Skip to content
PASUMAI VEEDU THITTAM
Home » பசுமை வீடு திட்டம் முழுத்தகவல் || HOW TO APPLY PASUMAI VEEDU THITTAM

பசுமை வீடு திட்டம் முழுத்தகவல் || HOW TO APPLY PASUMAI VEEDU THITTAM

ஏழை மக்களின் வீடுகட்டும் கனவை நிறைவேற்றும் நோக்கத்தோடு முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய வீடு கட்டித்தரும் திட்டம் பசுமை வீடு திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பசுமை வீடு திட்டத்தை ஆங்கிலத்தில் CHIEF MINISTER’S SOLAR POWERED GREEN HOUSE SCHEME (CMSPGHS) என்று அழைக்கிறார்கள்

பசுமை வீடு திட்டம் நோக்கம் :

ஏழைகளுக்கு வீடு கட்டி தருவதோடு பசுமை எரிசக்தியை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்
இது தமிழக அரசின் முன்னோடி திட்டமாகும்.
பசுமை வீடு திட்டத்தின் கீழ் 300 சதுர அடி பரப்பளவில் சூரிய மின்சக்தி விளக்குகளுடன் வீடுகள் கட்டி தரப்படுகிறது

PASUMAI VEEDU THITTAM தொகை:

வீட்டிற்கான கட்டுமான தொகை -1,80,000
சூரிய மின்சக்தி விளக்குகள் பொருத்துவதற்கான தொகை-30,000
மொத்தம்-2,10,000

பசுமை வீடு திட்டம் இட ஒதுக்கீடு:

மொத்த ஒதுக்கீட்டில் வீடுகள் கீழ்கண்டவாறு ஒதுக்கீடு தேவைப்படுகிறது.

  • ஆதிதிராவிடர்-29%
  • பழங்குடியினர்-1%
  • இதர பிரிவினர் 70%
  • மாவட்ட வாரியான ஒதுக்கீட்டில் 4 விழுக்காடு மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
PASUMAI VEEDU THITTAM

PASUMAI VEEDU THITTAM முன்னுரிமை:

பயனாளர்களின் பட்டியல் தயாரிக்கப்படும் பொழுது,

  • விதவைகள்
  • மாற்றுத்திறனாளிகள்
  • ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்
  • முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் துணை ராணுவ படையினர்
  • பெண்களை தலைவர்களாக கொண்ட குடும்பங்கள்
  • திருநங்கைகள்
  • துணை இயக்குன எச்ஐவி எய்ட்ஸ் காசநோய் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சான்றளிக்க பட்டவர்கள்
  • தீ விபத்து
  • வெள்ளம் போன்ற இதர இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள்
  • மனநலம் குன்றியோர் உள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

பசுமை வீடு திட்டம்- சிறப்பம்சங்கள்:

  • ஊரக பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அனைவரும் இத் திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவில் உள்ளது.
  • இது முழுக்க முழுக்க தமிழக அரசாங்கத்தின் முன்னெடுப்பில் செயல்படுத்தப்படும் திட்டமாகும்.
  • இந்த பசுமை வீடு திட்டத்தின் திட்ட மதிப்பு 2.10 லட்சம் ஆகும்.
  • வீடுகள் வசிக்கும் அறை, படுக்கை அறை, சமையலறை, கழிப்பறை ஆகிய வசதிகளுடன் கட்டித்தரப்படும். மேலும் மழை நீர் சேகரிப்பு அமைத்துத் தரப்படும்
  • கட்டப்படும் வீடுகளில் சூரிய ஒளி சக்தியில் எரியும் விளக்குகள் அமைக்கப்படும்.
  • பயனாளிகள் விருப்பப்பட்டால் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்பையும் பெற்றுக்கொள்ளலாம்
  • பசுமை வீடுகளானது பயனாளிகளுக்கு சொந்தமான இடத்தில் கட்டித்தரப்படும் இதற்காக எந்த வித நீல எடுக்கும் செய்யப்படமாட்டாது
  • வீட்டுமனை பட்டா அல்லது சரியான நில உரிமை உள்ளவர்கள் மட்டுமே பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு பெற தகுதியானவர்கள்
READ ALSO  கூட்டுறவு வங்கி கடன் திட்டம் | தமிழ்நாடு கூட்டுறவு வங்கி புதிய கடன் திட்டம் | கூட்டுறவு வங்கிகளில் மாணவர்களுக்கு கடனுதவி திட்டம்

PASUMAI VEEDU THITTAM ELIGIBILITY :

  • விண்ணப்பிப்பவர் விண்ணப்பிக்கும் கிராம ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும்
  • அந்த கிராம ஊராட்சியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களில் நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்
  • 300 சதுர அடிக்கும் குறையாமல் சொந்த நிலம் வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும்
  • குடும்ப தலைவரின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ வில்லங்கமற்ற வீட்டுமனை பட்டா இருக்க வேண்டும்
  • விண்ணப்பிப்பவர்க்கும் அவர் குடும்பத்தினருக்கும் அந்த குறிப்பிட்ட கிராம ஊராட்சியில் அல்லது வேறு எந்த இடத்திலும் கான்கிரீட் கூரை போட்ட வீடு இருக்கக்கூடாது
  • மத்திய மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டத்தில் பயன் பெற்றவராக இருத்தல் கூடாது

பசுமை வீடு திட்டம் – நிபந்தனைகள்:

