Table of Contents
குரூப் 4, 2022 தேர்வுக்கு தயாராவது எப்படி?
JULY 24TH 2022 நடக்க உள்ள குரூப் தேர்வுகளுக்கு தயாராகும் வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காண இருக்கிறோம். இரண்டு ஆண்டுகளாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், GROUP 4 தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் பொருட்டு பின்வரும் தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்.
அரசு அதிகாரி ஆகவேண்டும் என்ற கனவோடு உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பின்வரும் GROUP 4 SUCCESS TIPS அவர்களின் லட்சியத்தில் வெற்றி பெற உதவும் என்று உறுதியாக நம்புகிறோம்.
இந்த பதிவின் முக்கிய அம்சங்கள் :
- TNPSC GROUP 4 MARKS : எவ்வளவு மதிப்பெண் எடுக்கவேண்டும் ?
- TNPSC GROUP 4 SYLLABUS : SYLLABUS படிக்க வேண்டுமா அல்லது SCHOOL BOOKS படிக்க வேண்டுமா?
- TNPSC GROUP 4 SUBJECT WISE MARKS : குரூப்-4 பாடங்கள் வாரியாக மதிப்பெண்கள்
- எந்த பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்?
- இந்த பாடங்களை உறுதியாக படிக்கவும்.
- GROUP 4 G.K வில் கவனம் செலுத்துங்கள்:
- CURRENT AFFAIRS எப்படி தயார் செய்வது?
- தினமும் எவ்வளவு மணி நேரம் படிக்க வேண்டும்?
- TYPIST AND STENO TYPIST பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:
- PSTM பற்றி அறிவீர்களா?
- மாதிரித் தேர்வுகள் எழுத வேண்டும் :
- இன்று படிக்கத் துவங்கினால் வெற்றி நிச்சயம்.
- இதை செய்தால் வெற்றி நிச்சயம்:
எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தால் உங்களுக்கு வேலை நிச்சயம்?
ஒவ்வொரு ஆண்டும் கட் ஆப் CUT OFF மார்க் ஆனது உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் குறைந்தது 180 -185 மதிப்பெண்கள் எடுப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
TNPSC GROUP4 EASY PASS TIPS IN TAMIL SYLLABUS
படிக்க வேண்டுமா அல்லது SCHOOL BOOKS படிக்க வேண்டுமா?
பல GROUP 4 வெற்றியாளர்களின் அனுபவத்தின்படி, தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் குரூப் 4 -என வழங்கப்பட்டுள்ள SYLLABUS இன் படி தான் தங்களின் தேர்விற்கான தயாரிப்புகளை துவங்கியிருக்கிறார்கள்.
TNPSC GROUP4 EASY PASS TIPS IN TAMIL MARKS
எந்தெந்த பாடங்களில் குறைந்தது எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்?
SUBJECTS | TOTAL MARKS | SHOULD GET |
பொதுத்தமிழ் | 100 | 95+ |
கணிதம் | 25 | 22+ |
வரலாறு | 15 | 13+ |
தேசிய இயக்கம்/ அரசியலமைப்பு | 10 | 10 |
புவியியல் | 7 | 5+ |
நடப்பு நிகழ்வுகள் | 17 | 12+ |
பொருளாதாரம்/இயற்பியல்/ வேதியல்/உயிரியல் | 26 | 26 |
TNPSC GROUP4 IMPORTANT SUBJECTS TO READ :
எந்த பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்?
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி நீங்கள் ஒவ்வொரு பாடத்திற்கான முக்கியத்துவத்தையும் தரவேண்டும்.
அதிக கவனம் பொதுத் தமிழுக்கும், அதைத்தொடர்ந்து கணிதத்திற்கும் மூன்றாவதாக வரலாறு நான்காவதாக தேசிய இயக்கம் அதற்கடுத்து அரசியலமைப்பு மற்றும் பொருளியல் பின் நடப்பு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
TNPSC GROUP4 EASY PASS TIPS IN TAMIL SUBJECTS
இந்த பாடங்களை இறுதியாக படிக்கவும்.
பொருளாதாரம், இயற்பியல், வேதியல், உயிரியல் ஆகிய பாடத்திட்டங்கள் SYLLABUS அதிகம் என்பதாலும் மற்ற பாடங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது ஒதுக்கப்பட்டுள்ள மதிப்பெண்களும் சொற்பம் என்பதாலும் இறுதியாக தயார் செய்தால் போதும்.
TNPSC GROUP4 EASY PASS TIPS IN TAMIL GK:
G.K -வில் கவனம் செலுத்துங்கள்
பெரும்பாலானவர்கள் தமிழில் 100க்கு 95 மதிப்பெண்களை எடுத்துவிடுவார்கள் உங்களை அரசு அதிகாரி ஆக்கும் DECIDING FACTOR நீங்கள் எடுக்கவிருக்கும் மதிப்பெண்களே. அதனால் முடிந்தவரை தமிழ் அல்லாத பாடங்கள் அனைத்திலும் அதிக கவனம் செலுத்தவும்
இன்று படிக்கத் துவங்கினால் வெற்றி நிச்சயம்.
பலர் எண்ணுவது போல் ஆண்டு கணக்கில் படித்தால்தான் குரூப் 4 அல்லது குரூப் 2-வில் தேர்ச்சி பெற முடியும் என்பது முற்றிலும் பொய்யான கருத்தாகும். சில மாதங்கள் மட்டுமே கடின உழைப்பை செலுத்தி படித்தவர்கள் முதல் முயற்சியிலேயே குரூப்-2 அல்லது குரூப்-4 தேர்வில் தேர்ச்சி அடைகிறார்கள். அதனால் எந்தவித ஐயமும் இன்றி உடனே தேர்வுக்கு தயாராக துவங்குங்கள். வெற்றி பெற இன்று படிக்கத் துவங்கினால் வெற்றி நிச்சயம்.
