Skip to content
Home » VITHAVAI UTHAVI THOGAI

VITHAVAI UTHAVI THOGAI

விதவை உதவித்தொகை WIDOW PENSION பெறுவது எப்படி? அரசானது கணவரை இழந்து வாழும் விதவை பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது. விதவை உதவித்தொகையானது இரண்டு திட்டங்களில் கீழ் வழங்கப்படுகிறது 1.இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை indira Gandhi national widow pension scheme(IGN-WPS) 2.ஆதரவற்ற விதவை உதவித்தொகை Destitute Widow Pension scheme (DWPS) இவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலமாக தகுதி உள்ளவர்கள் பயனடையலாம் இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகையை பெறுவதற்கான தகுதிகள் விதவையாக இருக்க வேண்டும். 40 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். ஆதரவற்றவராக இருக்க வேண்டும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும். ஆதரவற்ற விதவை உதவித்தொகையை பெறுவதற்கான தகுதிகள் விதவையாக இருக்க வேண்டும். ஆதரவற்றவராக இருக்க வேண்டும். 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். விதவை உதவித்தொகையைப் பெற விண்ணப்பிப்பது எப்படி எனத் தெரிந்து கொள்வோம். விதவை உதவித்தொகையை பெற விண்ணப்பதாரது புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, கணவரின் இறப்புச்சான்று, விதவைச் சான்று, வங்கி கணக்கு புத்தகம், மற்றும் தேவைப்படும் பிற ஆவணங்களை கொண்டு சென்று இ சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் விதவை உதவித்தொகை கோரிக்கை தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்(VAO), வருவாய் ஆய்வாளர்(RI) ஆகியோர் உரிய விசாரணை மேற்கொண்டு பின் அது தொடர்பான தங்களது பரிந்துரையை தருவர் .இறுதியாக சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர்(SOCIAL SECURITY SCHEME SPECIAL TAHSILDAR) விண்ணப்பதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்து பின் அது தொடர்பான உத்தரவு பிறப்பிப்பார். விதவை உதவித்தொகை கோரிக்கையானது ஏற்கப்பட்டால் மாதம் 1000 ரூபாய் பயனாளிக்கு வழங்கப்படும். widow pension pension tamilnadu, widow pension amount in tamilnadu,. widow pension scheme, widow pension details, widow pension apply , widow pension apply tamilnadu, widow pension apply in tamil, destitute widow pension scheme in tamilnadu, indira gandhi pension scheme, indira gandhi national pension scheme, indira gandhi national widow pension scheme, vithavai uthavi thittam, vithavai uthavi thogai, vithavai pension in tamil, vithavai pension apply in tamil,