இந்தியா முழுவதிலும் 1.5 லட்சத்திற்கும் மேலான தபால் நிலையங்களில் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி வருடத்திற்கு 6.6 % சதவீத வட்டியானது இந்த தபால் துறை மாத வருமான திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தபால் துறை மாத வருமான திட்டத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று இதில் நீங்கள் பெறப்போகும் தொகைக்கு எந்த ஒரு வரியும் பொருந்தாது.
மற்ற வங்கி கணக்குகளை போலவே இந்த கணக்கிலும் உங்களுக்கு தேவையான ஒரு நபரை வாரிசாக நிர்ணயம் செய்யலாம்.
நிலையான வருமானத்தை நீங்கள் எதிர்பார்க்கும் நபராக இருந்தால், தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கக்கூடிய புத்திசாலித்தனமான முடிவுகளில் ஒன்றாகும்