Table of Contents
Post Office Best 9 Savings Scheme in Tamil:
இந்திய தபால் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் 9 முக்கியமான சேமிப்பு திட்டங்களை பற்றிய முழு விவரங்களை பின்வருமாறு காண்போம்.இந்த 9 திட்டங்கள் குறித்த அனைத்து அடிப்படைத் தகவல்களையும் தெரிந்து கொண்டு தங்களுக்கு எது பொருந்தும் என்று முடிவு செய்தபின் அத்திட்டத்தில் முதலீடு செய்யவும்.
குறிப்பாக ஒவ்வொரு திட்டத்தின் கீழ் செலுத்தப்பட வேண்டிய குறைந்தபட்ச தொகை என்ன? அதிகபட்ச தொகை என்ன? தாங்கள் சேமித்து வரும் தொகையானது எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாகும் முதலிய அனைத்து தகவல்களையும் பின்வருமாறு தெரிந்துகொள்வோம்.
POST OFFICE BEST 9 SAVINGS SCHEME IN TAMIL
- POST OFFICE SAVINGS ACCOUNT தபால் அலுவலகம் வங்கி சேமிப்பு கணக்கு
- 5 YEAR POST OFFICE RECURRING ACCOUNT தபால் அலுவலக தொடர் வைப்பு கணக்கு
- POST OFFICE TIME DEPOSIT ACCOUNT தபால் அலுவலக நேர வைத்து கணக்கு
- POST OFFICE MONTHLY INCOME SCHEME தபால் அலுவலக மாத வருமான திட்டம்
- SENIOR CITIZEN SAVING SCHEME மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
- 15 YEAR PUBLIC PROVIDENT FUND பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்
- NATIONAL SAVING CERTIFICATE தேசிய சேமிப்பு சான்றிதழ்
- KISAN VIKAS PATRA தேசிய சேமிப்பு சான்றிதழ்
- POST OFFICE SUKANYA SAMRIDDHI ACCOUNTதபால் அலுவலக சுகன்யா சம்ரிதி கணக்கு
Post Office Best 9 Savings Scheme IN TAMIL || போஸ்ட் ஆபீஸ் BEST SAVINGS SCHEME IN TAMIL
POST OFFICE SAVINGS ACCOUNT:
- குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து நீங்கள் சேமிக்க தூங்கலாம். தனி நபராகவோ அல்லது joint account கவோ நீங்கள் உங்கள் கணக்கை துவங்க முடியும்.
- பத்தாயிரம் ரூபாய் வரை வரிச் சலுகை உண்டு. ஒரு போஸ்ட் ஆபீஸில் இருந்து மற்றொரு போஸ்ட் ஆபீஸ்க்கு தங்களின் கணக்கை மாற்றிக் கொள்ள முடியும்.
- கிராமப்புறங்களிலும் இத்திட்டமானது நடைமுறையில் உள்ளது
- இத்திட்டத்தின்கீழ் தாங்கள் சேமிக்கும் தொகைக்கு 4% வட்டி வழங்கப்படுகிறது.
- மேலும் நீங்கள் சேமிக்கும் பணமானது 18 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
போஸ்ட் ஆபீஸ் BEST சேமிப்பு திட்டங்கள் முழு விளக்கம் || போஸ்ட் ஆபீஸ் BEST SAVINGS SCHEME IN TAMIL
5 YEAR POST OFFICE RECURRING ACCOUNT:
- இத்திட்டத்தின் கால அளவு ஐந்து வருடங்கள் ஆகும் மாதம் மாதம் 100 ரூபாய் முதல் தங்கள் சேமிப்பு துவங்க முடியும் நீங்கள் சேமிக்கும் தொகைக்கு 5.8% வட்டி வழங்கப்படுகிறது.
- இந்தத் திட்டத்தில் சிறப்பம்சம் என்னவென்றால் உங்களுக்கு தரப்படும் வட்டி கூட்டு வட்டி, அதுமட்டுமன்றி 12 தவணைகள் சரியாக பணம் செலுத்தி வந்தால் உங்க தொகையில் இருந்து 50 சதவீதத்தை கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
- இந்த போஸ்ட் ஆபீஸ் RD கணக்கில் நீங்கள் சேமிக்கும் தொகையானது 12 வருடங்களில் இரட்டிப்பாகும்.