  • மையல் அறை மற்றும் படுக்கை அறை மட்டும் சிறிய மாறுதலுக்கு உட்படுத்தலாம்.
  • இந்த திட்டத்தின் சின்னத்தை செராமிக் ஓடுகளில் வடிவமைத்த அனைவருக்கும் தெரியும் இடத்தில் பதிக்க வேண்டும்.
  • வீடுகளில் திட்டத்தின் பெயர் பயனாளிகளின் பெயர் வீடு கட்டப்பட்டஆண்டு ஆகிய விவரங்களை அனைவருக்கும் தெரியும் விதத்தில் தெரியும் வண்ணத்தில் எழுதி வைக்கப்பட வேண்டும்.
  • பயனாளர்கள் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள்?
  • மாநில அளவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் கட்டப்பட உள்ள வீடுகளின் எண்ணிக்கையை மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்வார்.
  • மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் கிராம ஊராட்சிகளுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்ய முடிவுகள் எடுப்பார்.
  • தகுதிவாய்ந்த பயனாளிகள் பட்டியல் தேர்வு செய்வதற்கு கிராம அளவிலான குழு அமைக்கப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் தனி அலுவலர் ஆகியோர் அடங்கிய குழு கிராம ஊராட்சியில் உள்ள ஏழை மக்களில் இருந்து தகுதியானவர்களை தேர்வு செய்து அதற்கான ஒப்புதலை கிராம் கிராமசபை கூட்டத்தில் பெறுவார்கள்.
  • இதனடிப்படையிலேயே பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கான பயனாளர்களின் தேர்வு அமையும்.

PASUMAI VEEDU THITTAM STAGE’S:

பயனாளிகள் மேற்கொள்ளும் கட்டுமான பணிகளுக்காக தொகையை கீழ்கண்டவாறு நான்கு நிலைகளில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

  • அடித்தள நிலை
  • ஜன்னல் மட்ட நிலை
  • கூரை வேயப்பட்ட நிலை
  • முடிவுற்ற நிலை

பசுமை வீடு திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?

இந்தத் திட்டத்தை தங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் இத்திட்டம் குறித்து மேலும் தகவல்களை நேரிடையாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சென்று கேட்டறிந்து விண்ணப்பிக்கலாம்.

மாநில அளவில்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் சென்னை-15

மாவட்ட அளவில்:
மாவட்ட ஆட்சித்தலைவர்
திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
உதவி திட்ட அலுவலர் (வீட்டுவசதி மற்றும் சுகாதாரம்)

READ ALSO  குடும்பத் தலைவிக்கு 1000 || Tamilnadu Free Scheme || kudumba thalaiviku Rs1000 eligibility criteria

வட்டார அளவில் :
வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி)
வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)

கிராம ஊராட்சி அளவில்:
கிராம ஊராட்சி தலைவர் தனி அலுவலர் ஆகியவர்களிடம் விவரங்களை கேட்டறிந்து உடனே விண்ணப்பிக்கவும்.

வீடற்றவர்களின் கவலையை போக்க தமிழக அரசாங்கம் முன்னெடுத்து இருக்கும் பசுமை வீடு திட்டம் குறித்த அனைத்து தகவல்களையும் இப்பொழுது கண்டோம். இது போன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து வாசிக்க இந்த DINGU MEDIA இணைய தளத்தை பின்தொடரவும்.

TO READ THIS POST IN ENGLISH CLICK HERE
TO VIEW THIS DETAILS IN VIDEOCLICK HERE
PASUMAI VEEDU THITTAM -DETAILS

FAQ:

பசுமை வீடு திட்டத்தின் கீழ் இலவசமாக வீடு வழங்கப்படுகிறதா ?

பசுமை வீடு திட்டம் இலவச வீடு வழங்கும் திட்டம் இல்லை. பசுமை வீடு திட்டத்தின் கீழ் யாருக்கும் இலவசமாக வீடு வழங்கப்படாது. வீடற்ற ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக 2,10,000 ரூபாயை உதவியாக தமிழக அரசு வழங்கும்.

பசுமை வீடு திட்டத்தின் கீழ் எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது?

இத்திட்டத்தின் கீழ் 2,10,000 ரூபாய் 4 கட்டங்களாக தமிழக அரசாங்கம் ஏழை எளிய வீடு கட்டுவோருக்கு வழங்குகிறது

என்னிடம் சொந்தமான நிலம் இல்லை. நான் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளேன். நான் பசுமை வீடு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து உதவி பெற முடியுமா?

இத்திட்டத்தின்கீழ் சொந்தமாக இடம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வீடு கட்டித் தர தமிழக அரசாங்கம் நிதி உதவி வழங்குகிறது.

நான் PMAY திட்டத்தின் கீழ் உதவி பெற்று வீடு கட்டியுள்ளேன். இப்பொழுது இந்தத் திட்டத்திலும் விண்ணப்பிக்கலாமா?

எந்த ஒரு வீடு கட்டும் திட்டத்திலும் முன்பு பயன்பெறாதவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பசுமை வீடு திட்டத்திற்கு ONLINE-ல் எப்படி விண்ணப்பிப்பது?

பசுமை வீடு திட்டத்தில் பயன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது.உங்கள் பகுதியின் VAO இடம் சென்று இத்திட்டம் குறித்த தகவல்களை கேட்டறிந்து பின் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கவும்

1 thought on “பசுமை வீடு திட்டம் முழுத்தகவல் || HOW TO APPLY PASUMAI VEEDU THITTAM”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *