவும். நன்றி.
TO READ THIS POST IN ENGLISH | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
FAQ
நான் 12வது வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்கிறேன். நான் OMCL- ல் விண்ணப்பிக்கலாமா?
தாராளமாக விண்ணப்பிக்கலாம் பத்தாவது படித்தவர்கள் உட்பட அனைத்து கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை OMCL- ல் நிறைய உள்ளன .
சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு OMCL-ல் விண்ணப்பிக்க முடியுமா?
முடியும், சிங்கப்பூரில் உள்ள பல தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுடன் OMCL உடன்படிக்கையை ஈடுபட்டுள்ளது. அதனால் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
OMCL- ல் விண்ணப்பிக்க எவ்வளவு CONSULATION FEE கேட்கப்படும்?
இது அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறை என்பதால் எந்தவிதமான CONSULATION FEE வசூலிக்கப்படுவதில்லை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை REGISTRATION FEE மட்டும் செலுத்த வேண்டும்.
நான் நர்சிங் இறுதியாண்டு படிக்கிறேன் நான் OMCL STAFF NURSE JOBS-கு விண்ணப்பிக்கலாமா?
தாராளமாக விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டுமல்லாது இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
OMCL வெப்சைட்டில் என்னென்ன வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்?
Machine operators, staff nurse, cook, maids, specialist consultants, shuttering carpenter, consultant doctor, lab technician, X Ray technician ஆகிய வேலைக்கு OMCL – ல் விண்ணப்பிக்க முடியும்.
B. Com
Hotel job
Bscnursing
I am hvac mechanical job available
I am competed diplomo Civil Engineer. I have 10 years experience. You have aborad job opportunities plz inform me.
(Jcb&loader operator)
Backhoe loader & wheel loader Operator