Table of Contents
தமிழ்நாடு அரசு மகளிர் விடுதி தமிழகத்தில் பணிபுரியும் ஏழை எளிய மக்களின் நலனுக்காக தமிழக அரசாங்கத்தின் சார்பாக வேலைக்குச் செல்லும் மகளிருக்கு தங்கும் விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணி நிமித்தம் தங்கள் குடும்பங்களையும் உறவினர்களையும் பிரிந்து வெளியூர்களில் வேலை புரியும் மகளிர் இதன் மூலம் பயன் பெறுவர். இந்த தமிழ்நாடு அரசு மகளிர் விடுதி திட்டம் குறித்த அனைத்து தகவலையும் பின்வருமாறு காணலாம்.
குறிப்பாக, தமிழ்நாடு அரசு மகளிர் விடுதி திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம்? விண்ணப்பிக்க இருக்க வேண்டிய தகுதிகள்? என்னென்ன உதவிகள் வழங்கப்படுகிறது? எப்படி விண்ணப்பிப்பது? முதலிய அனைத்து தகவலையும் பின்வருமாறு காணலாம்.
தமிழ்நாடு அரசு மகளிர் விடுதி திட்டம் என்றால் என்ன?
சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்த அவர்களை கல்வி பெறச் செய்து, தங்கள் சொந்த காலில் நிற்கும் படி அவர்களை வேலை செய்ய ஊக்குவிப்பது முக்கியமாக கருதப்படுகிறது.
தமிழக அரசாங்கம் இதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் வேலைக்குப் போகும் பெண்களின் நலனுக்காக அவர்களுக்கு பாதுகாப்பான தங்கும் சூழலை உருவாக்கித் தரும் நோக்கத்தோடு இந்த தமிழ்நாடு அரசு மகளிர் விடுதி திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
என்னென்ன வசதிகள் செய்து தரப்படுகிறது?
மிகக் குறைந்த செலவில் பாதுகாப்பான விடுதி, இலவச உணவு ,இலவச மின்சாரம் ஆகியவை தமிழ்நாடு அரசு மகளிர் விடுதி திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது.
பயனாளிகள் யார்?
- இத்திட்டத்தில் பயனடைய கூடியவர்கள் வேலைக்கு சென்று சம்பளம் பெறக்கூடிய மகளிர்.
- .சென்னையில் 25,000 குறைவாக சம்பளம் பெறும் மகளிர் இந்ததமிழ்நாடு அரசு மகளிர் விடுதி திட்டத்தில் பயன் பெற தகுதியானவர்கள்.
- சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 15,000 குறைவாக சம்பளம் ஈட்டக்கூடிய மகளிர் தமிழ்நாடு அரசு மகளிர் விடுதி திட்டத்திற்கு விண்ணப்பித்து குறைந்த மாத வாடகையில் தங்கும் விடுதி வசதி பெற தகுதியானவர்கள்.
- இது முழுக்க முழுக்க நடுத்தர மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மகளிர் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டமாகும்.
மாத வாடகை
- வேலைக்குச் செல்லும் மகளிருக்கு உதவும் நோக்கத்துடன் மிகக்குறைந்த மாத வாடகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு திட்டமாகும்.
- இதன்படி மாதத்திற்கு 300 ரூபாய் உணவிற்கும், தங்கும் விடுதிக்கு, மின்சார பயன்பாட்டிற்கும் சேர்த்து தமிழ்நாடு அரசு மகளிர் விடுதி திட்டத்தின்கீழ் வசூலிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு மகளிர் விடுதி கால அளவு
- தமிழ்நாடு அரசு மகளிர் விடுதி திட்டத்தின் கீழ் இணையும் மகளிர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் பயனாளிகளாக கருதப்படுவர்.
- மூன்று ஆண்டுகளுக்குப் பின் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு மகளிர் விடுதி திட்டம் பொருந்தாது.
தேவைப்படும் ஆவணங்கள் என்ன
- வேலை செய்வதற்கான சான்றிதழ்
- விண்ணப்பிப்பவரின் வருமானச் சான்றிதழ்
- விண்ணப்பிப்பவர், விண்ணப்பிக்கும் மாவட்டத்தை சேர்ந்தவர் இல்லை என்பதற்கான ஆவணங்கள்( வீட்டு முகவரியை குறிக்கும் ஆதார் கார்டு)
யாரை தொடர்பு கொள்வது?
தமிழ்நாடு அரசு மகளிர் விடுதி திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகள், எவரேனும் ஒருவரை இத்திட்டத்தில் இணைய தேவைப்படும் ஆவணங்களோடு சென்று சந்திக்க வேண்டும்.
- District Social Welfare Officers of the district
- Superintendents of Government Working Women Hostel
- Extension Officers (Social Welfare)
தமிழ்நாடு அரசு மகளிர் விடுதி சென்னை
1.GOVERNMENT WORKING WOMEN HOSTEL – 1
NO 8, 2ND CROSS STREET, SHASTHRI NAGAR,ADYAR,CHENNAI-20
CHENNAI-2
044-25264568
9176647403
2.GUILD OF SERVICE WORKING WOMEN HOSTEL ,
NO 18, CASA MAJOR ROAD, EGMORE,
CHENNAI -8
044-28271617
8939100168
3.M/S RANI MEIYAMMAI HOSTEL,
NO 25, ETHIRAJ SALAI CHENNAI 8,
044-28271617
8939100168
4.RAJALAKSHMI WORKING WOMENS HOSTEL-I,
NO.55, PCO ROAD, EGMORE, CHENNAI-8
9600122121
5.TARA HOMES,
NO 37, COLLEGE ROAD, NUNGAMBAKKAM, CHENNAI-6
044-28203334
9444070279
JOIN OUR TELEGRAM GROUP | JOIN |
தமிழ்நாடு அரசு மகளிர் விடுதி சென்னை | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
தமிழ்நாடு அரசு மகளிர் விடுதி சென்னை IN ENGLISH | CLICK HERE |