Post Office Best 9 Savings Scheme IN TAMIL || போஸ்ட் ஆபீஸ் BEST SAVINGS SCHEME IN TAMIL
POST OFFICE TIME DEPOSIT ACCOUNT:
- இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு வருடம் இரண்டு வருடம் மூன்று வருடம் மற்றும் ஐந்து வருடம் என தங்களுக்கு தேவையான கால அளவை தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.
- குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் சேமிக்க முடியும், இத்திட்டத்தில் வழங்கப்படும் வட்டி ஆனது ஆண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்படும்.
- 1 ,2 மற்றும் 3 வருடத்திற்கு 5.5% வட்டி வழங்கப்படுகிறது. 5 வருடங்களை கால அளவாக கொண்ட சேமிப்புக் கணக்கிற்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது.
- இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் சேமிக்கும் தொகையானது 13 வருடங்களில் இரட்டிப்பாகும்.
Post Office Best 9 Savings Scheme IN TAMIL || போஸ்ட் ஆபீஸ் BEST SAVINGS SCHEME IN TAMIL
POST OFFICE MONTHLY INCOME SCHEME
- இத்திட்டத்தில் ஆயிரம் ரூபாய் முதல் 4.5 லட்சம் ரூபாய் வரை அக்கௌன்ட் துவங்குபவர்கள் சேமிக்க முடியும் JOINT ACCOUNT துவங்குபவர்கள் ஆயிரம் ரூபாய் முதல் 9 லட்சம் வரை சேமிக்க முடியும்.
- இத்திட்டத்தில் சேமித்து வந்தால் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வருமானமாக பெற முடியும்.
- இத்திட்டத்தின் கீழ் தாங்கள் சேமிக்கும் தொகைக்கு 6.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
- இத்திட்டத்தின் கணக்கை பாதியில் நிறுத்திக் கொள்ள நினைப்பவர்கள் அதனை ஒரு வருட கால அளவிற்கு முன் செய்ய இயலாது.
- MIS திட்டத்தில் முதலீடு செய்யும் பணமானது 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
போஸ்ட் ஆபீஸ் BEST சேமிப்பு திட்டங்கள் முழு விளக்கம் || போஸ்ட் ஆபீஸ் BEST SAVINGS SCHEME IN TAMIL
SENIOR CITIZEN SAVING SCHEME:
- மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்(SCSS) திட்டத்தில் தாங்கள் சேமிக்கும் தொகைக்கு 7.4 வட்டி வழங்கப்படுகிறது.
- மூத்த குடிமக்களுக்கான உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் கணக்கை துவங்க முடியும்.
- குறைந்தது 1000 ரூபாய் முதல் அதிகம் அதிகபட்சம் 15 லட்சம் வரை ஒரே தவணையில் செலுத்தி சேமிக்க முடியும்.
- அதிக வட்டி தரக்கூடிய இத்திட்டத்தில் தாங்கள் முதலீடு செய்யும் பணமானது 9 ஆண்டுகளிலேயே இரட்டிப்பாகி விடும்.
Post Office Best 9 Savings Scheme IN TAMIL || போஸ்ட் ஆபீஸ் BEST SAVINGS SCHEME IN TAMIL
15 YEAR PUBLIC PROVIDENT FUND:
- மாத சம்பளம் வாங்குபவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த PPF திட்டத்தில் 1.5 லட்சம் வரை TAX DEDUCTION வழங்கப்படுகிறது.
- குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை இத்திட்டத்தின்கீழ் சேமிக்க முடியும்.
- ஓர் ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டி இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கொருமுறை வட்டியானது கூட்டுவட்டி ஆக மாறும்.
- இந்த திட்டத்தின் பெறப்படும் வட்டிக்கு எந்தவிதமான வரியும் கிடையாது.
- இதே வட்டி விகிதம் தொடருமாயின், தாங்கள் சேமிக்கும் தொகையானது 10 வருடங்களில் இரட்டிப்பாகும்.
