- தமிழக அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து மக்கள் நல திட்டங்களின் தொகுப்பாக இப்பதிவு அமையவிருக்கிறது. பின்வரும் திட்டங்களில் சில மத்திய அரசாங்கத்தின் உதவியோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- பெரும்பாலான திட்டங்கள் முழுக்க முழுக்க தமிழக அரசாங்கத்தின் நிதி உதவியை கொண்டு மட்டும் அமைந்துள்ளது.
- குழந்தைகள், மகளிர், பிற்படுத்தப்பட்டவர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகிய பிரிவை சேர்ந்தவர்களுக்கு நலம் பயக்கும் வகையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது, ஆரோக்கியம், வாழிட மேலாண்மை, கல்வி வேலைவாய்ப்பு ஆகிய முக்கிய துறைகளை வளப்படுத்த தமிழக அரசாங்கத்தின் இத்திட்டங்கள் முயல்கின்றன.
- சில திட்டங்கள் மானியத் திட்டங்கலாகவோ மற்றவை நேரிடையாக பண உதவி பெறக்கூடிய திட்டங்களாகவோ இவை இருக்கின்றன.
TN 2022 SCHEMES FOR WOMEN
TN GOVERNMENT SCHEMES FOR WOMEN 2022
10 விதமான பெண்கள் நலத் திட்டங்கள் தமிழக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகிறது அவை பெண்களுக்கு கடன்வழங்குதல் கல்வியறிவை ஊட்டுகள், தொழில் துவங்க உதவி செய்தல், கடன் பெற உதவுதல் போன்ற நோக்கத்தோடு செயல்படுத்தப்படுகிறது.
1.SPECIAL LITERACY PROGRAM FOR WOMEN:
- திட்டத்தின் நோக்கம்: தமிழகம் முழுவதுமுள்ள பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள கல்வியறிவில்லாத பெண்களுக்கு உதவுதல்.
- தகுதி:15 முதல் 35 வயதுடைய பெண்கள்.
- விண்ணப்பிக்கும் முறை: மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதியோர் கல்வி அலுவலரை நேரில் சந்தித்து விவரங்களை பெறலாம்.
- கால அளவு: இந்தப் திட்டத்தின் கால அளவு 6 மாதங்கள்
2.ADDITIONAL CAPITAL SUBSIDY FOR WOMEN SC/ST DIFFERENTLY-ABLED AND TRANSGENDER.
- திட்டத்தின் நோக்கம்:விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு உதவுதல்
- தகுதி:எந்த தகுதியும் தேவையில்லை
- விண்ணப்பிக்கும் முறை: உற்பத்தி தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் GM-DIC/RJD-CHENNAI/TIIC-ல் மேலும் விவரங்களை பெறலாம்.
- கால அளவு: இந்தத் திட்டம் மே 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
திருநங்கை உதவித்தொகை|| Transgender welfare schemes || tamil nadu scheme for thirunangai || Thirunangai Thirunanmbi || Thirunangai Scheme
3.TAMILNADU GOVERNMENT SCHEME FOR GIRL CHILD.
- தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு உதவ சில திட்டங்கள் உள்ளன அவற்றில் பெரும்பான்மையானவை பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்கப் படுத்துவதாகவும் அவர்களுக்கு இலவச மற்றும் கல்வி உதவிகள் தருவதாக அமைந்துள்ளது.
- Annal Gandhi Memorial award: ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த12-வதில் முதல் மதிப்பெண் பெறும் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவிக்கு அவர்களின் மேற்படிப்பை தொடர உதவிகள் வழங்கப்படுகிறது.
- நோக்கம்: ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது
- தகுதி: 8 முதல் 14 வயது
- விண்ணப்பிக்கும் முறை: Director of Adi dravidar welfare Chennai-5 through the education institutions.
- கால அளவு: 6 மாதங்கள்
4.TAMIL NADU GOVERNMENT SCHEME FOR WOMEN
- ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவிகள் செய்யும் பொருட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருக்கும் ஆதரவற்ற பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்
- பயன்கள்: 15 ஆயிரம் ரூபாய்க்கு cheque பெண்களுக்கு திருமண செலவுகளுக்காக வழங்கப்படும்.
- தகுதி: ஆண்டு வருமானம் 1,20,000 இருக்க வேண்டும்.
- வயது:18 லிருந்து 30க்குள் இருக்க வேண்டும்
- விண்ணப்பிக்கும் முறை: district social welfare officer/extension officer- ரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
5.WIDOW PENSION SCHEME IN TAMILNADU
- ஆதரவற்ற விதவைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி தரும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் widow certificate தமிழக அரசு வேலைகளில் பெண்களுக்கு வேலை கிடைக்க இட ஒதுக்கீடு வழங்குகிறது.
