Table of Contents
தமிழக அரசின் திட்டமான DESTITUDE WIDOW PENSION SCHEME ஆதரவற்ற விதவை உதவித் தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது HOW TO APPLY FOR VITHAVAI UTHAVI THOGAI என்பது குறித்தும், விண்ணப்பிக்க இருக்க வேண்டிய தகுதிகள் ELIGIBLITY TO APPLY FOR VITHAVAI UTHAVI THOGAI குறித்தும் , விண்ணப்பிக்கும் பொழுது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் DOCUMENTS TO BE SUBMITTED WHILE APPLYING FOR VITHAVAI UTHAVI THOGAI குறித்தும், விண்ணப்பித்த பின் நிகழும் நடைமுறைகள் PROCEDURES AFTER APPLYING FOR WIDOW PENSION SCHEME குறித்தும் இப்பொழுது காணலாம்.
மத்திய மாநில அளவில் ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில் பல பென்சன் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அந்தவகையில் விதவைகள் உதவித்தொகை குறித்த அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம்.
ELIGIBLITY TO APPLY FOR VITHAVAI UTHAVI THOGAI விண்ணப்பிக்க இருக்கவேண்டிய தகுதிகள்:
- ஆதரவற்ற பெண்ணாக இருக்க வேண்டும்.
- கணவனால் கைவிடப்பட்ட விதவையாக இருக்க வேண்டும்.
- 20 வயதிற்கு மேல் ஆண் மகன்கள் அந்த பெண்ணிற்கு இருக்கக்கூடாது.
- விண்ணப்பிப்பதற்கு சொந்தமாக வீடு/ நிலங்கள் எதுவும் இருக்கக்கூடாது.
VITHAVAI UTHAVI THOGAI எவ்வளவு தொகை?
- இந்த பென்ஷன் தொகைக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மாதம் மாதம் ஏழை விதவைகளுக்கு 1000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
- இந்த தொகையை வங்கிகளின் மூலமாக மட்டுமல்லாது அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ் மூலமாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.
VITHAVAI UTHAVI THOGAI எப்படி விண்ணப்பிப்பது?
இந்த விதவைகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
நேரிடையாக எந்த விண்ணப்பமும் எந்தத் துறையினரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
VITHAVAI UTHAVI THOGAI தேவையான ஆவணங்கள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொழுது கீழ்கண்ட ஆவணங்களை சரியாக இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் புகைப்படம் (photo)
- குடும்ப அட்டை (ration card)
- ஆதார் அட்டை(aadhar vard)
- கணவரின் இறப்பு சான்றிதழ் (husband’s death certificate)
- விதவை சான்றிதழ் (widow certificate)
- பேக் புத்தகம் (bank pass book)
- Self-declaration form
- Aadhar consent form
VITHAVAI UTHAVI THOGAI PROCEDURES (AFTER APPLYING)
- நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்த பின் முதலில் அந்த விண்ணப்பத்தை VAO ஆராய்வார்.
- அவரிடமிருந்து அது RI-க்கு சென்று சேரும்.
- RI-யும் கையெழுத்திட்ட பின், SSS தாசில்தா ரிடம் அந்த விண்ணப்பமானது இறுதி உத்தரவிற்கு செல்லும்.
- இவர்கள் மூவரும் விண்ணப்பங்களை ஆராய்ந்த பின் விதவை உதவித் தொகைக்கான தங்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ள பட்டத்தை உறுதி செய்யும் ORDER COPY-யை ஆன்லைனில் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விதவை உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை:
STAGE 1:
முதலில் tnega என்று GOOGLE-லில் டைப் செய்து கொள்ளவும்.
இந்த அரசாங்க PORTAL-லில் சென்று LOGIN என்பதை கிளிக் செய்யவும்.
ஏற்கனவே ACCOUNT வைத்திருப்பவர்கள் USERNAME PASSWORD கொடுத்து, பின் captcha code சரியாக கொடுத்து LOGIN செய்து உள்நுழையலாம்.
புதிதாக அக்கவுண்ட் ஓபன் செய்ய நினைப்பவர்கள் new user? sign up என்ற ஆப்ஷனை கிளிக் செய்வதன் மூலம் tnega -வில் தங்களுக்கென ஒரு அக்கவுண்டை கிரியேட் செய்து கொள்ளலாம்.