Post Office Best 9 Savings Scheme IN TAMIL || போஸ்ட் ஆபீஸ் BEST SAVINGS SCHEME IN TAMIL
NATIONAL SAVING CERTIFICATE (NSC):
- இந்த சேமிப்பு கணக்கு ஐந்து வருடங்ககளை கால அளவைக் கொண்டது. குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் இத்திட்டத்தின் கீழ் சேமிக்கலாம்.
- இந்த திட்டத்தில் 6.8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு ஒருமுறை இத்திட்டத்தில் சேமிக்கப்படும் தொகைக்கான வட்டி கூட்டு வட்டியாக மாறுகிறது.
- ஒரு தனிநபர் எத்தனை சேமிப்பு கணக்கு வேண்டுமானாலும் துவங்கி கொள்ளலாம். இந்த திட்டத்தில் சேமிக்கப்படும் தொகைக்கான அத்தாட்சியை மற்ற வங்கிகளிலும் கம்பெனிகளிலும் கடன் பெறும் பொழுது COLLATERAL ஆக பயன்படுத்த முடியும்.
- இதே வட்டிவீதம் தொடருமாயின், இந்தத் திட்டத்தின் கீழ் தாங்கள் முதலீடு செய்யும் தொகை 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
Post Office Best 9 Savings Scheme IN TAMIL
KISAN VIKAS PATRA (தேசிய சேமிப்பு சான்றிதழ்):
- இத்திட்டத்தின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் KISAN VIKAS PATRA -வின் கால அளவு நிறைவுற்ற பின் AFTER MATURITY தாங்கள் சேமிக்கும் தொகையானது இரட்டிப்பாகும்.
- குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் நீங்கள் சேமிக்க முடியும் .2020-21 ன் நிலவரப்படி இத்திட்டத்தின் கீழ் சேமிக்கும் தொகைக்கு 6.9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது
- .இத்திட்டத்தின் கால அளவானது 124 மாதங்களாகும் அதாவது பத்து வருடம் நான்கு மாதங்கள். இந்த 124 மாதங்களுக்குப் பின் தங்களின் தொகை இரட்டிப்பாகும்.
KISAN VIKAS PATRA தொடர்பான ஆச்சரிய மூட்டும் தகவல்களுக்கு கிளிக் செய்யவும். CLICK HERE
POST OFFICE SUKANYA SAMRIDDHI YOJANA:
- போஸ்ட் ஆபீஸில் நடைமுறையில் உள்ள இடங்களிலேயே மிகவும் பிரபலமான திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா.
- பெண் குழந்தைகளின் நலனுக்காக இத்திட்டத்தை பிரத்தியேகமாக உருவாக்கி இருக்கிறார்கள் 10 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தையின் பெயரில் இந்த சேமிப்பு கணக்கை துவங்க முடியும்.
- ஒரு நிதி ஆண்டில் குறைந்தது 250 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை பெண் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்யலாம்.
- தற்போதைய நிலவரப்படி 7.6% இத்திட்டத்தில் சேமிக்கப்படும் தொகை வழங்கப்படுகிறது.
- ஒரு குழந்தைக்கு 18 வயது ஆகும்வரை அக்குழந்தையின் பெற்றோரோ அல்லது காப்பாளரோ இந்த கணக்கை நிர்வகிப்பர்.
- இத்திட்டத்தின்கீழ் சேமிக்கும் தொகையானது 9 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
- சுகன்யா சம்ரிதி யோஜனா SUKANYA SAMRIDDHI YOJANA திட்டம் குறித்த முழுமையான விளக்கங்களை தெரிந்து கொண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்ய கிளிக் செய்யவும்
- போஸ்ட் ஆபீஸில் நடைமுறையிலுள்ள சிறந்த சேமிப்பு திட்டங்களை பற்றி பார்த்தோம். இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதமானது ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை மாறுதலுக்கு உட்பட்டவை(சிறிய அளவில்)
இந்த 9 POST OFFICE SAVINGS SCHEMES ஏதேனும் ஒன்றில் சேமிக்கத் துவங்கி உங்கள் எதிர்காலம் குறித்த கவலையில் இருந்து விடுபடுங்கள்,
இது போன்ற பயனுள்ள அரசாங்க திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ள DINGU MEDIA YOUTUBE CHANNEL -ஐசப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும் .
✅IMPORTANT KEYS DISCUSSED :
Super work dady.