- தகுதி: வயது வரம்பு இல்லை ,18 வயதிற்கு மேற்பட்ட மகன் இருக்கக் கூடாது, சொந்த இடம் வீடு இருக்கக்கூடாது, மாத வருமானம் அற்றவராக இருக்க வேண்டும்
- விண்ணப்பிக்கும் முறை :மாவட்ட ஆட்சியரிடம் இந்த திட்டத்தில் பயன்பெற தேவையான அனைத்து சான்றிதழ்களையும் வழங்க வேண்டும்.
- காலஅளவு: இறுதிவரை
6.TAMIL NADU GOVERNMENT SCHEME FOR PREGNANT LADIES
தமிழகம் பல வகைகளில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இதில் குறிப்பாக பெண்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அதில் அடங்கும்.
TAMIL NADU AMMA MATERNITY NUTRITION KIT SCHEME:
- 2015 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை 17 லட்சம் மகளிர் பயன் பெற்றுள்ளனர்.
- இந்தத் திட்டம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் என்று அழைக்கப்படுகிறது
- பயன்கள்: கருவுற்றிருக்கும் பெண்களுக்கு தமிழக அரசாங்கம் 18,000 நிதி உதவி வழங்குகிறது. இதில் 4,000 health kid அடங்கும் இந்த health kid இரண்டு முறை வழங்கப்படுகிறது. மகப்பேறு காலத்தில் 12-வது வாரத்திலும் 16 வது வாரத்திலும் வழங்கப்படும்.
- தகுதி: கருவுற்றிருக்கும் பெண்கள். 2019 ஆம் ஆண்டிற்கு முன் குழந்தை பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
- விண்ணப்பிக்கும் முறை: ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும் செவிலிய ரை நேரில் சந்தித்து இணைந்து கொள்ளலாம் .
- காலஅளவு :3 மாதத்தில் இருந்து 12 மாதங்கள் உரை.
TN MARRIAGE SCHEMES 2022
TN GOVERNMENT SCHEMES FOR WOMEN 2022
- பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு உதவ தமிழக அரசாங்கம் ஐந்து விதமான திருமண உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் வாயிலாக ஏழைப் பெண்களின் திருமண செலவுகளுக்கு தமிழக அரசாங்கம் உதவி புரிகிறது.
- பயன்கள்: பெண்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப 25,000 மற்றும் 50,000 நிதி வழங்கப்படுகிறது.
- தகுதி 1: விண்ணப்பிக்கும் மகளிர் பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதி 2: மணமகள் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பயின்று இருக்க வேண்டும்.
திருமண உதவி தொகை || கலப்பு திருமணம் உதவி தொகை || Thirumana Uthavi thogai Details in Tamil
1.MOOVALUR RAMAMIRTHAM AMMAIYAR NINAIVU MARRIAGE ASSISTANCE SCHEME.
- பயன்கள் : ஏழை மகளிரின் திருமண செலவுகளுக்காக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
- தகுதி :இந்த குடும்பத்தின் ஆண்டு வருமானம் 1, 20,000 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.மணப் பெண்ணுக்கு 18 வயதும் பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண்ணுக்கு மட்டுமே பயனடைய வாய்ப்பு வழங்கப்படும்.திருமணத்திற்கு 45 நாட்களுக்கு முன்பாக அப்ளை செய்ய வேண்டும்.
- எப்படி விண்ணப்பிப்பது? Contact:Commissioner, municipal commissioner, Panchayat Union commissioner,district social welfare, officer extension officer, rural welfare officers.
2.Dr Dharmambal ammaiyar ninaivu widow remarriage assistance scheme.
- பயன்கள் :இந்த திட்டத்தின் கீழ் 25,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் 15,000 ரூபாய் ECS ஆகவும் 10,000 நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட்டாகவும் 4 கிராம் 22 கேரட் கோல்டு காயின் திருமாங்கல்யம் செய்வதற்காக வழங்கப்படுகிறது.
- பட்டபடிப்பு படித்தவராக இருப்பின், 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் 30,000 ரூபாய் ECS ஆகவும் 20,000 நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட்டாகவும் 4 கிராம் 22 கேரட் கோல்டு காயின் திருமாங்கல்யம் செய்வதற்காக வழங்கப்படுகிறது.
- தகுதிகள்: குறைந்தபட்ச கல்வித் தகுதி என்று எதுவும் இல்லை. ஆண்டு வருமான வரம்பு இல்லை. மணமக்கள் யாரேனும் ஒருவர் எஸ்சி எஸ்டி பிசி எம்பிசி வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
3.EVR Mani ammaiyar ninaivu marriage assistance scheme for daughters of poor widow.
- பயன்கள்: ஏழை விதவைக்கு 15,000 ரூபாய் திருமணம் செய்ய வழங்கப்படும்.
