Table of Contents
சொந்த தொழில் துவங்க வேண்டும் என்ற கனவோடு இருக்கிறீர்களா? உங்கள் சொந்த ஊரில் தொழில் துவங்கி நான்கு பேருக்காவது வேலை கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா?சொந்த தொழில் செய்வதற்கான ஆர்வமும், திட்டங்களும் இருப்பினும் அதற்கான பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறீர்களா? ஆம் என்றால், தொடர்ந்து படியுங்கள்.
தமிழக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை துவங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் Unemployed Youth Employment Generation Programme (UYEGP) குறித்த அனைத்து தகவல்களையும் இப்பொழுது காணலாம்.
UYEGP Scheme Details in Tamil
- UYEGP திட்டம் குறித்த அடிப்படைத் தகவல்களையும்,
- விண்ணப்பிக்க இருக்க வேண்டிய தகுதிகள்,
- யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது ?
- விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்,
- ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி ?
- விண்ணப்பித்த பின் இருக்கும் நடைமுறைகள்.
Unemployed Youth Employment Generation Programme (UYEGP) இன் நோக்கம்:
இந்த திட்டத்தின் நோக்கம். வேலைதேடி கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு ஏழை மக்கள் இடப்பெயர்வை தடுக்கும் வகையில் ஆர்வம் உள்ள இளைஞர்களை அந்தந்த ஊரிலேயே தொழில் துவங்க ஊக்குவிப்பதுதான் இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம்.
UYEGP Scheme Details in Tamil 2022
Unemployed Youth Employment Generation Programme (UYEGP) கடன் விவரம்:
- இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் 15 லட்ச ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ள முடியும்.
- அரசாங்கத் அறிவுறுத்தலின்படி இதற்கு எந்தவிதமான அடமானமும் கேட்கப்படுவதில்லை.
- நீங்கள் வாங்கும் கடன் தொகையில் 25 சதவீதம், மானியம் .
- அந்த 25% தொகையை அரசாங்கமே உங்கள் சார்பில் செலுத்திவிடும். மீதமுள்ள 75 சதவிகித கடன் தொகையை திருப்பி செலுத்தினால் போதும்.
- இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் உற்பத்தி துறை தொடர்பான தொழில் (MANUFACTURING ) துவங்க இருப்பின் உங்களுக்கு 15 லட்ச ரூபாய் வரையும்,
- சேவைத் துறை தொடர்பான தொழில்( SERVICE ) துவங்க இருப்பின் அதற்கு 5 லட்ச ரூபாய் வரையும் கடன் தொகை தமிழக அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.
- உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் உங்களுக்கு வங்கி கணக்கு உள்ள ஏதோ ஒரு அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் நீங்கள் இந்த கடன் தொகையை பெற்றுக் கொள்ள முடியும்.
UYEGP Scheme Details in Tamil 2022 விண்ணப்பிக்க இருக்க வேண்டிய தகுதிகள்:
- குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் அதிகபட்ச வயது பொதுபிரிவை சேர்ந்தவர்களுக்கு 35 வயதுக்குள்ளும்,
- எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/மூன்றாம் பாலினத்தவர்/ முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவை சேர்ந்தவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- UYEGP Scheme Details in Tamil 2022 : குறைந்தது 8-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் பொழுது கொடுக்கும் முகவரியில் குறைந்தது மூன்று வருடங்களாவது வசித்துக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.
- குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- இது தமிழக அரசின் திட்டம் என்பதினால் விண்ணப்பிப்பவர் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?
- முன்னரே மானியத்துடன் கூடிய அரசாங்க கடன் நீங்கள் பெற்று இருப்பின் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.
- அரசு வேலையில் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
- 5 லட்சத்திற்கும் அதிகமான ஆண்டு வருமானம் இருக்கும் குடும்பத்தில் இருந்து வருபவராக இருந்தால் நீங்கள் விண்ணப்பிக்க முடியாது.
- ஆடு, மாடு, கோழி, முயல் வளர்ப்பு பட்டுப்புழு வளர்த்தல் போன்ற விவசாய தொழில்களுக்கு கடன் பெற முடியாது.