TNPSC GROUP4 EASY PASS TIPS CURRENT AFFAIR :
CURRENT AFFAIRS எப்படி தயார் செய்வது?
பொதுத்தமிழ் உள்ளிட்ட மற்ற பாடங்களை சில நாட்கள் அல்லது மாதங்கள் ஊன்றிப் படித்தால் தயார் செய்து விடலாம். ஆனால் நடப்பு நிகழ்வை CURRENT AFFAIRS அப்படி ஒரே மூச்சில் படிக்க இயலாது. அதனால் தாங்கள் குரூப் 4 க்கு முயற்சி செய்கிறீர்கள் என்று முடிவானவுடன் தினமும் நடப்பு நிகழ்வுகள் CURRENT AFFAIRS க்கு என சிறிது நேரம் ஒதுக்கி படித்து வரவும்.
TNPSC GROUP4 – DAILY STUDAY TIMING
தினமும் எவ்வளவு மணி நேரம் படிக்க வேண்டும்?
குரூப்-4 தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் தினமும் படிக்க வேண்டிய நேரமானது நபருக்கு நபர் மாறுபடும் அனைத்து பாடங்களையும் முன்பே படித்தவர் என்றால் தினமும் ஒரு சில மணி நேரங்கள் படித்த பாடங்களை REVISE செய்ய போதுமானது.
ஆனால், இப்பொழுது தான் தேர்வுக்கு தயாராக தொடங்குகிறீர்கள் என்றால் குறைந்தது ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் 6Hrs படிக்க வேண்டும்.
TYPIST AND STENO TYPIST பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:
GROUP 4 CUT OFF மதிப்பெண்களை பொருத்தவரை TYPIST AND STENO TYPIST சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு சற்று குறைவாக இருக்கும். TYPIST(TAMIL AND ENGLISH HIGHER) AND STENO TYPIST( TAMIL AND ENGLISH HIGHER) சான்றிதழ் முடித்து வைத்திருப்பவர்கள் மற்றவர்களை காட்டிலும் 30 லிருந்து 35 CUT OFF மதிப்பெண்கள் வரை குறைவாக இருக்கும்.
PSTM பற்றி அறிவீர்களா?
PSTM என்றால் PERSONS STUDIED IN TAMIL MEDIUM. GROUP 4 ற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாவது தேர்ச்சி. அரசாங்கத்தின் புதிய அறிவிப்பின்படி ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி கற்றவர்களுக்கு 20% முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி கற்றிருந்தால் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொழுது அது குறித்து விண்ணப்ப படிவத்தில் விவரங்களை அளிக்கவும்.
அதிக மாதிரித் தேர்வுகள் எழுத வேண்டும் :
போட்டித் தேர்வுகளுக்காக தயார் செய்து வருபவர்கள் தங்களின் நிலையை தாங்களாகவே சோதித்துக் கொள்வது என்பது மிக முக்கியம். அதனால் முடிந்தவரை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் மாதிரித் தேர்வுகள் எழுதிக்கொண்டு இருக்க வேண்டும். அப்படி தொடர் சுயபரிசோதனை செய்ய டெஸ்ட் எழுதி வருபவர்கள் தக்கல் நிலையறிந்து தேர்வுக்கான யூகங்களை மாற்றியமைத்து தேர்வில் எளிதில் வெற்றி பெற முடியும்.
இதை செய்தால் வெற்றி நிச்சயம்:
குரூப்-4 தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் பாடங்களை பத்திற்கும் மேற்பட்ட முறை REVISE செய்ய வேண்டும் என்பதே இந்த குரூப்-4 தேர்வில் வெற்றி பெறுவதற்கான சூட்சுமமாக வெற்றியாளர்கள் கூறுகிறார்கள். ஒரு முறை படிப்பதோடு நின்று விடாமல் அதனை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மறுபடி மறுபடி படித்து பார்த்து மனதில் பதியவைத்து கொள்ள வேண்டும்.
IMPORTANT LINKS :
OFFICIAL WEBSITE |
CLICK HERE |
TELEGRAM GROUP LINK |
CLICK HERE |
GROUP4 VIDEO LINK |
IMPORTANT KEYS DISCUSSED :
குரூப் 4 2022 தேர்வுக்கு தயாராவது எப்படி? TNPSC GROUP4 EASY PASS TIPS IN TAMIL 2022 tnpsc group 4 study plan 2022 in tamil pdf, tnpsc exam preparation tips in tamil pdf, how to prepare tnpsc group 4 exam in home, how to clear tnpsc group 4 in first attempt, tnpsc group 4 books pdf, tnpsc group 4 preparation materials, tnpsc group 2 exam preparation tips in tamil pdf, tnpsc group 4 study plan 2022 in English, pdf, 60 days study plan for tnpsc group 4 , tnpsc group 4 study plan 2022 pdf, is group 4 exam easy, how to prepare for tnpsc group 4 2022, tnpsc group 4 preparation books, group 4 exam date 2022, group 4 exam date 2022, how to prepare , t tnpsc exam in home, how to pass tnpsc group 4 exam at first attempt, tips to pass tnpsc group 4 exam, how many marks to pass tnpsc group 4 exam, tnpsc group 4 exam how to apply, how to pass group 4 exam, how to pass in tnpsc group 4 exam, how to get pass in tnpsc group 4, how to apply tnpsc group 4 exam online, how to pass tnpsc group 4 exam in tamil, tnpsc group 4 pass mark how much, tnpsc group 4 how many marks pass, tnpsc group 4 youtube, how to pass in tnpsc group 1 exam, how to pass group 2 exam in tamil, how to pass tnpsc group 2 exam at first attempt,