STAGE 2:
WEBSITE-ல் இடதுபுறம் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் revenue department என்பதை click செய்யவும்.
அவற்றில் நிறைய திட்டங்கள் இருக்கும், அதில் destitude widow pension scheme என்பதை கிளிக் செய்யவும். அடுத்ததாக proceed என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்து register can என்பதை கிளிக் செய்யவும். இவற்றில் document type-ல் விண்ணப்பதாரரின் பெயர், பாலினம் ,பிறந்த தேதி, உறவுமுறை, தந்தை தாய் பெயர், மதம், கல்வித்தகுதி, சாதி, வட்டம், மாவட்டம், கிராமம், நிரந்தர வீட்டு முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை கொடுத்து generate otp என்பதை கிளிக் செய்யவும்.
உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும் அதை கொடுத்து ரெகிஸ்டர் செய்து கொள்ளவும்.
இப்பொழுது CAN NO ல் செய்த மொபைல் எண்ணை கொடுத்து விவரங்களை குறிப்பிட்ட பின் SEARCH ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.
அப்படி செய்தால் தங்களின் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, அனைத்தும் வரும் அதனை கிளிக் செய்யவேண்டும்.
அடுத்து உங்களுடைய MOBILE NO தரவேண்டும்.
அருகில் இருக்கும் ஜெனரேட் OTP என்பதை கொடுத்த பிறகு உங்களுக்கு மீண்டும் ஒரு OTP வரும் அந்த ஓடிபி எண்ணை கொடுத்து CONFIRM OTP என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
அடுத்து PROCEED என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இப்படி செய்தபின் தங்களுக்கான APPLICATION FORM ஓபன் ஆகும்.
STAGE 3:
அப்ளிகேஷன் ஃபார்மல் MODE OF DISBURSMENT என்பதில் பேங்க் /போஸ்ட் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பின் BANK DETAILS அனைத்தையும் சரியாக வழங்கவேண்டும்.
படிவத்தில் உள்ள இதர விவரங்களை சரியாக குறிப்பிட்ட பின் வருமானம் குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை விவரங்களையும் சரியாக கொடுக்க வேண்டும் .
அடுத்து என்பதில் அடுத்து ப்ராப்பர்ட்டி டீடைல்ஸ் அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்தபின் SUBMIT ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
STAGE 4:
இதன்பின் கேட்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தையும் அப்லோட் செய்ய வேண்டும்.
போட்டோ 50 KB ,மற்ற ஆவணங்கள் அனைத்தும் 200 KB இருக்க வேண்டும்.
SELF DECLARATION FORM மற்றும் AADHAR CONCENT FORM ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து அதில் கையெழுத்திட்டு பின் பதிவேற்றி அப்லோட் செய்ய வேண்டும்.
STAGE 5:
அப்லோட் செய்த பின் MAKE PAYMENT கிளிக் செய்து பத்து ரூபாய் அப்பிளிகேஷன் FEE செலுத்த வேண்டும்.
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங், மூலமாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்.
சரியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தினால் ஒப்புகைச் சீட்டு வரும்.
அந்த ஒப்புகைச் சீட்டில் உள்ள எண்ணை வைத்து தங்களின் விண்ணப்ப நிலையை APPLICATION STATUS அறிந்து கொள்ளலாம்.
ஆதரவற்ற விதவை சான்றிதழ் குறித்தும் ஆதரவற்ற விதவைகளுக்கு வழங்கப்படும் பென்சன் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்தும் இப்பொழுது கண்டோம்.
தங்களுக்கு தெரிந்த அத்தகைய ஏழை பெண்கள் இருப்பின் அவர்களுக்கு இத்தகவலை தெரியப்படுத்தவும்.
To Read this Article in ENGLISH : CLICK HERE
Tamilnadu government pension scheme 2022
👍Destitute widow pension scheme
👍1000rs per month
👍Want to know how to apply?
Kindly,click the below link👇👇
https://www.findtnjobs.com/how-to-apply-widow-pension-scheme-in-tamilnadu/