- தகுதி: குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72,000 கீழ் இருக்க வேண்டும்.
- எப்படி விண்ணப்பிப்பது: மாவட்ட சமூக நல அலுவலரை நேரில் சந்திக்க வேண்டும்.
- கால அளவு: மூன்று மாதம்
4.Marriage assistance to normal person marrying a visually handicapped person.
- பயன்கள் : 20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். 10 ஆயிரம் ரூபாய் பணமாகவும் ,பத்தாயிரம் ரூபாய் NATIONAL SAVINGS CERTIFICATE-ஆகவும் வழங்கப்படும். அதனுடன் சேர்ந்து ஒரு பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.
- தகுதி:திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். National disability அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.
- எப்படி விண்ணப்பிப்பது: district disabled rehabilitation officer நேரில் சந்தித்து விண்ணப்பிக்கலாம்.
- கால அளவு: மூன்று மாதம்
5.Dr muthulakshmi Reddy inter caste marriage assistance scheme
- பயன்கள்: இத்திட்டத்தின்கீழ் 15 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இதில் 10 ஆயிரம் ரூபாய் ரூபாய் NATIONAL SAVINGS CERTIFICATE-ஆகவும் 5 ஆயிரம் ரூபாய் செக் அல்லது டிடி அது வழங்கப்படும் .மணமக்களின் யாரேனும் ஒருவர் எஸ்சி எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவராக இருப்பின் 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் இதில் பத்தாயிரம் ரூபாய் ரூபாய் NATIONAL SAVINGS CERTIFICATE-ஆகவும் 10,000 ரூபாய் செக் அல்லது டிடி ஆகு வழங்கப்படும்.
- தகுதி :வருமான வரம்பு எதுவும் கிடையாது. கல்வித்தகுதி என்று எதுவும் கிடையாது. மணப்பெண் 18 லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும் திருமணத்திற்கு 45 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
- எப்படி விண்ணப்பிப்பது: மாவட்ட சமூக நல அலுவலரை நேரில் சந்திக்க வேண்டும்.
- கால அளவு மூன்று மாதங்கள்.
schemes for school students
TN GOVERNMENT SCHEMES FOR WOMEN 2022
தமிழக மாணவர்கள் கல்வி தகுதியை தரத்தை உயர்த்துவதற்காக தமிழக அரசாங்கம் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக பல ஸ்காலர்ஷிப் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன அவற்றைப் பற்றி இப்பொழுது காணலாம்.
1.Free education scheme in Tamilnadu 2022
மத்திய மாநில அரசுகளின் கூட்டாகவும் சில திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.national institute of open schooling (nios) அத்தகைய திட்டம் ஒன்று நடைமுறையில் உள்ளது இது முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் நிதி உதவியைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும்
- பயன்கள் :வறுமை மற்றும் வேறு பல காரணங்களுக்காக பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்ட மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு கல்வி புகட்டும் நோக்கத்தோடு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- பயன்பெற 15 லிருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும் மத்திய அரசாங்கம் முதல் வருட கல்விச் செலவை முழுவதுமாக ஏற்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது வருட செலவை மத்திய மாநில அரசுகள் இணைந்து ஏற்கும்.
- தகுதி: இதுவரை பள்ளிக்கே செல்லாதவர்கள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டவர்கள்.
- எப்படி விண்ணப்பிப்பது: District Collector, District Adult Education Officer, District Educational Officer நேரில் சந்திக்க வேண்டும்.
- கால அளவு ஒரு கல்வியாண்டு தொடக்கத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
2.scholarship for children of Agricultural labourers
- பயன்கள் :10 வது தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 1750 ரூபாயும் மாணவிகளுக்கு 1,500 ரூபாயும் வழங்கப்படும். 12வது தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 1,750 ரூபாய் 2000 ரூபாய் மாணவிகளுக்கும் வழங்கப்படும்.
- தகுதி :மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கும் agricultural labourers card வைத்திருக்க வேண்டும்.
- எப்படி விண்ணப்பிப்பது :பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாக விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட வேண்டும்.
- கால அளவு: மூன்றிலிருந்து ஆறு மாதங்கள்.
3.Higher education: Adi dravidar and tribal welfare department.
- பயன்கள் :ஆண்டிற்கு ஒருமுறை 6,500 ரூபாய் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் 7000 பட்டயப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்படும் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு 25 சதவீதம் கடனாகவும் 75 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.
- ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர்களுக்கு தங்கிப் பயிலும் வசதி ஏற்படுத்தி தரப்படும்.
- தகுதி: ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.
- எப்படி விண்ணப்பிப்பது:விண்ணபிக்க கல்லூரி முதல்வரின் வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அதிகாரிகளை சந்திக்க வேண்டும்.
- கால அளவு 4 லிருந்து 12 மாதங்கள்.