UYEGP Scheme Details in Tamil 2022 தேவையான ஆவணங்கள்:
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- மாற்று சான்றிதழ் குடும்ப அட்டை
- இருப்பிடச்சான்று /ஆதார் கார்டு /வாக்காளர் அடையாள அட்டை
- ஜிஎஸ்டி என்கிட்ட விலைப்பட்டியல் (ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்கள் இருப்பின் ஒரே பைலாக ஸ்கேன் செய்யவும் )
- ஜாதி சான்றிதழ்
- மாற்றுத்திறனாளிகள் /முன்னாள் ராணுவத்தினர்/ திருநங்கைகளுக்கான அடையாள அட்டை.
எப்படி விண்ணப்பிப்பது?
- Details of entrepreneur and unit details விபரங்களை பூர்த்தி செய்தபின் போட்டோவை அப்லோட் செய்யவும்.
- பின்னர் திரையின் கீழ் உள்ள PROCEED பட்டனை அழுத்தவும்.
- தற்பொழுது திரையில் தோன்றும் REFERENCE NUMBER குறித்துக் கொண்டு CLOSE பட்டனை அழுத்தவும்.
- ONLINE UPLOAD செய்த பின் அவற்றை VIEW செய்யும் வசதியை உபயோகித்து சரிபார்த்த பின் திரையில் உள்ள சதுரங்கத்தில் TICK MARK செய்யவும்.
- செய்த பின், தோன்றும் SUBMIT APPLICATION பட்டனை அழுத்தவும்.
- தற்போது ஜெனரேட் ஆகும் விண்ணப்பப்படிவம் மற்றும் இதர ஆவணங்களை PRINT செய்து கொள்ளவும்.
விண்ணப்பித்ததற்கு பிறகான நடைமுறை:
- மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு நேரில் சென்று தபால் மூலமாகவோ விண்ணப்பம் சமர்ப்பிக்க தேவையில்லை.
- ஆன்லைனில் பதிவு செய்த விவரம் மற்றும் பதிவேற்றம் செய்த ஆவணங்க போதுமானது.
- மாவட்ட தொழில் மையத்தில் இருந்து நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் பெறப்பட்டவுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் பொழுது அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் .
- மேலும் கீழ்கண்ட ஆவணங்களை மாவட்ட தொழில் மையத்தில் நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்கவேண்டும். கையொப்பமிட்ட விண்ணப்பம், உறுதி மொழி படிவத்தில் உள்ளவாறு 20 ரூபாய் மதிப்பிலான முத்திரைத்தாளில் தட்டச்சு செய்து நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் பெறப்பட்ட (அசல் மற்றும் ஒரு நகல்)
- பூர்த்தி செய்த கையொப்பமிட்ட திட்ட அறிக்கை (இரு நகல்கள்)
- விண்ணப்பப் படிவத்துடன் ஜெனரேட் ஆகும் இவை UYEGP திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கும் மானியத்துடன் கடன் பெற்று தொழில் துவங்குவது குறித்தான செயல்முறை விளக்கப் படத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் முறை அறிந்து கெள்ளலாம்.
2021-2022 ) எவ்வளவு கடன் வழங்கப்பட்டிருக்கிறது?
- சென்ற ஆண்டு மட்டும் இந்த திட்டத்தில் மொத்தம் 15293 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்கள்11380 .
- வங்கியால் அனுமதிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 3778
- நிதி நிறுவன கடன் வழங்கப்பட்டது 3628
- ஊக்கத்தொகை வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் 3628 ஆகும் .
- 2021-2022 நிதியாண்டில் 3,641 லட்சம் உதவித்தொகை UYEGP திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டிருக்கிறது.
UYEGP திட்டம் குறித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
IMPORTANT LINKS:
- OFFICIAL WEBSITE : CLICK HERE
- UYEGP ONLINE APPLY LINK : CLICK HERE
- DETAILED VIDEO LINK : CLICK HERE
- TELEGRAM GROUP LINK : CLICK HERE
Uyegp online, uyegp apply online, uyegp loan, uyegp scheme details in tamil, uyegp scheme, district industry commerce, msme business loan, uyegp, தொழில் கடன், uyegp tamil, தமிழக அரசு வழங்கும் தொழில் கடன், business loan scheme, UYEGP, how to apply uyegp, uyegp loan apply, uyegp loan apply in tamil, how to apply for uyegp loan in tamil, Unemployed Youth Employment Generation Programme, tn government loan, UYEGP LOAN, uyegp status, business loan in tamil, government loan, uyegp1, uyegp online, uyegp apply online, uyegp loan, uyegp scheme details in tamil, uyegp scheme, district industry commerce, msme business loan, uyegp,
Hi