Table of Contents
👉🏼 நமது இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் திட்டத்தில் ஒன்று தான் தபால் துறை மாத வருமான திட்டம்.
👉🏼 இந்தியா முழுவதிலும் 1.5 லட்சத்திற்கும் மேலான தபால் நிலையங்களில் இந்த தபால் துறை மாத வருமான திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
👉🏼 தற்போதைய நிலவரப்படி வருடத்திற்கு 6.6 % சதவீத வட்டியானது இந்த தபால் துறை மாத வருமான திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வளவு வட்டி தரக்கூடிய மிகவும் பாதுகாப்பான தபால் துறை மாத வருமான திட்டம் பற்றிய முழு தகவலும் இந்தப் பதிவில் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
தபால் துறை மாத வருமான திட்டம் என்றால் என்ன?
தபால் துறை மாத வருமான திட்டத்தில் பயன்பெற நீங்கள் தபால் நிலையத்தில் ஒரு சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும். இந்த சேமிப்பு கணக்கு தனி நபராகவோ அல்லது கூட்டாகவும் தொடங்கலாம்.
- தனி நபர் கணக்கில் மாதம்தோறும் குறைந்தபட்சம் ரூ.1,500 முதல் அதிகபட்சம் ரூ.4.5லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
- கூட்டு நபர் கணக்கில் மாதம்தோறும் குறைந்தபட்சம் ரூ.1,500 முதல் அதிகபட்சம் ரூ.9லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
- மைனர் நபர் கணக்கில் மாதம்தோறும் குறைந்தபட்சம் ரூ.1,500 முதல் அதிகபட்சம் ரூ.3லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
மாத வருமான திட்டம் முக்கிய அம்சங்கள்
தபால் துறை மாத வருமான திட்டத்தில் நீங்கள் பயன்பெறும் முன்பாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில முக்கிய தகவல்களை தெரிந்து இருப்பது மிகவும் அவசியம்.
- முதிர்வு காலம் : இந்த மாத வருமான திட்டம் திட்டத்தின் முடிவு காலம் ஐந்து ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு முன்பாக நீங்கள் உங்கள் தொகையை எடுக்க முடியாது ( அபராதம் ).
- அபராதம் :முதிர்வு காலமான ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே உங்கள் முதலீட்டு பணத்தை நீங்கள் எடுக்க விரும்பினால் அதற்கான அபராதம் விதிக்கப்படும்.
- 1 – 3 ஆண்டுகளில் எடுக்கும் தொகைக்கு 2% அபராதம்
- 4 – 5 ஆண்டுகளில் எடுக்கும் தொகைக்கு 1% அபராதம்
- முகவரி மாற்றம் : இது இந்திய அரசின் தபால் துறையை சார்ந்த முதலீடு என்பதால் நீங்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திற்கு இடம் மாறினாலும் அங்குள்ள தபால் நிலையத்திற்கு சென்று உங்கள் முகவரியை மாற்றிக் கொள்ளலாம்
- மைனர் நபர் கணக்கு : இந்த கணக்கு தொடங்க குறைந்தபட்சமாக 10 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் அந்த நபரின் 18 வயதிற்குள் வயதிற்குப் பிறகு இந்தத் தொகையை எடுத்துக் கொள்ள முடியும்
- கூட்டு நபர் கணக்கு : அதிகபட்சமாக 3 நபர்கள் இணைந்து இந்த கணக்கை தொடங்கலாம் இதில் அதிகபட்சமாக 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம்
- வாரிசு : மற்ற வங்கி கணக்குகளை போலவே இந்த கணக்கிலும் உங்களுக்கு தேவையான ஒரு நபரை வாரிசாக நிர்ணயம் செய்யலாம்.
- வரி விலக்கு (TDS): இந்த தபால் துறை மாத வருமான திட்டத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று இதில் நீங்கள் பெறப்போகும் தொகைக்கு எந்த ஒரு வரியும் பொருந்தாது.
தபால் துறை மாத வருமான திட்டத்தின் நன்மைகள்
நிலையான வருமானத்தை நீங்கள் எதிர்பார்க்கும் நபராக இருந்தால், தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கக்கூடிய புத்திசாலித்தனமான முடிவுகளில் ஒன்றாகும்
பாதுகாப்பாகவும் நம்பிக்கைத் தன்மை கொண்டதாகவும் நமது முதலீடும் அதற்கான வட்டியும் நாம் பெற்று பயன் அடைய முடியும் LOW RISK
பணவீக்கத்தின் போது கூட நாம் ஒரு நிலையான வருமானத்தை இந்த திட்டத்தின் மூலம் பெற முடியும் பணவீக்கம் இத்திட்டத்தை எந்த வகையிலும் பாதிக்காது
யாரெல்லாம் இத்திட்டத்தில் சேர முடியும்?
- இந்தியரக இருக்க ஒவ்வொருவரும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற முடியும்.
- 18 வயதிற்கு குறைவாக இருக்கும் நபர்கள் அவர்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாப்பாளர் உடன் சேர்ந்து மைனர் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.
- கூட்டுக் கணக்கில் மூன்று நபர்கள் வரை இணைந்து ஒரு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்
தபால் துறை மாத வருமான திட்டம் எப்படி தொடங்குவது?
அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டக் கணக்கைத் திறப்பதற்கான செயல்முறை மிகவும் எளிதானது மற்றும் இந்த கணக்கு முற்றிலும் இலவசமானது
- உங்கள் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று, தபால் அலுவலக மாத வருமானத் திட்டக் கணக்கைத் திறப்பதற்கான விண்ணப்பப் படிவத்தைக் கேட்கவும்.
- விண்ணப்பத்தை கவனமாக பூர்த்தி செய்து பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.
- Photocopy of ID proof
- Photocopy of address proof
- Two passport size photograph.
- If needed submit the original documents for verification.
கணக்கு உருவாக்கப்பட்டவுடன், நீங்கள் இந்தியாவில் எங்கிருந்தும் பணத்தை முதலீடு செய்யலாம் மற்றும் இந்த அஞ்சல் அலுவலக மாத வருமான திட்டத்தின் கீழ் நீங்கள் மாதாந்திர உறுதியான வருமானத்தைப் பெறலாம்.
தபால் துறை மாத வருமான திட்டம் LINK
Join Our Telegram Group | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
Post Office Monthly Income Scheme | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
What is the minimum balance to be maintained in my POMIS scheme account?
The minimum balance that needs to be maintained is 100 rs.
What is the share of income given, if the POMIS account is a joint account?
In case of joint account the monthly income is distributed equally to all the shareholders
What is the interest rate given for the amount deposited in post office monthly income scheme?
Post office monthly income scheme is a saving plan by the Postal department of India under this scheme guaranteed monthly income of 6.60 % is provided for the investors.
Can a minor open account in POMIS SCHEME?
Yes, minors can open an account with help of the guardian or parents.
What is the minimum amount to be invested in POMIS SCHEME?
Minimum 1500 can be invested for any individual in post office monthly income scheme
Pingback: POMIS SCHEME - Post Office Monthly Income Scheme 2022 - Find TN Jobs