Table of Contents
TAHDCO Loan Details in Tamil
தாட்கோ(TAHDCO) என்று சொல்லப்படுற தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஹவுசிங் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் வளர்ச்சித் திட்டங்களை பற்றிய விளக்கங்களை இந்த வீடியோல பார்க்க போறோம், ஆதிதிராவிடர்களின் மேம்பாட்டுக்காக இந்த நிறுவனத்தை 1974 தொடங்கி இருக்காங்க. என்னென்ன திட்டங்கள் இருக்கு என்று விரிவான விளக்கங்களை இதில் பார்க்க போறோம்.
ஆரம்பகாலப் பணிகள் பார்த்தோம்னா எஸ்சி எஸ்டி (SC/ST) வகுப்பினருக்கு குடியிருப்புகள், விடுதிகள், பள்ளிகள் போன்ற பல்வேறு கட்டுமான பணிகள் செய்து வந்தனர்.
1981 அப்புறம்னா பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்த ஆரம்பிச்சாங்க.
TAHDCO Loan Details in Tamil திட்டங்கள்.
- (LPS) – நிலம் வாங்குதல் மற்றும் மேம்பாட்டு திட்டம்
- (EDP) – தொழில் முனைவோர் திட்டம்
- (SEPY) – இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம்
- (SEPY-C) – மருத்துவமனை அமைக்கும் திட்டம்
- (PDG) – தொழில் முனைவோருக்கான சிறப்பு திட்டம் பெட்ரோல் டீசல் கேஸ் சில்லரை விற்பனை நிலையம்
- மகளிர் சுய உதவிக் குழுக்கள் நிதியுதவித் திட்டம்
- (CSME) – இந்தியக் குடிமைப் பணி முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி திட்டம்
- (LGSP) – இளம் சட்ட பட்டதாரிகளுக்கு தொழில் துவங்குவதற்கான திட்டம்
1.நிலம் வாங்குதல் மற்றும் மேம்பாட்டு திட்டம்
LPS-சொல்லப்படற நிலம் வாங்குதல் மற்றும் மேம்பாட்டு திட்டம் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் எஸ்சி மற்றும் எஸ்டி(SC/ST) வகுப்பினர் நில உரிமையாளர்களால் மாற்றுவதுதான் திட்டத்தின் நோக்கம்.
- மானியத் தொகை 30% அல்லது 2.25 லட்சம் வரை வழங்கப்படும்.
- 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்.
- ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் .
- இந்த நிலங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களின் பெயரில் தான் வாங்க வேண்டும்
- பெண்ணின் வயது 18 லிருந்து 55 க்குள் இருக்க வேண்டும்
- வேறு எந்த தாட்கோ திட்டத்தின் பயன் பெற்றவராக இருக்க கூடாது
2. தொழில் முனைவோர் திட்டம்
இந்த திட்டத்தில் சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்று நினைக்கின்ற எஸ்சி எஸ்டி (SC/ST)வகுப்பை சார்ந்த ஆண் அல்லது பெண் இருவருமே பயன்பெறலாம்
- பயனாளியின் வயது 18 -55 குள் இருக்க வேண்டும்
- மானியத்தொகை 30% அல்லது 2.25லட்சம் வரை வழங்கப்படும்
- தொடங்கவிருக்கும் தொழில் சம்பந்தமாக உங்களுக்கு முன் அனுபவம் உள்ளது என்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
- வேறு எந்த தாட்கோ திட்டத்திலும் பயன் பெற்றவராக இருக்கக்கூடாது
3. இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம்
- இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் அப்ளை பண்ண பயனாளியின் வயது 18 -55 குள் இருக்க வேண்டும்.
- மானியத்தொகை 30% அல்லது 2.25லட்சம் வரை வழங்கப்படும்
- இத்திட்டத்தின் கீழ் தரப்படும் மானியத் தொகையானது பின் விடுவிப்பு மானியமாக வழங்கப்படும்
- வேறு எந்த தாட்கோ திட்டத்திலும் பயன் பெற்றவராக இருக்கக்கூடாது
4.மருத்துவமனை அமைக்கும் திட்டம்
- SC/ST வகுப்பை சேர்ந்த மருத்துவர்களுக்கு மருத்துவமனை அமைத்திட இத்திட்டம் செயல்பட்டு வருகிறது
- MBBS / BDS படித்தவராக இருக்கவேண்டும்
- INDIAN MEDIACL COUNCIL உறுப்பினராக இருக்க வேண்டும்
5. பெட்ரோல் டீசல் கேஸ் சில்லரை விற்பனை நிலையம்
- இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்னவென்றால் சமூகத்தில் எஸ்சி மற்றும் எஸ்டி(SC / ST) வகுப்பை சார்ந்த தொழில் முனைவோர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது.
- உங்கள் மாவட்டத்தில் நீண்ட வருடமாக வசிப்பவராக இருக்க வேண்டும்
- (+2) பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்
- சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்கள் தங்களது முகவர்களாக இருக்க வேண்டிய தகுதிகள் பூர்த்தி செய்பவராக இருக்க வேண்டும் .
6. மகளிர் சுய உதவிக் குழுக்கள் நிதியுதவித் திட்டம்
- மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி அல்லது பொருளாதார கடனுதவி வழங்கும் திட்டம். இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கம் என்னவென்றால் நிலைத்த வருமானம் தரத்தக்க தொழில் துவங்க சுய உதவிக் குழுக்களுக்கு நிதி வழங்கப்படும்.
- மத்த திட்டங்கள் போல் 30% மானியம் இல்லை 50% மானியமாக இத்திட்டத்தின்கீழ் வழங்குகிறார்கள்.
- ஒரு முறை மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
7.இந்தியக்குடிமைப்பணி முதன்மைத்தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி திட்டம்
- இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் எஸ்சி எஸ்டி (SC / ST)வகுப்பை சேர்ந்த மாணவர்கள் இந்திய குடிமைப்பணி முதன்மைத் தேர்வு எழுதுபவர்களை ஊக்குவிக்கும் வகையாக நிதியுதவி வழங்குவதாகும்.
- இத்திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு ரூ 50000 நிதி உதவி வழங்கப்படும்.
- இதில் பயன்பெற மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
- மாணவரின் குடும்பத்தில் யாரும் அரசு பணியில் இருக்கக் கூடாது.
8. இளம் சட்ட பட்டதாரிகளுக்கு தொழில் துவங்குவதற்கான திட்டம்
- SC / ST வகுப்பை சேர்ந்த சட்ட மாணவர்களுக்கு 50000 நிதி உதவி வழங்கப்படும்.
- இத்திட்டத்தின் கீழ் பயன் பெறும் மாணவரின் வயது 25-45குள் இருக்க வேண்டும்
- மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்குள் இருக்க வேண்டும்
- INDIAN BAR COUNCIL உறுப்பினராக இருக்க வேண்டும்.
TAHDCO Loan Details in Tamil link:
- OFFICIAL WEBSITE : CLICK HERE
- APPLICATION FORM : DOWNLOAD